குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உங்களுக்கு காய்ச்சல், சளி, தொண்டை வலி அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் உள்ளனவா?

25.03.2020 இந்த அறிகுறிகள் உங்களிடம் இருப்பதால் நீங்கள் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் இவை தீயநுண்மி(கொரோனா வைரசு) தொற்று ஏற்பட்டதற்கான அறிகுறிகளு மாகும். எனவே உங்கள் அன்புக்குரியவர்களைப் பாதுகாக்க பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும். இந்த நாட்டின் குடிமகனாக இது உங்கள் தேசியப் பொறுப்பாகும்.

மருத்துவத் தேவை தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்.

வீட்டில்:முடிந்தால் உங்களுக்காக ஒரு தனி அறையை ஒதுக்கிக் கொள்ள வேண்டும்.

உங்களுக்கும், உங்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையில் குறைந்தபட்சம் ஒரு மீட்டர் தூர இடைவெளியைப் பேண வேண்டும்.

உங்களால் முடிந்தால் தனியான கழிப்பறை / குளியலறையைப் பயன்படுத்துங்கள். அவ்வாறு இல்லாது நீங்கள் ஒரே குளியலறையை / கழிப்பறையைப் பயன்படுத்துவதாக இருந்தால் அவற்றின் கதவு கைப்பிடி, குழாய் டப் போன்றவற்றை சோப்பு மற்றும் தண்ணீர் என்பவற்றினால் கழுவுவதை உறுதி செய்து கொள்ளவும்.

வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முடிந்தவரை குறைக்கவும்.

நீங்களும் வீட்டிலுள்ள மற்றவர்களும் அடிக்கடி மற்றும் முழுமையாக கைகளை கழுவ வேண்டும் (குறைந்தது 20 விநாடிகளுக்கு).

உணவுத் தட்டுகள், தேநீர் கோப்பைகள், கண்ணாடி கோப்பைகள், துவாய் மற்றும் படுக்கை விரிப்புக்களை மற்றவர்களுடன் பகிர் வேண்டாம்.

தும்மும்போது அல்லது இருமும்போது எப்போதும் உங்கள் வாயை ஒருமுறை மட்டும் பாவிக்கக்கூடிய தாளினால் அல்லது முழங்கையின் உட்புறத்தால் மூடவும். பயன்படுத்திய தாள்களை மூடி கொண்ட ஒரு குப்பைத் தொட்டியில் இட்டு பாதுகாப்பாக அகற்றவும்.

நீங்கள் பயன்படுத்திய அனைத்து முகமூடிகள் மற்றும் கையுறைகளை ஒரு மூடி கொண்ட குப்பைத் தொட்டியில் இட்டு அப்புறப்படுத்துங்கள்.

மிக முக்கியமாக, கடந்த இரண்டு வாரங்களுக்குள் நீங்கள் வெளிநாட்டில் இருந்திருந்தால் அல்லது கடந்த இரண்டு வாரங்களுக்குள் COVID-19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் ஒரு நபருடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தால், உடனடியாக அப்பகுதியின் பொது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவும்.

மருத்துவ சிகிச்சை குறித்த மேலதிக ஆலோசனைகளுக்கு 1999 என்னும் தொலைபேசிச் சேவையை அணுகலாம்.

சிகிச்சைக்காக போக்குவரத்து ஒழுங்குகளைச் செய்ய, 1990 அவசரமருவவண்டி(ஆம்புலன்சு) சேவையைத் தொடர்பு கொள்ளவும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.