குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

பறையர் ஆதிக்கம் கண்டிப்பாக இந்த தகவல்களை சாதி பதிவாக நினைத்து பகிராமல் விட்டு விடாதீக .. தமிழர்கள்

அறியவேண்டிய வரலாறு! பரையர் ஆதிக்கம் 1785

16.03.2020 இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சிக்கு எதிரான முதல் சுதந்திர போராட்டம் என்ற உடன்

அனைவரும் 1857 ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகத்தையும்

அதில் பிஹாரி பிராமணன் “மங்கள் பாண்டே”வையும் தான் குறிப்பிடுவர்

நம் பாட புத்தகத்திலும் அப்படி தான் கற்பிக்கப்படுகிறது

ஆனால் அதற்கெல்லாம் பல ஆண்டுகள் முன்னரே தமிழ் நாட்டில் பரையர்கள் வீரியமாக

ஆங்கிலேயர்களின் ஆட்சியை எதிர்த்து ஆங்கிலேயருக்கு வரி செலுத்த மாட்டோம் என

1785 இல் தொடங்கி பல ஊர்களில் தொடர் போராட்டங்களை செய்துள்ளனர்

இந்த போராட்டங்களை

“பறையர் புரட்சி 1785”

என்றே ஆங்கிலேயர்கள் தங்கள் ஆவணங்களில் பதிவு செய்துள்ளனர்

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் மதராஸ் மாகாண “விவசாய பரையர்களிடம்”

அதிகப்படியான வரியை வசூலித்தனர்

இதற்க்கு கட்டுப்படாத பறையர்கள்

1785 இல் “ரிச்சர்ட் டைட்டன்” என்ற அதிகாரி பூந்தமல்லிப் பகுதிக்குப் போனபோது

அங்கே பெருந்திரளாகப் கூடி நின்று அவரை சிறை பிடித்தனர். அந்த பெரும் கிளர்ச்சியில் தனது உயிருக்கு ஆபத்து வந்துவிட்டதெனவும், சேத்துப்பட்டிலிருந்த தமது அலுவலகம் தாக்கப்படும் எனவும் டைட்டன் அஞ்சினார்.

அதனால் ‘கம்பெனி’ சிப்பாய்களை அனுப்பும்படி கவர்னரிடம் வேண்டுகோள் விடுத்தார் இது ஆவணமாக உள்ளது

அதன் பின் பெரும்பரைச்சேரியில் (அன்றைய மதராசு) கருங்குழி என்ற ஊரைச் சேர்ந்த “பெரியதம்பி” என்ற பறையர் தலைவர்..

பறையர் சமூகத்தவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி, அவர்கள் எல்லோரையும் சென்னையை நோக்கிப் புறப்பட்டு வரச்சொல்லியதும் பெருந்திரளாக அந்தச் சமூகத்தினர் மதராசில் கூடியுள்ளனர்.

அந்த கடிதம் “பரையர் கடிதம்” என்றே ஆங்கிலேய ஆவணங்களில் பதிய பட்டுள்ளது. அவரின் அறிக்கையை கேட்டு கிளர்ச்சியில் ஈடு பட்ட பரையர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஆங்கிலேயர் திணறி உள்ளனர்

அதன் பின் 1796இல் ஆங்கிலேய கலெக்டர் “Lionel Place” என்பவர் விதித்த வரி முறைகளுக்கு கட்டுப்படாமல் பறையர்கள் தொடர் போராட்டங்கள் செய்த்தனர்

இந்த தொடர் போராட்டங்கள் பல இடங்களுக்கு பரவியது பல ஊர் பரையர்கள் வரி கட்ட மாட்டோம் என்று கிளர்ச்சியில் ஈடுபட்டனர்

பல ஆண்டுகள் தொடர்ந்த இந்த போராட்டத்தை

“பறையர் புரட்சி 1795” என்று ஆங்கிலேய ஆவணங்கள் குறிப்பிடுகின்றன

இதில் முக்கிய பங்காற்றியவர்கள்

பூந்தமல்லிப் பகுதியில் பறையர் சமூகத்தவர் மத்தியில் தலைவர்களாக மதிக்கப்பட்ட

பேட்டையா,

பூந்தமல்லி குட்டி,

மாங்காடு கொம்பன்,

பம்மல் கண்ணையன்

ஆகியோர் ஒருங்கிணைத்து வழிநடத்தியதாக இங்கிலாந்து (பிரிட்டிச்) ஆவணங்கள் கூறுகின்றன.

பல ஆண்டுகள் தொடர்ந்த இந்த போராட்டங்கள் பின்னாளில் ஆங்கிலேயர்களால் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது

வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிரான இப்படி ஒரு புரட்சி இருப்பதையே இங்கு உள்ளவர்கள் மறைத்து உள்ளனர்

தமிழர்களின் சுதந்திர போராட்ட வரலாற்றை

இலாவகமாக மறைத்து விட்டு

பிகாரி பிராமணன் மங்கள் பாண்டேவையும்

தெலுகு கெட்டி பொம்முவையும் முதன்மைப் படுத்தி உள்ளனர்

இனியாவது நம் வரலாற்றை மீட்டு நாம் ஆவண படுத்துவோம்