குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

நச்சுநுண்மி(கொரோனாவைரசு) பற்றி அறிந்து கொள்வோம்

13.02.2020 இன்று உலகளாவிய ரீதியில் மிகுந்த பேசுபொருளாக இருப்பது இந்த நச்சு நுண்மி(கொரோனா வைரசு) ஆகும். இதன் தாக்கத்தைப் பற்றியும் பரவலைப் பற்றியும் சற்று விவரமாகப்பார்ப்போம்.

 

நச்சு நுண்மியானது சீனாவில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திலிருந்து முதல் முதலாக மனிதர்களுக்கு தொற்றி உள்ளதென கண்டறியப்பட்டது.

அன்றிலிருந்து ஒரு மாத காலத்திற்கு உட்பட்ட காலத்தில் இன்றுவரை 15க்கும் மேற்பட்ட நாடுகளில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இலங்கையிலும் ஒரு சீன நாட்டுப்பெண்மணி அடையாளம் காணப்பட்டுள்ளார். காலத்துக்குக் காலம் புதுவிதமான வைரஸ்கள் மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்தி இருந்தாலும் இந்த நச்சு நுண்மி பற்றிய அபரிமிதமான பயம் எம்மத்தியில் காணப்படுகின்றது.

இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இன்றைய காலத்தில் காணப்படுகின்ற உறுதிப்படுத்தப்படாத செய்தி வழங்குனர்களாளும் சமூக வலைத்தளங்களிலும் பரப்பப்படும் செய்திகளால் பொதுமக்கள் குழப்பி விடப் படுகின்றார்கள் என்பதே உண்மை.

நச்சு நுண்மி தொற்றின் அறிகுறிகள் என்ன?

இது சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் ஒரு வைரஸ் ஆகும் எனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருமல், சளி, தொண்டை வலி மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறிகளாகும். சில நேரங்களில் அது நிமோனியாவையும் ஏற்படுத்தலாம். ஆனால் பொதுவாக எந்த ஒரு சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் நச்சு நுண்மி (வைரசு) காய்ச்சலுக்கும் இவை பொதுவான அறிகுறிகளாகும்.

நச்சு நுண்மி(கொரோனா வைரசு) எவ்வாறு பரவுகின்றது?

இவை முதன்முதலில் விலங்குகளிலிருந்து மனிதருக்கு பரவியிருந்தாலும் தற்பொழுது மனிதனிலிருந்து மனிதனுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இவை காற்றின் மூலம் பரவுவது உறுதிப்படுத்தப்படாத போதிலும் droplets எனப்படும் சிறு துணிக்கைகள் மூலமும் சூழலில் தொற்றுக்கு உள்ளாகிய பொருட்களில் இருந்தும் மனிதர்களுக்கு பரவுகின்றது.

அதாவது இந்நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய சளியானது நேரடியாக மற்றவருக்கு படும் பொழுதோ அல்லது அவர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர் பயன்படுத்தும் பொழுதோ சுகதேகியான மற்றவருக்கு பரவ வாய்ப்புள்ளது. சூழலில் சுயாதீனமாக காணப்படும் வைரஸ் ஆனது இரண்டு தொடக்கம் மூன்று நாட்கள் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

நச்சு நுண்மி கொரோனா அதிக தொற்றுள்ள நச்சுநுண்மி  (வைரசு )வகையா?

இல்லை. இந்த நச்சு நுண்மி (வைரசானது) ஒருவரிடமிருந்து சராசரியாக 1.5 தொடக்கம் 3 நபர்களுக்கு தொற்றும் ஆற்றலைக் கொண்டது. ஆனாலும் நம் எல்லோராலும் அறியப்பட்ட அம்மாள் நோயானது ஒருவரிடமிருந்து 10 தொடக்கம் 12 நபர்களுக்கு தொற்றக் கூடியது.

இந்த நச்சு நுண்மி (வைரசு)ஆனது எப்பொழுது தொற்றும் தன்மை கொண்டது?

ஒருவருக்கு கொரோனா வைரசு தொற்றியதிலிருந்து 2 தொடக்கம் 14 நாட்களுக்குள் அவருக்கு இந்நோய்க்கான அறிகுறிகள் தோன்றும். ஒருவரால் இந்த காலப்பகுதிகளிலும் மற்றும் அவருக்கு இருமல் காணப்படும் பொழுதும் மற்றவருக்கு இந்தநச்சு நுண்மி (வைரசு) பரப்பக்கூடிய வாய்ப்புகள் உள்ளது. அதாவது ஒருவர் தனக்கு நோய் உள்ளது என்பதை அறிய முதலே மற்றவருக்கு அதை பரப்பும் வாய்ப்பு உள்ளது.

கொரோனா நச்சுநுண்மி (வைரசானது) மற்றைய வைரசுகள் போன்று ஆபத்தானதா?

இல்லை. இது 2003 ம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட சார்ஸ் SARS எனப்படும் வைரஸ் காய்ச்சலை விட குறைந்தளவான இறப்புக்களையே ஏற்படுத்துகின்றது. அதாவது சார்சு வைரஸின் மரண வீதமானது 9.6% ஆகும் அதேவேளை கொரோனா வைரசின் மரண வீதம் 2.2% ஆகும். இது பொதுவாக முதியவர்களையும் நாள்பட்ட நோயினை உடையவர்களுக்குமே மரணத்தை ஏற்படுத்தும். சுகதேகியான ஒருவருக்கு வெறும் தடிமன் காய்ச்சல் போலவே வந்து செல்லும்.

கொரோனா நச்சு நுண்மி (வைரசு) இலங்கையிலும் பாதிப்பை ஏற்படுத்துமா?

இன்று காணப்படும் சர்வதேச தொடர்புகள் மூலம் இலங்கையிலும் இதற்கான பாதிப்புக்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும் இலங்கை அரசாங்கத்தாலும் சுகாதாரத்துறையினராலும் மேற்கொள்ளப்படுகின்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இந்த வைரஸால் எமக்கு ஏற்பட இருக்கின்ற பாதிப்புகள் குறைவடையும் அல்லது கட்டுப்படுத்தப்படும்.

ஏற்கனவே நாடளாவிய ரீதியில் 12 வைத்தியசாலைகள் இதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

ஒருவருக்கு கொரோனா வைரசு தொற்று ஏற்பட்டுள்ளது என சந்தேகிக்கும் பொழுது என்ன செய்ய வேண்டும்?

அவர் உடனடியாக முகக் கவசத்தை அணிய வேண்டும். இதன் மூலம் மற்றவர்களுக்கு இந்த வைரசு பரவுவதை தவிர்க்க முடியும். அத்துடன் அந்த நபர் அருகிலுள்ள வைத்திய சாலைக்குச் சென்று சிகிச்சை முறையினை ஆரம்பிக்க வேண்டும். அவருடைய குடும்ப உறுப்பினர்களும் முக கவசத்தை அணிவதன் மூலம் தொற்றில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

கொரோனா வைரசுக்கு (நச்சு நுண்மி) உரிய சிகிச்சை முறைகள் உள்ளதா?

இல்லை. இந்த வைரசுசை அழிப்பதற்கு உரிய மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஒரு நோயாளியின் குணம் குறிகளுக்கு ஏற்றவாறு சிகிச்சை முறைகள் வைத்தியர்களால் வழங்கப்படும்.

நச்சு நுண்மி (கொரோனா வைரசில்) இருந்து எம்மை எவ்வாறு பாதுகாக்கலாம்?

இது Droplets எனப்படும் துணிக்கைகள் மூலம் பரவும் ஒரு நச்சு நுண்மி(வைரசு) என்பதால் சுகதேகியான ஒருவர் முகக் கவசங்கள் அணிவதன் மூலம் இதிலிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ள முடியாது. மாறாக சிறந்த சுகாதாரம் முறைமையினை பேணுவதன் மூலம் எம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். அதாவது சிறந்த கை சுகாதாரத்தைப் பேணுவதன் மூலமும் (கைகளை நன்கு சவர்க்காரம் கொண்டு கழுவுவதன் மூலம்) அல்லது நோய் தொற்று உள்ள ஒருவர் சளி மற்றும் உமிழ்நீரை சுகாதார முறைப்படி அகற்றுவதன் மூலமும் தொற்றிலிருந்து மற்றவர்களைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

இந்த நோய் ஏற்பட்ட ஒருவரும் அவருடன் கூட இருக்கின்ற உறவினர்களும் கண்டிப்பாக முகக் கவசங்களை அணியவேண்டும்.

இந்த நோயானது சீனாவில் ஏற்பட்டது போன்ற பாரிய தொற்றுக்களை இலங்கையிலும் ஏற்படுத்துமா?

இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஏனென்றால் தற்போது சீனாவில் ஒரு குளிர்கால நிலையாகும். இதன் பொழுது இந்த வைரசின் பரவல் அதிகமாக காணப்படும். ஆனால் இலங்கையில் தற்போது காணப்படுகின்ற வெயிலுடன் கூடிய காலநிலையால் இந்த நச்சு நுண்மி  ஆனது பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளது. மற்றும் சுகாதாரத்துறையினர்த விழிப்புணர்வுடன் இருப்பதனாலும் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

எனவே பொதுமக்கள் இந்த கொரோனா வைரசை கண்டு அளவுக்கதிகமாக ஐயம் கொள்ளத்தேவையில்லை. சுகாதார அமைச்சினாலும் மற்றும் தகுதியான ஊடகங்களாலும் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை பின்பற்றுவதன் மூலம் இன் நோயினை நாம் அனைவரும் தைரியமாக எதிர்கொள்ளலாம்!

Dr. விச்ணு சிவபாதம்.

MBBS, DCH, MD Paediatrics

குழந்தை நல வைத்திய நிபுணர்.

கற்றுக்கொடுத்தல் வைத்தியசாலை மட்டக்களப்பு.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.