குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

வரலாற்று ஆய்வு, நிரூபணங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு முயற்சி: வரவுசெலவு உரை குறித்து சு.வெங்கடேசன்

07.02.2020...இதுவரை நடத்தப்பட்ட வரலாற்று ஆய்வையும், அதன் நிரூபணங்களையும் மாற்றி அமைக்க மத்திய அரசு முயல்வதாக மார்க்சிசுட் கம்யூனிசுட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார். இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது வரவுசெலவு தாக்கலின்போது கூறிய வரலாற்றுக் கருத்துகளையும் அவர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் மதுரை தொகுதி எம்.பியும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவருமான சு.வெங்கடேசன் கூறியதாவது:

''நிதித்துறை அமைச்சர் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் பல அதிர்ச்சிகள் வெளியாகி உள்ளன. இம்முறை பொருளாதாரம் தாண்டி வரலாறு பண்பாடு என்று தனது தாக்குதல் எல்லை விரிவாக்கப்பட்டுள்ளது.

‘சரசுவதி சிந்து நாகரிகம்’ எனப் புதிய பெயர் சூட்டி இதுவரை நடந்த ஆய்வுகளையும், நிரூபணங்களையும் முற்றிலும் மாற்றி அமைக்க நினைக்கிறது மத்திய அரசு. வேத பண்பாட்டினை சரசுவதி நாகரிகம் எனப் பெயர் சூட்டி அதனை சிந்துவெளி நாகரிகத்தின் மீது பொருத்த தொடர்ந்து இந்துத்துவா வாதிகள் முயற்சி செய்து வருகிறார்கள்.

அந்த முயற்சியின் அதிகாரபூர்வமான குரலாக மத்திய நிதியமைச்சரின் குரல் இன்று அவையில் எதிரொலித்தது. நாகரிகத்தின் அடிப்படை அடையாளம் செங்கலும், பானையும் கண்டுபிடித்ததில் இருக்கிறது. ஆனால், வேதத்தில் செங்கலையும் பானையையும் செய்பவர்கள் அசுரர்கள் என்று வசைபாடப்படுகிறார்கள். இந்த நிலையில், தங்களை நாகரிகவாதி என எப்படி இந்துத்துவாவாதிகள் உரிமை கொண்டாட முடியும்?

இவர்களுக்கும் சிந்துவெளிப் பண்பாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? சடங்குகளுக்காக ஆங்காங்கே கற்களையும் சுடாத செங்கலையும் பயன்படுத்தி கோமம் செய்து, பின்னர் கலைத்துவிட்டுப் போகிற பழக்கத்தைத்தான் வேத காலத்தில் பார்க்க முடிகிறது.

சடங்குகள் பற்றிய வேத இலக்கியக் குறிப்பில் சதபத பிராமணத்தில் அக்னிசேனா என்ற சடங்கிற்குத்தான் முதன் முதலில் செங்கலைப்பற்றிய குறிப்பே வருகிறது. அதற்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி நாகரிகத்தில் சுட்ட செங்கல் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.

இன்றைய கீழடி கண்டுபிடிப்பிலும் சுட்டசெங்கல் பயன்பாட்டினைப் பார்க்க முடியும். எனவே, இதுவரை நிரூபிக்கப்பட்ட வரலாற்றினைப் புராணங்களோடு இணைத்து இவர்களின் கதைகளை தேசத்தின் வரலாறாக மாற்ற முயற்சிக்கப்படுகிறது.

மத்திய அரசின் பாரம்பரிய தொல்லியல் இடங்களாக இன்று அறிவிக்கப்பட்டுள்ள ஆதிச்சநல்லூரின் பின்னணியையும் விலக்கிவிட்டுப் பார்க்க முடியவில்லை.

ஒளவை தனது ஆத்திச்சூடியில் “மண் பறித்து உண்ணேல்” என்பாள். வரலாறும், பண்பாடும் கொண்ட மனிதக்கூட்டத்தின் வாழ்விடந்தான் மண். அதனை ஒரு போதும் அதிகாரத்தால் பறித்துவிட முடியாது''. எப்படித்தான் தில்லு முல்லு பண்ணினாலும் தமிழைப்பின்தள்ள முடியாது!

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்தார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.