குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

புலியா? சிங்கமா? இடைனோசர் போலழிவார்! மூளை உள்ளோர் எலிகள் போல்தொடர்வார் வாழ்வார்.

09.01.2019....எதை அமெரிக்கா எதிர்பார்த்ததோ அதை ஈரான் கொடுத்துள்ளது... ,ஈரானின் இந்த ஏவுகணை தாக்குதலால் இடிரம்புக்கோ அல்லது உலகை ஆளும் கார்பரேட்டுக்களோ எந்த வித இழப்பும் இல்லைஇந்த ஏவுகணை விழுந்து 80 அமெரிக்க ஏழை வீரர்கள் இறக்கும் போது70 வயது இடிரம் தன் 30 வயது இளம் மனைவியுடன் மகிழ்சியாக இரவு  சாப்பிட்டுக்கொண்டிருந்திருப்பார்.

இதை இதைத்தான் எதிர்பார்த்தேன் என்று மனைவிக்கு கண்ணை சிமிட்டி அந்த அசிங்கமான சிரிப்பு சிரித்திருப்பார்

அவர் டூவீட்டே சொல்லுதே யார் உயிர் இழப்பை பற்றியும் அவர் கவலைப்படல்லைனு

ஈரான் இந்த முட்டாள் தனமான தாக்குதலால் என்ன அடைந்தது தானும் ஒரு வீரன்தான் என்று உலக அரங்கில் காட்டியதை தவிர

இப்பொழுது இதையே சாக்காக வைத்து ஈராக்கில் இன்னும் படைகளை அமெரிக்கா குவிக்க போகிறது...

ஆயுத கம்பனிகளுக்கு ஆர்டர்கள் போகும்...எல்லாம் அமெரிக்க மக்கள் வரி பணத்தில்தான்.

உலகத்திலேயே அதிக பலமுள்ள இராணுவத்தை

அணு ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்காவுடன் மோதுவது தற்கொலைக்கு சமன் இதைத்தான் சதாம் உசேன் செய்தார்

ஏறக்குறைய அவரும் தற்கொலைதான் செய்துகொண்டார் மானத்தோடு.

அமெரிக்காவுடன் மோதுவது புத்திசாலித்தனமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்வேன்

கொஞ்சம் இடார்வினின் தத்துவத்தை மாற்றி யோசியுங்கள் survival of the fiitest சரியா

அந்த தியரி சரி என்றால் உலகை ஒரு காலத்தில் ஆட்சி செய்த டைனசோர்கள் எல்லாம் இப்ப எங்கே...அவர்கள்தானே அன்றய fittest

பேரழிவை அந்த உலகின் பலமுள்ள இடைனசோர்களால் எப்படி சமாளிக்க முடியாமல் போனது

அங்கே பாருங்க நம்ம எலிகளின் வாழும் தந்திரத்தை

டைனசோர் பூமியை அட்டகாசமாக ஆளும் காலத்தில் சந்து பொந்துகளுக்குள் கம்னு குடி இருந்த எலி போன்ற விலங்குகளே இன்று மனிதனாக பரிணாமம் பெற்று உலகை ஆளுகின்றன.

இப்ப சொல்லுங்க எது புத்திசாலித்தனம் எது வாழ்வியல் முறை என்று

இந்த எலி டூ மனித பரிணாம வளர்ச்சிக்கும் ஒரு முடிவு இருக்கு அது போல அமெரிக்காவுக்கும் ஒரு முடிவு இருக்கு

அதுவரை பொறுத்திருந்து தக்கநேரத்தில் எனஇருத்தல் இப்போதைக்கு ஈரான் போன்ற நாடுகளுக்கு புத்திசாலித்தனம்

அன்று உலகை ஆண்ட ரோமன் கிரேக்க சாம்ராய்யங்கள் எல்லாம் இன்று எங்கே..

அதே போல அமெரிக்க சாம்ராச்யத்துக்கும் முடிவு இருக்கு

அது இயற்கை பேரழிவால் வரலாம்

உலக மகா போர் வரலாம் பெரு நோய்களால் வரலாம்

ஏலியன்களால் வரலாம்...

வரும் எப்ப வரும் என்பதுதான் கேள்வி அதுவரை கம்னு இருப்பதே நமக்கு நல்லது.

ஏன் சொல்றேன் என்றால் வரலாற்றை பாருங்க

1500 ஆண்டுகள்? அமெரிக்காவுக்கு வெள்ளையர்கள் துப்பாக்கி பீரங்கியோடு படையெடுத்து போகும் போது அமெரிக்க பூர்வகுடி சிவப்பு இந்தியர்கள் அவர்களை எதிர்த்து சும்மா கத்தி, அம்பு வைச்சுண்டு சண்டை போடாமல் இருந்திருந்தால் இன்றும் அமெரிக்காவில் கணிசமான செவ்விந்தியர்கள் உயிரோடு இருந்திருப்பார்கள்

பலமுள்ள வெள்ளைக்காரனை மானத்தோடு எதிர்த்தார்கள் விளைவு உலக வரை படத்திலேயே இல்லாமல் போனார்கள்...

மில்லியன் கணக்கில் வாழ்ந்த செவ்விந்தியர்கள் இன்று காலணி (zoo) போல ஏதோ ஒரு காட்சிசாலையில் அங்கொன்றும் இங்கொன்றுமாக வாழ்கிறார்கள்

கருப்பர்களுக்கு கிடைக்கும் மரியாதை கூட பூர்வகுடி செவ்விந்தியர்களுக்கு இல்லை

இதே நிலைதான் அவுசுதிரேலிய பழங்குடியினருக்கும்.

பலமுள்ளவனை எதிர்த்ததால் இல்லாமல் போய் விட்டார்கள்

2ம் உலகப்போரில் யப்பான் அமெரிக்கா தன்னை விட பலமுள்ளவன் என அறிந்ததும் சரணாகதி அடைந்த வேகத்தை பார்த்தீர்களா அதுதான் புத்திசாலித்தனம் என்பது...இலட்சக்கணக்கான அப்பாவி யப்பானியர்களை ஒரு நிமிடத்தில் கொன்ற அமெரிக்காவை பழிவாங்கனுமா இல்லை இருக்கிறவர்களாவது வாழனுமா.

ஏன் நம்ம வீரபாண்டிய கட்ட பொம்மன் கூட வெள்ளைக்காரனை எதிர்த்து மஞ்சள் அரைத்து கொடுத்தாயா வசனம் பேசாமல் இருந்திருந்தால்  உயிரோடு தன்னும் இருந்திருப்பார்...மானமுள்ள பெண்களுக்கு பாதுகாப்பாகதன்னும் ஓரமா வாழ்ந்து விட்டு போயிருக்கலாம்.

மானம் ரோசம் வீரம் எல்லாம் எம்மை விட பலவீனமாவர்களுடன்தான் எல்லோரும் காட்டுகிறார்கள்...காட்ட முடியும்

மாவீரர்கள் சேகுவேரா, பிடல் காசுரோ போல யாராவது ஒருத்தர் எப்பவாவது வெளிப்படுவார்கள் அதுவும் அன்றய இரசியாவின் புண்ணியத்தால்

இன்று இரசியாவும் அமெரிக்காவும் ஒன்றுதான் ....அம்பானியை போல ஆயிரம் கார்பரேட் முதலைகளை உருவாக்கி விட்டு இன்னொரு அமெரிக்காவாக இரசியா இருக்கிறது

1950களில் போல கொள்கைக்காக போரிடும் எண்ணத்தில் இரசியா இல்லை அமெரிக்கா போல இலாப நோக்கம் மட்டுமே.


 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.