குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, தை(சுறவம்) 27 ம் திகதி திங்கட் கிழமை .

குழந்தை சுயித் இந்தியாவின் விஞ்ஞான தொழிநுட்பம் குறித்த இறுமாப்பை இந்தியாவின் வல்லரசுக் கனவை கேள்விக்

28.10.2019 ஆரம்பத்தில் நடந்தது என்ன? 68 மணித்தியாலங்கள் சுயித்தின் அருகில் இருந்த சிறுவனின் பரபரப்பு வாக்குமூலம்!  குழந்தை சுயித் இந்தியாவின் விஞ்ஞான தொழிநுட்பம் குறித்த இறுமாப்பை இந்தியாவின் வல்லர சுக்கனவை கேள்விக்கு உட்படுத்தியுள்ளான்.

68 மணித்தியாலங்கள தாண்டியும் குழந்தை சுயித்தை நெருங்க முடியாது திணறுகின்றனர் மீட்பு குழுவினர்.நவீன தொழிநுட்பம், விண்வெளி பயணங்கள், ஆயுத உற்பத்தி, போர்க்கப்பல், போர்விமான தயாரிப்புகள் என வல்லரசு நாடுகளுக்கு சவால் விடும் வகையில் வளர்ந்திருப்பதாக கூறப்படும் இந்தியா தன்னை இந்துசமுத்திர பிரந்தியத்தின் வல்லரசு நாடாக காண்பிக்க எடுத்த முயற்சிகள் அனைத்தும் சுயித் என்ற குழந்தையை வேறும் 100 அடி ஆழத்தில் இருந்து மீட்க முடியாது மூன்று நாட்களாக திணறி வரும் சம்பவத்தின் ஊடாக அனைத்தும் பொய்யாகி போயுள்ளது. வெளி உலகம் இந்தியாவை கேலி செய்யும் நிலை உருவாகியுள்ளது.

கண்முன்னே போகும் ஒரு குழந்தையின் உயிரை காப்பாற்ற முடியாத இந்தியாவின் தொழிநுட்பம் குறித்து உலகமே கேள்வி கேட்கும் நிலை உருவாகப் போகிறது.

குழந்தை சுயித் இந்தியாவின் விஞ்ஞான தொழிநுட்பம் குறித்த இறுமாப்பை இந்தியாவின் வல்லரசுக் கனவை கேள்விக்குறியாக்கி உள்ளது.

ஏன் சுயித்தின் பக்கத்து வீட்டு சிறுவன் கேட்கும் கேள்விகளும் அவனது கருத்துக்களும் இந்தியாவின் தொழிநுட்ப அறிவு குறித்த ஐயங்களை தோற்றுவித்துள்ளது

சிறுவன் சுயித் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் இருக்கும் இன்னொரு 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் செய்தியாளர்களிடம் ஒரு விடயத்தை கூறுகின்றான்.

அந்த வீடியோ காட்சியை பார்க்கும் போது "டியிட்டல் இந்தியா" குறித்து பல கேள்விகள் எழுகின்றன.

அந்த சிறுவன் கூறியதை கீழே பதிவிடுகின்றோம்.

செய்தியாளர் ஒருவர் அந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுவனைப் பார்த்து கேட்கின்றார் இந்த மீட்பு பணி ஆரம்பித்த நேரத்தில் இருந்து நீ ஒரு இடத்தில் நிற்காமல் எல்லா விடயங்களையும் கவனித்து கொண்டு திரிகிறியே எதற்காக என்று?

அதற்கு அந்த சிறுவன் கூறுகின்றான் இங்கே மீட்பு பணியில் இருப்பவர்கள் கூட சில தவறுகள் விடுகின்றார்கள் என்று,

அதற்கு செய்தியாளர் சொன்னார் நீ சிறுவன், அவர்கள் பெரியவர்கள் அவர்கள் செய்வது தவறு என்று எப்படி உனக்கு தெரியும் என்று?

அதற்கு அந்த சிறுவன் சொன்னான் நான் சிறுவன் தான் ஆனால் எனக்கு இந்த விடயத்தில் நிறைய அனுபவம் உள்ளது,

எனது வீடு சுர்யித் வீட்டிற்கு அருகில் தான் உள்ளது, எனது தந்தை இந்த ஆழ்துளை கிணறுகள் தோண்டும் தொழிலையே செய்து வந்தார் இப்போது அந்த தொழிலை கைவிட்டு விட்டார் அவர் அந்த தொழில் செய்யும் காலத்தில் கிணறு தோண்டும் பொழுது உள்ளே உபகரணங்கள் ஏதும் விழுந்து விட்டால் அதை வெளியே எடுக்க சில உத்திகளை கையாளுவார்.

அது விழுந்த பொருள் இருக்கும் ஆழத்தை பொறுத்தே எந்த உத்தியை கையாள வேண்டும் என்று முடிவெடுப்பார். சாதாரணமாக ஒரு 20 அடிக்குள் விழுந்த பொருள் இருக்குமாயின் நானே அந்த கிணற்றினுள் தலைகீழாக சென்று விழுந்த பொருளை எடுத்து வருவேன், அதை தான் ஆரம்பத்தில் செய்ய நானும் எனது தந்தையும் முடிவெடுத்தோம் ஆனால் இங்கே இருந்தவர்கள் அதற்கு சம்மதிக்கவில்லை என்றான்.

மேலும் அவன் கூறுகையில் சிறுவன் சுர்யித் கிணற்றில் விழுந்த உடனே அவனுடைய தாயார் ஓடி வந்து எனது தந்தையிடம் கூறினார் நாங்கள் ஓடி வந்து பார்க்கும் போது அவன் குறைந்தது 10 அடி ஆழத்தில் தான் இருந்தான் அவன் மூச்சு விடும் சத்தமே வெளியே இருந்த எங்களுக்கு கேட்டது, உடனே எனது தந்தை ஓடி சென்று கயிறு போன்ற தேவையான பொருட்கள் எடுத்து வர கொஞ்சம் தாமதமாகி விட்டது ஏனெனில் அவர் அந்த தொழிலை கைவிட்டதால் பொருட்கள் சரியான இடத்தில் இருக்கவில்லை, ஒரு வழியாக எல்லாம் எடுத்து வருவதற்குள் சிறுவன் கிட்டத்தட்ட 20 அடிக்கு சென்று விட்டான் காரணம் கிணற்றில் உட்பகுதி மழையில் ஊறி ஈர தன்மையில் இருந்ததால் வழுக்கும் தன்மை இருந்து, அப்போது நான் கிணற்றினுள் தலைகீழாக இறங்க நானும் தந்தை தயார் ஆனோம்.

ஆனால் அங்கு இருந்தவர்கள் விடவில்லை, பிறகு யேசிபி இயந்திரம் மூலம் பக்கவாட்டில் தோண்ட ஆரம்பித்தார்கள் அப்போது கூட எனது தந்தை சொன்னார் இயந்திரத்தின் அதிர்வால் சிறுவன் இன்னும் கீழே போக வாய்ப்பு உள்ளது என்று யாரும் அதை பொருட்படுத்தவில்லை அதனால் தான் இவ்வளவு கடினமாக உள்ளது என்றான்.

சரி இப்போது உனது தந்தை எங்கே உள்ளார் என்று கேட்க அவன் சொன்னான் இங்கே இருக்கும் வல்லுநர்களின் முட்டாள் தனமான வேலைகளை பார்த்தால் எனக்கு கோபம் வருகிறது நான் இங்கு இருக்கவில்லை என்று வீடு சென்று விட்டார் என்றான்.

ஆரம்பத்தில் இருந்தே எல்லாம் தவறாகத் தான் நடைபெறுகின்றது.

தற்போது இறைவனிடம் மாத்திரம் தான் உள்ளது சுயித்தின் உயிரை காப்பாற்றும் சக்தி.குழந்தை சுயித்திற்காக வழிபாடுகள் செய்வோம்.

குழந்தை சுயித்திற்காக வழிபாடுகள் செய்வோம்.

முள்ளிவாய்க்கால் முதல் குழந்தை சுயித்வரை

காப்பாற்ற நாதியில்லாத தமிழகமே!  27.10.2019

தட்டாம் தரையில் துளை போட்டாய்
உனக்கு கிடைத்ததைப் பெற்றாய்
உள்ளே விழுந்த குழந்தை தனையும்
மீட்டெடுக்கும் வலுவையும் பெற
மறந்தாய் துடித்துப்பெற்ற தாயை
துடிக்கவே விட்டுவிட்டாய் ஊடகத்தில்
போட்டு உலகிற்கு காட்டுகின்றாய்
வெட்கித்தலை குனிய ஏன் மறந்தாய்

குழாயின் வாயை மூடியிருந்தால்
வாய்விட்டலறமுடியாது விம்மாமல்
இருந்திருப்பாய் அறிவால் ஆனபொறிகளை
குவித்து காட்சிப்படுத்துகின்றாய்
இருபத்து ஆறு அடியிலிருந்து நுாறு
அடிக்கு தள்ளி அரைகுறை உயிராக்கி
இன்னும் தோண்டுகின்றாய் அ படித்த
உடையார் கதையாய் விடை எழுதுவாய்.

சுயித் மீண்டு வரவேண்டும் என்ற
வேண்டுதல்கள் மெய்படவேண்டும்
அடிமை அடிமைக்கு உதவமுடியாது
என்று பெரியார் சொன்ன நிலையில் தான்
தமிழகம் இப்பவம் இருக்கின்றது
என்பதனை முள்ளிவாய்கால் முதல்
இன்று வரை ஏமாந்தே தொடர்கின்றாய்!
தமிழகமே நீ எழுந்து நடப்பது எப்போது!!

பூநகரி  பொன்னம்பலம் முருகவேள் ஆசிரியர்  சுவிற்சர்ணலாந்து.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.