குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, தை(சுறவம்) 27 ம் திகதி திங்கட் கிழமை .

பொருளாதார சீர்திருத்தங்களைக் கண்டித்து சிலியில் 10 இலட்சம் பேர் போராட்டம்

எழுத்தாளர் Bella Dalima   26.10.2019 பகிர்தல்:    Colombo (News 1st) சிலி நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கண்டித்தும், அந்நாட்டு பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் இலட்சக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக போராட்டங்கள் இடம்பெறுகின்றன. அரசின் நிர்வாகத்தில் உள்ள பொது போக்குவரத்து கட்டணங்கள் பலமடங்காக உயர்த்தப்பட்டன. மேலும், ஊதியம் மற்றும் ஓய்வூதியம், மருத்துவமனை கட்டணங்கள் ஆகியவற்றிலும் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. இந்த கட்டண உயர்வு மற்றும் சீர்திருத்தங்களை கண்டித்து சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோ உள்ளிட்ட பல பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தொடருந்துகள் மற்றும் தொடருந்துநிலையங்களை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் பல இடங்களில் வன்முறையில் ஈடுபட்டதால் தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன. இதனால் ஆத்திரமடைந்த மக்கள் தொடருந்துகள் மற்றும் தொடருந்து நிலையங்களை தாக்கி சூறையாடினர். போராட்டக்காரர்களுக்கும் கா.துறையினருக்கும் இடையில் வெடித்த மோதலில் சிலர் காயமடைந்தனர். இதையடுத்து, சிலி நாட்டில் அவரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

பிரதமர் செபாசுடின் பினேரா பதவி விலக வேண்டும் என 10 இலட்சத்திற்கும் மேலான மக்கள் போராட்டம் நடத்தினர். தலைநகர் சாண்டியாகோவில் உள்ள நகர மண்டபத்தில் பொருளாதார சீர்திருத்தங்களைக் கண்டித்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் 8 இலட்சத்து 20 ஆயிரம் பேர் பேரணி நடத்தினர்.

இது குறித்து சிலி ஆளுநர், வரலாற்று முக்கியத்துவமிக்க நாள், அமைதியான பேரணி, புதிய சிலி உருவாவதற்கான கனவை இது பிரதிபலிக்கிறது, என தெரிவித்துள்ளார்.


 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.