குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

"சிந்துச் சமவெளி மக்கள் பேசியது முற்கால திராவிட மொழி"

13.09.2019 சிந்துச் சமவெளியில் வாழ்ந்த மக்கள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமையன்று செல் இதழிலும் சயின்சு இதழிலும் வெளியான கட்டுரை பலரைத் தொந்தரவுக்குள்ளாக்கியிருக்கிறது.ராக்கிகடியில் கிடைத்த எலும்புக்கூட்டை வைத்து செய்யப்பட்ட ஆய்வில், சிந்துச் சமவெளி மக்களிடம் சுடெப்பி புல்வெளிகளில் இருந்து வந்தவர்களின் மரபணுத் தொகுதிகள் இல்லை - என்ற முடிவு எட்டப்பட்டிருக்கிறது. சிந்துவெளி காலத்திற்குப் பிறகு இந்தியாவிற்கு வந்த சுடெப்பி புல்வெளிகளைச் சேர்ந்தவர்களால்தான் இந்தோ - யுரேப்பிய மொழிகள் இங்கு வந்தன இந்த முடிவு முன்வைத்தது.

இந்த முடிவு வெளியானதும் இந்தியா முழுவதும் அவரவருக்கு ஏற்படி இந்த முடிவை திரித்து முன்வைத்தனர். அதுகூடப் பரவாயில்லை. தில்லி ஊடகங்கள் பல இதனை அப்படியே மாற்றிவெளியிட்டன.

ஆரியர்கள் இந்தியாவுக்கு வெளியிலிருந்து இந்தியாவுக்கு வந்தனர் என்ற தியரி பொய்யாகிவிட்டது என தலைப்பிட்டு கட்டுரைகளை வெளியிட்டனர்.

ஆனால், அட்லாண்டிக், சுமித்சோனியன் போன்ற வெளிநாட்டு ஊடகங்கள் இதனைச் சரியாக வெளியிட்டன. குறிப்பாக சுமித்சோனியன் "The authors suggest Indo-European languages may have reached South Asia via Central Asia and Eastern Europe during the first half of the 1000s B.C., a theory evidenced by some genetic studies and similarities between Indo-Iranian and Balto-Slavic languages." என்று குறிப்பிட்டது. அதாவது, "இந்தோ- ஐரோப்பிய மொழிகள் மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா வழியாக தெற்காசியாவுக்கு வந்திருக்கக்கூடும். இது கிறிஸ்துவுக்கு முந்தைய முதல் ஆயிரம் ஆண்டுகளின் முற்பாதியில் நடந்திருக்கலாம். இந்தோ - இரானியன் மற்றும் பால்டோ - ஸ்லாவிக் மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமை, சில மரபணு ஆய்வுகளின் மூலம் இந்த கருத்தாக்கம் எட்டப்பட்டது" எனக் குறிப்பிட்டது.

இந்த ஆய்வில் ஈடுபட்ட டெக்கான் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் வசந்த் சிண்டேவே தன் முடிவுகளில் இருந்து மாறுபட்டு கருத்துத் தெரிவித்தார். "கரப்பர்கள் சமசுகிருத மொழியை பேசினார்கள்" என்று சொன்னார்,
ஆனால், அமெரிக்க மரபணு ஆய்வாளரான ரிசித், இதை ஏற்கவில்லை. ஆரியர்கள் வெளியிலிருந்து வந்தார்கள். வட இந்தியாவில் வசிக்கும் எல்லா இனக் குழுவிலும் சுடெப்பி புல்வெளி மக்களின் மரபணு இருக்கிறது. அதன் மூலம்தான் இந்திய - ஐரோப்பிய மொழிகள் பரவியிருக்கின்றன என்றார்.

அதாவது, சிந்துச் சமவெளி மக்களிடம் சுடெப்பி புல்வெளி மக்களின் மரபணு இல்லை. ஆனால் தற்போதைய வட இந்திய மக்களிடம் அந்த மரபணுக் கூறுகள் இருக்கின்றன. ஆகவே, சிந்து சமவெளிக் காலகட்டத்திற்குப் பிறகுசுடெப்பி புல்வெளிகளில் இருந்து இந்தியாவுக்கு இடப்பெயர்வு நடந்திருக்கலாம். அதனால், சிந்து சமவெளி நாகரீகம் என்பது ஆரிய நாகரீகமோ, வேதகால நாகரீகமோ இல்லை என்பதுதான் முடிவு.

வேறு சில முக்கியமான முடிவுகளும் எட்டப்பட்டன. அதாவது “A possible scenario combining genetic data with archaeology and linguistics is that proto-Dravidian was spread by peoples of the IVC [Indus Valley Civilisation],” இதன் அர்த்தம், மரபணு தகவல்கள், அகழ்வாராய்ச்சி, மொழி ஆய்வு ஆகியவற்றின் மூலம் சிந்துச் சமவெளி மக்கள் பேசியது முற்கால திராவிட மொழி என்ற முடிவுக்கு வரலாம்.

மேலும், தெற்காசிய மக்களின் மரபணுக்களுக்கு அதிக அளவில் பங்களிப்புச் செலுத்தியது சிந்துச் சமவெளி மக்களின் மரபணுவே.

இந்த முடிவுகளை ஊடகங்கள் எப்படி தங்கள் வசதிக்கு திரித்து வெளியிட்டன என்பது குறித்து சுக்ரோலில் விரிவான ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. ரொம்பவும் அரிதான கட்டுரை அது. அகழ்வாராய்ச்சி, வரலாறு போன்றவற்றில் அரசியல் புகுந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நிகழ்கால சாட்சி அந்தக் கட்டுரை.

கட்டுரைக்கான இணைப்பு முதல் சுட்டியில். வேறு சில இணைப்புகளையும் கீழே பார்க்கலாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.