குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கைக்குத்தரிசியை உணவாக்கொள்ளுங்கள் உடல் நலம்நன்றாகும்!

05.09.2019-இன்று கேரள மக்களால் அதிகளவில் உண்ணப்படும் சிகப்பரிசியின் (ப்ரவுண் ரைஸ், மட்டை அரிசி) பிறப்பிடம் தமிழகத்தில் குறிப்பாக மதுரை யில் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.1982 ல் இங்கிலாந்து கெல்த் யுனிவர்சிட்டி இந்தியாவில் ஒரு ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் அதிக வாழ்நாளை கொண்ட மக்கள் வாழும் இடம் எது? எப்படி? பூநகரி அரிசியும் அத்தகையதே!

இரண்டு ஆண்டு ஆய்வின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்ட மாவட்டம் "மதுரை". மதுரை மக்கள் நீண்ட ஆயுளுடன்வாழ்வது கணக்கிடப்பட்டது. என்ன காரணம்?அங்கு விளைவிக்கப்பட்ட சிகப்பரிசி எனும் அரிசி வகைதான் காரணம். அதையே உட்கொண்டதுதான் காரணம் என்பதை ஆய்வின் முடிவில் அறிந்தனர்.

சிகப்பரிசி. உரம் தேவையில்லை. இயற்கையாக இருக்கும் ஒருவகை ஆண்டி ஆக்சிடண்ட் காரணமாக பூச்சிகள் நெருங்குவதில்லை. எனவே பூச்சி மருந்து அவசியமில்லை. தண்ணீர் மற்றவைகளை விட குறைந்த அளவு போதுமானது. விளைச்சல் சாதாரண அரிசியை விட நான்கு மடங்கு அதிகம்.

"மாடு கட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று,

யானை கட்டி போரடித்த அழகான தென்மதுரை"

என இலக்கியம் பேசுகிறது இந்த அரிசியை பற்றி. யானை மெதித்து நெல் எடுக்கும் அளவுக்கு விளைச்சல் அதிகமாம்.

கவளம் என்றால் (யானைக்கு தரப்படும் ஒரு வாய் உருண்டை உணவு 1 கவளம் ஆகும். ஒரு ஃபுட்பால் அளவு). ஒருவேளைக்கு யானை 8 முதல் 12 கவளம் தரப்படும். ஆனால் மதுரையில் சிகப்பரிசியில் செய்த 4 கவளம் யானைக்கு போதுமானதாம்.

நார்சத்து மிக அதிகம், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது, செம்மண்ணில் விளைந்த ஒரு பொக்கிஷம். எனவே தான் இன்றும் மதுரையில் 90 வயதுக்கு மேல் வீட்டுக்கு ஒரு பாட்டி ஐம்புலன்களும் நன்கு செயல்பட உழைத்து கொண்டிருக்கும். வயதளவில் மட்டும் வயதானவர்களை இன்றும் மதுரையில் காணலாம். அவர்களுக்கு சுகர் என்றால் என்னவென்றே தெரியாது. இரத்தக்கொதிப்பா அப்டினா என்பார்கள். தைராய்ட் னா சாப்பிடும் தயிரா என்பார்கள். குறைந்தது 6 முதல் 12, 15 பிள்ளைகள் பெற்றிருப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி போடும் வழக்கம் கிடையாது. மருத்துவமனை இன்று வரை செல்லாதவர்கள் அவர்கள்.

ஆனால் இந்தநிலை எப்படி ஏன் மாறியது.?

உரம், பூச்சி மருந்தை அதிகளவில் தன் நாடுகளில் தயாரித்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யும் இங்கிலாந்து, லண்டன், அமெரிக்கா, யேர்மனி, பிரான்சு போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இச்சிகப்பரிசியினால் தன் பொருட்களுக்கு அவசியம் குறைவதால், மக்களை வெள்ளை அரிசியின் மோகத்தை தூண்டி சிகப்பரிசியை சரித்திரத்தில் மறைத்தனர்.

நம் பாரம்பரியத்தை மறந்து நாமும் இன்று மருத்துவமனை கதியாய் இருக்கிறோம். தாய் வீட்டில் பிறந்ததால் முன்பு அடிக்கடி பிறந்த வீடுகளுக்கு சென்று அங்கு விளைந்ததை பெருமைக்காக வாங்கி வந்த பரம்பரை. இன்று மருத்துவமனை யில் பிறந்ததால் அடிக்கடி பிறந்த வீடான மருத்துவமனை சென்று அங்கிருந்து மருந்துகளை வாங்கி வந்து உட்கொள்ளும் அவலம் இந்த பரம்பரையில் மாறிவிட்டது நம் அவலநிலை.

சிகப்பரிசி இன்றும் கிடைக்கிறது. விலை 80ரூபாய் வரை. மீண்டும் இதையெல்லாம் அதிகளவு விளைவிக்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நடவடிக்கை எடுக்காது. காரணம் வெளிநாட்டு உரம், பூச்சி மருந்து இறக்குமதியில் அரசுக்கும் கப்பம் பெருமளவில் செல்கிறது.

மனிதனின் ஆயுள் பொதுவாக 120. ஒவ்வொருவரும் 40வருடங்கள் என 40x3=120. மூன்று தலைமுறை கண்டவர்கள் நம் முன்னோர்கள். 120 வருடங்கள் நம் பாட்டனும் பூட்டனும் வாழ்ந்திருக்கிறார்கள். வாழந்தது போதும் என தானாகவே "வடக்கிருந்து"(தனக்காக ஒரு சமாதி கட்டி வடக்கு நோக்கி அதில் அமர்ந்து இறைசிந்தனையில் மூச்சை அடக்கி உயிர் துறத்தல்) உயிர்விட்டவர்கள் ஏராளம். அவர்களே இன்று நம் குலதெய்வங்களாக பலரால் வணங்கப்படுகிறது. ஆய்வு செய்து பாருங்கள் பேச்சியம்மா, ஆண்டியப்பன், பெரியகருப்பன், அங்கம்மா, இப்படிப்பட்ட குலதெய்வங்கள் சாஸ்த்திரத்தில் இலக்கியங்களில் இல்லை. பிறகு எப்படி குல தெய்வங்கள் ஆனார்கள்? நம் குலத்தை சிறப்பாக வழிநடத்திய வாழவைத்த முன்னோர்கள் அவர்கள்.

பாரம்பரியம் அறிவோம்!

புராதான உணவுகளை உண்போம்!

வாழ்வதற்காக உண்!

உண்பதற்காக வாழாதே!

உங்கள் பிள்ளைகளுக்கு ஏ பி சி டி யை விட

நம் பாரம்பரியத்தை முதலில் அறியச்செய்யுங்கள்.

வரலாறுகளை விதையுங்கள்.

வீரபாண்டிய கட்டபொம்மன் வேலுநாச்சியாரை உங்கள் பிள்ளைகளுக்கு பள்ளி அஸைன்மென்ட் காக மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள். "மகனே/மகளே, அவர்களெல்லாம் சில தலைமுறைகளுக்கு முந்தையவர்கள் தான். அவர்கள் வாழ்ந்த அதே ஊர்களில் தான் நாமும் இருக்கிறோம். அவர்களுக்கு இருந்த அதே வீரமும், திறமையும் நமக்குள்ளும் இருக்கிறது மறவாதே! " அவர்கள் உண்ட உணவு இதுதான், வாழ்க்கைமுறை இதுதான் என இயற்கையையும், தன்னம்பிக்கையையும், வீரத்தையும் பிள்ளைகள் மனதில் விதையுங்கள். நிச்சயம் பழைமை திரும்பும். மனிதன் 120 ஆண்டுகள் மீண்டும் உடல்உளநலத்ததுடன் வாழ்வான்.

பிரியமுடன் உங்கள் உடன்பிறவாத அன்புச்சகோதரி எசு.அகல்யா

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.