குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சுவிற்சர்லாந்து தலைநகர் பேணில் காரிக்கிழமை(சனி) சிவன் கோயில் தேர்த்திருவிழா! வள்ளுவரும் வீதியுலா தமி

23.08.2019-ழுடனும் இறையுடனும் இணைவோம்! 24.08.19  -சுவிற்சர்லாந்து பேர்ண் நகரில் தமிழ் மொழியில் வழிபாடுநிகழும் சிவன்கோயிலில் (ஞானலிங்கேச்சுவரர்) கோயிலில் எழிமாறல் ஆண்டுக்கான (தி.ஆ 2050 )திருவிழா நடைபெற்று வருகின்றது.

 

நாளை 24.08.2019  காரிக்கிழமை காலை 9.30 மணி முதல் சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்று  11 மணியளவில் எழுந்தருளி வழிபாடுகள் இடம்பெற்று திருமுறைகள் திருக்குறள்கள் ஓதப்பெற்று  தேருலாவர இறைவன் வெளிவீதி வரவுள்ளார்.

தமிழால்பாடு என்ற இறைவனுடன்  உலகத்தோர் போற்றும் தமிழுக்கு பெருமைதந்த பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் தந்த ஐயன் திருவள்ளுவர் உருவச்சிலையினை பல்லக்கில் ஏற்றி பேர்ண் வள்ளுவன் பாடசாலை மாணவமாணவிகளுடன்  ஏனைய பாடசாலை  மாணவமாணவிகளும் இளையோர்களும் வீதியுலா கொண்டுவந்து தமிழுக்கு சிறப்பு செய்கின்றனர்.

சிறுவர்கள் காவடி எடுத்தும் பெண்கள் பால் செம்புகள் எடுத்தும் தீச்சட்டி ஏந்தியும் தமது நேர்த்திக்கடன்களை  நிறைவேற்றுதல்  நிகழ்வுகள்  இடம் பெறும்.

வடக்கு வீதியில்யில் ஆடற்கலை நிகழ்வுகள் சிலவும் இடம்பெற்று  தேர் கோயில் வாசலை நடுப்பகல் மதியம் ஒருமணியளவில் வந்துசேரும்.

இந்தவேளை சிவனடியார்கள் வழிபட்டு மனமகிழ்வினைப்பெற்று  நிறைவாக இடம்பெறும் அன்னதானத்திலும்  இணைந்து நல்ல திருவிழாவில் இணைந்த மகிழ்வில்   மகிழ்வான வாழ்விழனைப்பெறலாம்.

திருவிழா நடைபெறும் கோயில் பிரதான வீதியில் பிறநாட்டு மக்களின்  முன்னிலையில் இடம்பெறுவதால் எமது பழக்கவழக்கங்கள் அவர்களால் அவதானிக்கபபடும் நிலையிருப்பதால்   கோயில் வாசலில் இறைவன் எழுந்தருளும்போதும் தேரில்  இருத்தி ஏற்பாடுகள் செய்யும்போது  பிரதான வீதியின்  போக்குவரத்திற்கு இடைஞ்சலாக வீதியின் குறுக்கு மறுக்காகச் செல்வதை தவிர்த்தல் பானங்கள் அருந்திய ஏதனங்கள் குவளைகளை உணவு உண்ட ஏதனங்கள் தட்டுக்களை உரிய இடங்களில் கழிவு இடும் பைகளில் இட்டு(பேருந்து தரிப்பிடத்திற்கு  அண்மியமாக வீசுவதை தவிர்க்கும்படியும்) வேண்டி எமது நாட்டு மக்களின் பெருமமைதனை வெளிப்படுத்த  ஒத்துழைக்குமாறும் குமரிநாடு இணையம் அன்பாக தாழ்மையுடன் வேண்டிநிற்கின்றது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.