குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

மலேசியத் தமிழாசிரியர்களுக்கான இலக்கியப் பயிலரங்கம் ,கோலாலம்பூர்

25.06.2019-மலேசியத் தமிழ்வளம் தந்த மகிழ்ச்சி

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மலேசியத் தமிழாசிரியர்களுக்கான

இலக்கியப் பயிலரங்கம் ,கோலாலம்பூர்

'டைனசுடி 'விடுதி (Hotel Dynasty)

அரங்கில் 2015 சூன் 11-13 மூன்று

நாள்கள் நிகழ்ந்தன. தஞ்சைத்தமிழ்ப்பல்கலைக்கழகப் பேரா.தெ.

வெற்றிச்செல்வனும் நானும்

கருத்தாளர்களாகப் பங்கேற்றோம்.

நாடு கடந்து வாழும் தமிழோடும்

தமிழாசிரியர்களோடும் கலந்துபழகும்

வாய்ப்பு ,பெருமகிழ்வைத் தந்தது.

பயிலரங்கப்பொறுப்பாளர்கள்

திரு.இராசன்ஆறுமுகம் (அரசன்) , திரு.

மூர்த்தி முதலியோர் நன்றிக்குரியோர்.

 

மலேசியஅமைச்சர்கள்திரு.கமலக்கண்ணன்,

திரு.சுப்பிரமணியம் இருவரும்

பயிலரங்கில் பங்கேற்றுச் சிறப்பு

சேர்த்தனர். சிறப்பு விருந்தினர்களோடு

உணவருந்துவது மலேசிய அமைச்சர்கள்

வழக்கம். எங்களோடு இயல்பாகத்

தமிழ், தமிழர் செய்திகளைப் பேசியபடி

உணவருந்தி மதிப்பளித்தனர்.

 

பயிலரங்கு நிறைவுற்றபின் , மலேசியாவின்

பல மாநிலங்களிலும் நான் சொற்பொழி

வாற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள்

சூன்21வரைதொடர்ந்தன.

 

மலேசியத்தமிழ்நெறிக்கழகத்தலைவர்

திரு.இரா.திருமாவளவன் அவர்கள் ,

சிறப்பாகத் திட்டமிட்டு நிகழ்ச்சிகளை

அமைத்திருந்தார்.

பத்துமலை, கசாங்கு, கோலகுபுபாரு,

மேரு ,கிள்ளான்,செரம்பான்,தெளாக்கு

எனத் தொடர்ந்த நிகழ்ச்சிகளைத்

தொடர்ந்து நினைவுகூர்கிறது மனம் !

 

ஐயா வளவன்- சாந்தி குடும்பம்,

திரு.அருள்முனைவனார் -

திரு.மாரியப்பனார் குடும்பம்,

தெள்ளியர்ஒன்றியம்திரு.எழில்குடும்பம்,

பாடகர் கதிரவன் குடும்பம் ,

'ஓம்தமிழ்' தொலைக்காட்சி

திரு முகிலன்- முல்லை குடும்பம் ,

வழக்கறிஞர் கனல்வீரன்- தமிழரசி

குடும்பம் -முதலான தமிழ் தழைத்த

குடும்பங்கள் காட்டிய அன்பும் பரிவும்

வியப்பானவை!

 

திரு.செல்வம் - கலா இணையரின் அன்பு

ததும்பும் இல்லம் , அவர்கள் குடும்பத்தில்

ஒருவராய் என்னை ஏற்றுப் புரந்தது.

அவர்களின் மக்கள் மாவேந்தன்,

புகழ்வேந்தன்,நிலவேந்தன் மூவருக்கும்

நான் தாத்தா ஆனேன். மூவரின்

தாத்தாவும் பாட்டியும் தந்த உபசரிப்பில்

திளைத்தேன்.

 

மலேசியாவில் கோ.சாரங்கபாணியார்,

குறிஞ்சிக்குமரனார், அ.பு.திருமாலனார்,

மணி வெள்ளையனார்,இர.ந.வீரப்பனார்,

தனிநாயக அடிகளார் , சீனி நயினார்

முகமது -முதலிய முன்னோடியர்

ஊன்றிய தமிழ்ப்பயிர் வளர்ந்து

செழித்துள்ளதற்காகத் தமிழுலகம்

மகிழ்ச்சியடையலாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.