குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சிவபூமியின்_வரலாறு

11.03.2019-சூரபத்மனின் மனைவியின் பாட்டனாரின் பெயர் #துவட்டா இவர் நெடுங்காலம் பிள்ளைச் செல்வம் இல்லாதிருந்தவர். ஈற்றில் #திருக்கேதீச்சரத்தில் தவம் செய்து புத்திரப் பேறு பெற்று அங்கேயே வாழ்ந்தவர் அவரால் அந்நகரம் உண்டாக்கப்பட்டதால் அது #மகாதுவட்டா எனப்பட்டு பின் #மாதோட்டம் ஆனது.

போர்த்துக்கேய வரலாற்றாசிரியராகிய #குவிறோஸ் என்பவர் எழுதிய இலங்கைச் சரித்திரம் பற்றிய நூலில் கி.மு. 13 ஆம் நூற்றாண்டுக்கு முன் திருக்கோணேச்சரக் கோயில் கட்டப்பட்டதென கூறும் கல்வெட்டு இருந்ததாக கூறுகின்றார்

விசயன் இலங்கைக்கு வருவதற்கு முன்னரும் பின்னரும் இந்நாட்டில் சைவம் செழிப்புற்றிருந்ததாக வண.#வலபொல_இராகுல என்பவர் எழுதிய #இலங்கையின்_பெளத்த_வரலாறு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது

திரு.யே.டபிள்யூ.#ரெனற் என்பவர் எழுதிய இலங்கைச் சரித்திர நூலில் இலங்கையின் ஆதிக்குடிகள் சைவர்களே எனக் கூறுகின்றார்

19 ஆம் நூற்றாண்டின் புகழ்வாய்ந்த கல்விமான்களில் ஒருவராகிய் சேர்_வில்லியம்சு_யோன்சு என்பவர் ஈழத்து பல்வேறு குடிகளின் மொழி இலக்கியம் சமயம் தொல்பொருட்கள் முதலானவற்றை ஆராய்ந்து ஈற்றில் முடிந்த முடிபாக இப்பெரியார் கூறுவது எமது எண்ணத்துக்கு எட்டாத காலந்தொட்டு ஈழத்தில் சைவமக்கள் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பதே

உருகுணை தேசிய பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட கிறிசுதுவுக்கு முற்பட்ட காலத்ததெனக் கணிக்கப்பட்ட கல்வெட்டில் சிவநகர் என்ற இடத்தின் பெயர் குறிக்கப் பட்டிருக்கக் காணலாம்

விசயன் இலங்கைக்கு வந்து அரசாட்சியை ஏற்றதும் பழைய சிவாலயங்களைத்திருத்தினான் என்றும் நான்கு திக்கிலும் சிவாலயங்களை அமைத்தான் என்றும் யாழ்ப்பாண_வைபவமாலை கூறுகிறது

வியயனுக்குப் பின்னர் ஆட்சி செய்த பாண்டு_வாசுதேவன்,அபயன், பண்டுகாபயன் போன்ற மன்னர்களும் சைவசமயத்தையே பின்பற்றியுள்ளனர்

கி.பி 4ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மகாசேனன் பெளத்தம் தவிர்ந்த ஏனைய மதங்களினை தடுப்பதற்காக சிவாலயங்களைத் தகர்த்தெறிந்ததாக கூறப்படுவதால் அதற்கு முன்னரே சைவம் இருந்ததென உறுதியாக கூறலாம்

கி.பி 5ம் நூற்றாண்டில் #குளக்கோட்டன் எனும் சோழமன்னன் இலங்கையை ஆட்சி செய்ததாகவும் அவன் திருக்கோணேச்சரம் மற்றும் முன்னேச்சர கோயில்களை வழிபட்டு வந்ததாகவும் அவ்வாலயங்களில் நித்திய நைமித்திய பூசைகள் சிறப்புற நடைபெற ஏற்பாடு செய்ததாகவும் கூறப்படுகிறது இவனே கந்தளாய் குளத்தை அமைத்தான் என்றும் கூறப்படுகிறது ....தொடரும்..