குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பூநகரியின் தொன்மையில் புதிதாகத் தோன்றிய மகா சிவலிங்கம்! தமிழ்மொழி வழிபாட்டில் குவிந்த மக்கள்…!!

06.03.2019-பூநகாி மண்ணித்தலை பகுதியில் சோழா்களால் அமைக்கப்பட்ட சிவன் கோயிலை பாதுகாக்கும் வகையில் பூநகாி மண்ணித்தலைச்சோழீச்சரம் எனப்பெயர் சூட்டப்பட்டு நேற்று முதல்நாள் புதிதாக மகா சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கின்றது.மிகப் பழமையான மண்ணித்தலை சிவன்கோயில் நீண்டகாலமாக புனரமைப்பு செய் யப்படாமல் பராமாிப்பின்றி காணப்படுகின்றது.

இந்நிலையில், இந்தக்கோயில் சூழலை ஆய்வு செய்த யாழ்.பல்கலைக்கழக தொல்லியல்துறை, அது சோழா் காலத்தில் கட்டப்பட்ட சிவன் ஆலயம் என்பதை உறுதிப்படுத்தியுள்ளதுடன், அந்தகோயில் தொல்லியல் முக்கியத்துவம்வாய்ந்த பகுதி எனவும் உறுதிப்படுத்தியிருக்கின்றது. இதற்கு முந்திய பெருங்கற்பண்பாட்டு தொல்லியல் சாதனங்களும் பூநகாியில் பல  இடங்கயில்  கிடைத்துள்ளது. இந்நிலையில், அந்த கோயிலை பாதுகாக்கும் வகையில், சைவ மகாசபையினால் மகா சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு நேற்று முன்தினம் சிவராத்திாி நாளில் பூசை வழி பாடுகளுடன் திறந்துவைக்கப்பட்டது. நன்றி

 

நியுஸ் இலங்கா-செய்தி இலங்கை இணையத்திற்குநன்றிகள்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.