குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கடைசி வரை மறுத்த மாவை… விக்கியின் கேள்வியால் கடுப்பான செல்வம்: கிளிநொச்சி போராட்டத்தின் சுவையான

சம்பவங்கள்! 27.02.2019- கிளிநொச்சியில் நேற்று (25) காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நடத்தப்பட்ட போராட்டம், பெரும் எழுச்சியாக நடந்து முடிந்தது. பல்வேறு மாவட்டங்களிலுமிருந்தும் பெருமளவானவர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மக்களால் தன்னெழுச்சியாக நடத்தப்பட்ட இந்த போராட்டத்தில், பெருமளவான மக்கள் கலந்து கொண்டது மட்டுமல்ல, தவிர்க்க முடியாமல் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டிருந்தனர். அதனாலேயே, நேற்று மோதலும் ஏற்பட்டது.

“கறுப்புச்சட்டை“ போட்டவர்களின் ரௌடித்தனம் சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

சரி, அது இருக்க நேற்றைய போராட்டத்தின் போது, அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் நீண்டநாளின் பின்னர் ஒன்றாக சந்தித்துக் கொண்டனர். அப்போது நடந்த சுவாரஸ்யங்கள், கூட்டம் பற்றிய சில தகவல்களை தருகிறோம்.

♦ காலையில் நேரத்திற்கே 7.30 அளவிலேயே க.வி.விக்னேஸ்வரன் கந்தசுவாமி ஆலய முன்றலிற்கு வந்து விட்டார். மாகாணசபைக்குள் அவருக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்த த.குருகுலராஜா, அ.பசுபதிப்பிள்ளை போன்றவர்களும் அங்கு நின்றனர். விக்னேஸ்வரனுடன் பேசுவதற்கு தயங்கியபடி ஒதுங்கி நின்றார்கள். பின்னர், விக்னேஸ்வரனே அவர்களை அழைத்து சுகநலன் விசாரித்தார்.

♦ ரெலோ கட்சியின் அனேக பிரமுகர்கள் நேற்று போராட்டத்திற்கு வந்திருந்தனர். தலைவர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்கள் எம்.கே.சிவாஜிலிங்கம், ஆ.புவனேஸ்வரன், சபா.குகதாஸ், விந்தன் கனகரட்ணம் ஆகியோரும், இதர பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

♦ புளொட் தலைவர் த.சித்தார்த்தன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் பொ.ஐங்கரநேசன், தமிழரசுக்கட்சியின் சி.சிறிதரன் எம்.பி, ஈ.பி.ஆர்.எல்.எவ் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் எம்.பி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

♦ சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மு.சந்திரகுமாரும், அவரது அமைப்பினரும் கலந்து கொண்டிருந்தனர். நேற்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிற்கு மதிய உணவு தயாரித்ததும் அவர்கள்தான். 1,700 பேருக்கு உணவு தயாரித்தார்கள்.

♦ செல்வம் அடைக்கலநாதனும், விக்னேஸ்வரனும் சந்தித்தபோது, பரஸ்பரம் சுகநலம் விசாரித்தார்கள். பின்னர், “நீங்கள் இந்த போராட்டத்தில் இப்போதுதான் கலந்துகொள்கிறீர்கள் போல“ என விக்னேஸ்வரன் கேட்டார். அவர் கேட்டதன் அர்த்தம்- காணாமல் போனவர்கள் கிளிநொச்சியில் நடத்திய அண்மைய போராட்டங்களை மையமாக வைத்ததாக இருக்க வேண்டும். போராட்டங்களில் கலந்து கொள்கிறேன் என செல்வம் சொல்ல, “இல்லையே, கந்தசுவாமி கோயிலின் முன்பாக கடைசியாக நடந்த போராட்டத்தில் காணவில்லையே“ என விக்னேஸ்வரன் சொன்னார். செல்வத்திற்கு இது பயங்கர கடுப்பு. நேற்றைய பேரணியில் இதை பலரிடமும் சொன்னார். அதாவது, இரண்டாவது போராட்டத்திற்கு வந்தவர், தன்னிடம் இப்படி கேட்டு விட்டாரே என!

♦ ரெலோ அண்மைக்காலமாக, ஐ.நாவில் இலங்கைக்கு காலஅவகாசம் வழங்கக்கூடாது என சந்திப்புக்களை நடத்தியது அல்லவா. நேற்றும், சந்திப்புக்களிற்கு ஏற்பாடு செய்தார்கள். புளொட் தலைவர் த.சித்தார்த்தன், தமிழரசுக்கட்சியின் சி.சிறிதரன் போன்றவர்களிடம், விரைவில் பேச்சு நடத்த அழைப்பு விடுத்தனர். தமிழரசுக்கட்சி அந்த ஆவணத்தில் கையெழுத்திடா விட்டாலும் அனுப்பப் போவதாக தெரிவித்தனர்.

♦ நேற்று கருப்புச்சட்டைக்காரர்கள் போராட்டத்தை குழப்பினார்கள். அது பற்றிய முழுமையான விபரத்தையும் நேற்றே தமிழ்பக்கம் வெளியிட்டிருந்தது. இன்று சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவியது. கூட்டமைப்பின் பல எம்.பிக்கள், மாகாணசபை உறுப்பினர்களுடன் கருப்புச்சட்டைக்காரர்கள் நிற்கும் படங்களை வெளியிட்டு, போராட்டத்தை குழப்ப அங்கு திட்டமிட்டார்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அது தவறானது. போராட்டத்தை குழப்பும் திட்டம் நேற்று- அங்கு தீட்டப்படவில்லை. ஒரே கூட்டணியின் பிரமுகர்களை, கட்சியின் இளநிலையினர் மரியாதை நிமித்தம் சந்திப்பது வழக்கம். அப்படித்தான் கூட்டமைப்பு பிரமுகர்களுடன் அங்கு பேசினார்கள். கூட்டமைப்பு எம்.பி யாராவது குழப்பத்தின் பின்னணியில் இருந்தால், அது 25ம் திகதிக்கு முன்னரே திட்டமிடப்பட்டிருக்க வேண்டும்.

♦ போராட்டத்திற்கு ஆனந்தசங்கரியும் வந்திருந்தார். தள்ளாத வயதிலும் பேரணியில் நடந்து வந்தார். மரியாதை நிமித்தம் விக்னேஸ்வரனை சந்தித்தார். இருவரும் பேசிக் கொண்டு வந்தனர். பகிடியாக பலதையும் பேசிக் கொண்டு பேரணியில் நகர்ந்தபோது, “ஒருகாலத்தில் கிளிநொச்சி ஆனந்தசங்கரியின் கோட்டை. கிளிநொச்சி என்றால் ஆனந்தசங்கரி… ஆனந்தசங்கரி என்றால் கிளிநொச்சி“ என விக்னேஸ்வரன் சொன்னார். ஆனந்தசங்கரி ஒரு புன்னகையுடன், “ஏன் இப்ப என்ன?“ என்றார். “இப்பவும் உங்கள் கோட்டையா?“ என ஆச்சரியப்படுபவரை போல விக்னேஸ்வரன் முகபாவனை காண்பிக்க, “இப்பவும் நான்தான்… துரோகி“ என்றார்.

♦ கிளிநொச்சி கந்தசுவாமி கோயிலில் இருந்து பேரணி சென்றது கனகாம்பிகை குளத்தில் இருந்த யுனிசெப் அலுவலகத்திற்கு. சுமார் 7 கிலோமீற்றர் தூரம். நடுவெயிலில் அவ்வளவு தூரம் பேரணியாக செல்வதில், காணாமல் போனவர்களின் உறவினர்கள் சிரமப்பட்டனர். அனேகமானவர்கள் வயதானவர்கள். பலர் வீதியோர மரங்களின் கீழ் இளைப்பாறி இளைப்பாறி செல்ல, ஒரு கட்டத்தின் பின் பேரணி குலைந்து சிறுசிறு கூட்டமாக நகர்ந்தது. என்றாலும், காணாமல் போனவர்களின் உறவினர்கள் எப்படியோ நடந்து யுனிசெப் அலுவலகத்திற்கு சென்றனர். அவர்களை விட நடக்க சிரமப்பட்டவர்கள், அரசியல்வாதிகள்தான். கந்தசுவாமி கோவிலில் இருந்து டிப்போச்சந்தி வரையே அனேகமான அரசியல்வாதிகள் நடந்து வந்தனர். அங்கு மரங்களின் கீழ் உட்கார்ந்து விட்டனர். மக்கள் பேரணியாக நடந்து சென்று முடிந்ததும், தமது வாகனங்களில் ஏறி, யுனிசெப் அலுவலகத்திற்கு- பேரணியின் முடிவிடத்திற்கு சென்றனர்.

♦ போராட்டம் பற்றி ஒரு ஹைலைட்டான செய்தி. இது 24ம் திகதி இரவு நடந்தது.

போராட்டத்திற்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்தன. தமிழரசுக்கட்சி மட்டும் ஆதரவு தெரிவிக்கவில்லை. 24ம் திகதி இரவு, தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவின் மாவிட்டபுரம் இல்லத்தில், ஜனநாயக போராளிகள் கட்சியினர் சந்தித்து பேசினர். போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட வேண்டும், இல்லாவிட்டால் வீணாண விமர்சனங்கள் வருமென வலியுறுத்தி கூறினர். எனினும், போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கை வெளியிட மாவை சேனாதிராசா மறுத்து விட்டார். இரா.சம்பந்தன் அறிக்கை விடாமல், தான் அறிக்கை விட முடியாதென மறுத்து விட்டார்.

கடைசி வரை மாவை சேனாதிராசா அறிக்கை வெளியிடவில்லை. ஆனால், போராட்டத்தில் மாவை சேனாதிராசாவின் மகன்- வலி.வடக்கு பிரதேசசபை உறுப்பினர் சே.கலையமுதன் கலந்து கொண்டிருந்தார். அவர் பேரணியில் நடந்து வர, காணாமல் போனவர்களின் உறவுகளின் சங்கத்தை சேர்ந்த பெண்மணியொருவர் அருகில் வந்து, “அப்பா வரவில்லையா“ என கேட்டு காரசாரமாக திட்டினார். கலையமுதன் பதில் சொல்லாமல் சென்றார்.

♦ கடைசியாக ஒரு டவுட்.

இந்த போராட்டத்தை ஆதரிப்பதாக இரா.சம்பந்தன் தெரிவித்ததாக தமிழரசுக்கட்சி பத்திரிகையான உதயன் தலைப்பு செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், சம்பந்தன் ஆதரிக்காமல், தன்னால் ஆதரிக்க முடியாதென மாவை சேனாதிராசா தெரிவித்திருந்தார்.

அப்படியென்றால், எங்கோ இடிக்கிறதே?

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.