குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 8 ம் திகதி புதன் கிழமை .

பூமியின் நெஞ்சை அடைக்கும் நெகிழிகள் ! மனிதர்களே மனிதர்களே இதைப்பற்றி சிந்திப்போமா!!

05.01.2019-2049-மார்கழி 2015 வரை பூமிப்பரப்பில் வீசி எறியப்பட்ட கோடிக்கணக்கான நெகிழிகள் முழுவதுமாக மக்கிப்போக 3015 ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.நெகிழிகள்...ஆங்கிலத்தில் பிளாஸ்டிக் பைகள் என்றழைக்கப்படும் இவை பார்ப்பதற்கு பளபளப்பாகவும், எளிதில் பயன்படுதக்கூடிய தாகவும் உள்ளவை.  ஆனால் இவற்றின் உண்மையான முகம் அவ்வளவு பளபளப்பானதும், நன்மை தரக்கூடியதும் அல்ல. (நல்ல தமிழ்ச்சொற்களுக்கு சிலவற்றை மாற்றியுள்ளேன்.)

அவற்றை பயன்படுத்தும்போது அந்த சில நிமிடங்கள் அல்லது சில மணி நேரங்கள் என ஒரே ஒரு முறை மட்டுமே உதவக்கூடிய அவை ஒட்டுமொத்த பூமிக்கும், உயிரினங்களுக்கும் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தீமை செய்யக்கூடியவை.

 

ஆயிரம் ஆண்டுகள் என்பது ஆச்சரியமான எண்ணிக்கையாக இருக்கலாம். ஆனால் எவராலும் மறுக்க முடியாத அதே சமயம் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய உண்மை இது.

பொதுவாக இந்த நெகிழிகளுக்கு மக்கக்கூடிய தன்மை கிடையாது. இவற்றால் செய்யப்படும் ஒரு பை அதாவது ஒரு " கேரி பேக் " இயல்பாக துண்டு துண்டாக உடைந்து மண்ணோடு மண்ணாக கலந்து மக்குவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றன.

சென்னை போன்ற பெரு நகரங்களில் தென்னிந்திய உணவு வகையான சாதம், சாம்பார், காரக்குழம்பு, ரசம், பொரியல், மோர், ஊறுகாய், இனிப்பு என குறைந்தது 7 ல் இருந்து 8  நெகிழிகள்(பிளாஸ்டிக்) சிறிய அளவிலான பைகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. அந்த ஒட்டு மொத உணவு பொட்டலங்களையும் எடுத்து செல்ல ஒரு பெரிய அளவிலான கேரிப்பை பேக் பயன்படுத்தப்படுகிறது.

சென்னையில் நாள் ஒன்றுக்கு மிக குறைந்த பட்சம் 10 இலட்சம் உணவு பார்சல்களாவது விற்பனை ஆகும் என்று எடுத்து கொண்டால் அந்த நெகிழி (பிளாசுடி) பைகள் குப்பை கூடைக்குள்தான் வீசப்படும். அதேபோல ஒரு மளிகைக்கடைக்கு சென்றாலும் சரி, ஆட்டுக்கறி, கோழிக்கறி என கறிகள் வாங்கினாலும் சரி, மரக்கறி எனப்படும் காய்கறிகள், கனிகள் வாங்கினாலும் சரி அனைத்திற்கும் நெகிழி (பிளாசுடிக்) பைகளே அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.

சென்னை போன்ற சுமார் ஒரு கோடி பேர் வசிக்கும் பெரு நகரில் இவ்வாறு எந்த வகையில் பார்த்தாலும்கூட நாளொன்றுக்கு குறைந்தது 75 லட்சத்தில் இருந்து ஒரு கோடி நெகிழி பைகள் (சிறிய பெரிய அளவில்) பயன்படுத்தப்பட்டு அவை குப்பை கூடைக்குள், தெருவில், சாக்கடையில் நீர் வழிப்பாதையில், தெருவில் வீசி எறியப்படுகின்றன.

இவ்வாறு வீசி எறியப்படும் நெகிழிகள் (பிளாசுடிக்) கேரி பேக்குகள் பிற காகிதங்கள் போலவும், காகித பைகள்,குவளைகள் (கப்புகள்) போலவும் நீரில் பட்டாலோ, மழை நீர் நனைத்தாலோ ஈரமாகி சிதைந்து சிறு சிறு துகள்களாகி மண்ணோடு மண்ணாக மாறிப்போவதில்லை.

அவ்வாறு சிறு சிறு துகள்களாகி மக்கிப்போவதற்கு ஆயிரம் ஆண்டுகள் ஆகும். அதாவது நாம் வீசும் நெகிழி பிளாசுடி கேரி பேக்குகள் மக்குவதை பார்க்க 10 தலைமுறைகள் காத்து இருக்கவேண்டும். அது மட்டுமல்ல, இவ்வாறு பொறுப்பற்ற முறையில் வீசி எறியப்படும் நெகிழி பிளாசுடிக் பேக்குகள் இரண்டு வகையில் அன்றாட வாழ்வின் மசுவுக்கும் காரணமாகின்றன. நிலபரப்பில் ஒட்டிக்கொள்ளும், அல்லது சாக்கடையில் விழுந்துவிடும் இவை சாக்கடை நீர் நிலத்துக்குள் செல்லாத வண்ணம் தடுத்து விடும் அதே போல மழை நீரும் நிலத்துக்குள் போகாத வண்ணம் தடுத்து விடுகின்றன. இதனால் நிலம் உறிஞ்சுவது தடைபட்டு தண்ணீர் தெருவில் ஓடுவதற்கும் காரணமாகி விண்டுகின்றன. அதோடு நிற்பதில்லை, வேகமான சாக்கடை நீரில் அடித்து செல்லப்படும் இவை கால்வாய்கள் வழியாக ஆறுகளுக்கும் எடுத்து செல்லப்படுகின்றன , அவை ,கடலுக்குள்ளும் செல்லுகின்றன. கடலில் உள்ள கடல் வாழ் உயிர்நிங்கள் இவற்றை உணவு என்று எண்ணி உண்ணும்போது அவை குடலில் சுற்றி இறந்து போகின்றன. இவ்வாறு இறந்துபோன ஆமைகள் ஏராளம். ஆமைகள் என்பவை ஐநூறு ஆண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் உயிர்வாழும் திறன் படைத்தவை. அத்தகைய அறிய வகை உயிரினங்களின் உயிருக்கும் ஆபத்தை முடிகின்றன நாம் சாதாரணமாக வீசும் ஒரு நெகிழிப்  பை. கடலுக்குள் உள்ள மிக நுட்பமான தாவரங்களுக்கும் இந்த நெகிழிப் பைகள் எதிரானவையாக ஆகிவிடுகின்றன.

இவை ஒரு பொருளாக இத்தகைய பிரச்னைகளை உண்டு செய்யும் அதே சமயம் இந்த நெகிழிப் பைகள் தயாரிக்க பயன்படும் இரசாயனங்கள் அதைவிட மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை, அந்த ரசாயனங்கள் சுற்று சூழலுக்கும், பூமிக்கும் நச்சு தன்மையை ஏற்படுத்த கூடியவை. பிளாஸ்டிக் பைகள் என்றி நெகிழிகள் சைலீன், எத்திலீன் ஆக்சைட், பென்சீன் ஆகைய இரசாயனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இவை உயிரினங்களுக்கு குறிப்பாக மனிந்தர்க்கு தீங்கிழைக்க கூடியவை மேலும் காற்று மண்டலத்திலும் நச்சை கலக்க கூடியவை. தண்ணீர், விலங்குகள், செடி கொடிகள் என பல்வேறு உயிரின வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்க கூடியவை. இந்த நெகிழிகளை வெறுமனே வீசினாலும் ஆபத்து, தீயில் எரித்தாலும் ஆபத்தை விளைவிக்க கூடியவை.

சென்னையில் பெருவெள்ளம் வந்து போனதற்கு பிறகு அடையாறு, கூவம் ஆகிய ஆறுகளின் கரையோரம், கால்வாய்களின் கரையோரம் இப்போதும் கூட இலட்சக்கணக்கான நெகிழிகள் முற்கள், வெளிகளுக்குள் சிக்கி நின்று நம்மை பார்த்து சிரித்து கொண்டிருப்பதை பார்க்கலாம். நம் கண் முன்னே காணக்கூடிய நெகிழிகளின் பிரம்மாண்ட கோர வடிவம் இது.

தரை தளங்களிலேயே இத்தகைய பிரச்னைகளை இவை உண்டாக்குகிறது என்றால், காபி, தேயிலை ஏற்றுமதிகள் உள்ள மலை பிரதேசங்களில் எத்தகைய விளைவுகளை, இவை ஏற்படுத்தும் என்று நாம் ஊகித்துக்கொள்ளல்லாம்.

நெகிழிகளின் பிரச்சனை காட்சில்லா அளவைவிட பல மடங்கு அதிகரித்த பின்னரே 40 மில்லி மைக்ரான் அளவுக்கு குறைவான நெகிழிகளை தயாரிக்கவே கூடாது என இந்திய அரசு தடை விதித்தது. அதற்கு முன்னர்வரை 20 மில்லி மைக்ரான் அளவுக்கு தயாரித்து வந்தனர். காரணம் நெகிழியின் தடிமன் அதிகரிக்க அதிகரிக்க அதன் உடையும் தன்மை அதிகரிக்கும் என்பதால் 40 மில்லி மைக்ரான் அளவுக்கு அதிகமான தடிமனில்தான் நெகிழி தயாரிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க பட்டது.

நெகிழிகள் மறு சுழற்சி செய்யப்படலாம்..ஆனால் தமிழ்நாட்டில் அவற்றை மறு சுழற்சிக்காக முறைப்படி ஒவ்வொரு நெகிழியும் எடுத்து செல்லப்படுகிறதா என்றால்..நாம் ஆற்றகரையோரம், தெருவோரம், நீர்நிலைகளில் இன்று கூட கண்களில் படும் நெகிழிகளே விடை !

சரி....இதற்கு என்ன தீர்வு ?

இதற்கும் அரசாங்கமே தீர்வு காண வேண்டும், சட்டம் இயற்ற வேண்டும், அரசுதான் பொறுப்பு என்றெல்லாம் கூறிக்கொண்டு இருப்பது எந்த வகையிலும் பொறுப்பான ஒரு நிலைப்பாடு அல்ல.

ஒவ்வொரு தனி மனிதரும் இதற்கென சிந்திக்கவும், செயல்படவும் வேண்டும். அரசால் செய்யப்படக்கூடிய மிக முக்கியமான ஒரு பணி பிளாசுரிக்பைகள் எனப்படும் நெகிழிகளை தடை செய்வது. அதற்கு பின்னர் அரசின் அந்த சட்டத்தை ஒவ்வொரு தனி மனிதரும் பின்பற்றுவது என்பதே நிரந்தர தீர்வுக்கு வழி. அதற்கு பதிலாக மறு சுழற்சி செய்யக்கூடிய சணல், துணி பைகளை பயன்படுத்தலாம். கடைகளுக்கு செல்லும்போதே வீட்டில் இருந்து பைகளை, பாத்திரங்களை எடுத்து செல்வது அவசியமானது. காகித பைகளை கூட பயன்படுத்தலாம். வேறு வழியே இல்லாமல் நெகிழி பை ஒன்றை வாங்கிவிட்டால் ஒருமுறை பயன்படுத்தி விட்டு வீசி எறிவதற்கு பதிலாக அதையே திரும்ப திரும்ப பயன்படுத்தலாம். தெருவில், நீர்நிலைகளில், சாக்கடையில், குப்பை கூடையில் வெறுமனே வீசி எரியாமல் மக்காத குப்பைகள் வகையில் தரம் பிரித்து மறு சுழற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

இவை எல்லாம் இனிமேல் ஆபத்து வராமல் தடுக்கு முயற்சியே...அதாவது 2015 சனவரி மாதம் இந்த நடைமுறைகளை முழுதுமாக பின்பற்ற தொடங்கினாலே இதன் பலன் 3015 ம் ஆண்டுதான் அனுபவிக்க முடியும். காரணம் டிசம்பர் 2015 வரை பூமிப்பரப்பில் வீசி எறியப்பட்ட கோடிக்கணக்கான நெகிழிகள் முழுவதுமாக மக்கிப்போக 3015 ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டும்.

- சிந்தியா லிங்கசாமி

2016 நவம்பர் மாதம் தின இதழில் வெளியான கட்டுரை . விசுவநாத்  திற்கு நன்றிகள்.05.01.2019-2049