பிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும். ‘கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம்’ என்றும் இது அழைக்கப்படுகிறது. இதன் பெயர் கேட்பதற்கு காவியக்கதை போல் இருந்தாலும் இது வேற்றுலகத்தை சார்ந்தது என பெரும்பாலான ஆய்வாளர்களால் நம்பப்படுகிறது.
ஏனெனில், கருப்பு போர்வீரன் வேற்றுலக விண்கலம் (Black Knight satellite) என்று அழைக்கப்படும் இந்த விண்கலம் சுமார் 13,000 ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
யூஎப்ஓ (UFO) எனப்படும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்களை (Unidentified flying object) ஆராயும் ஆய்வாளர்களும் இந்த கருத்துடன் ஒற்றுப்போகின்றனர். இதெல்லாம் உண்மையா.? இதற்கு என்ன ஆதாரம்.? இதை கண்டுபிடித்தது எப்படி.? போன்ற மிகவும் மர்மமான கேள்விகளுகான விடைகளை அலசுவோம் வாருங்கள்.
1954-க்கு பிறகு மீண்டும் 1960-ல் அமெரிக்க கடற்படையானது, இதே கருப்பு பொருள் ஆனது சுமார் 104.5 நிமிட சுற்று வேகத்தில் புவியைச் சுற்றிவருவதை கண்டறிந்தது. அதன்பின்னர் இது சார்ந்த தீவிரமான ஆய்வு தொடங்கப்பட்டது. ஒரு விசித்திரமான சுற்றுப்பாதையை கொண்ட இந்த கருப்பு பொருளுக்கும், பூமிக்கும் இடையேயுள்ள அதிகப்பட்ச தூரம் 1,728 கி.மீ என்றும், குறைந்தப்பட்ச தூரம் 216 கி.மீ என்றும் ஒவ்வொன்றாக கண்டறியப்பட்டது.
இந்த பிளாக் நைட் செயற்கைக்கோள் ஆனது, சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ரேடியோ சிக்னல்களை கடத்திக் கொண்டிருக்கிறது என்று உலகம் முழுவதுமுள்ள முகவர்கள் கண்கானித்துக் அறிவித்தனர். அதன் பின்னர், பல ஆண்டுகளாக விண்வெளி வளர்ச்சி யுத்தம் நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு, இந்த பிளாக் நைட் விண்கலம் மீதொரு சிறப்பு கவனம் பிறந்தது.
1899-ஆம் ஆண்டு நிக்கோலா டெஸ்லா, இதே பிளாக் நைட் விண்கலத்தின் சமிக்ஞையை இடைமறிப்பு செய்திருந்தார் என்று கூறப்பட்டிருந்தது, அப்போது யாரும் இதை நம்பவில்லை, அதை வெறும் ஒரு புரளியாக கருதினர் என்பது குறிப்பிடத்தக்கது. தீவிரமான சந்தேகங்கள் கிளம்பிய பின்னரே இதன் மீதான ஆய்வில், 1930-களில் இருந்தே பிளாக் நைட் விண்கலத்தின் விசித்திரமான சிக்னல்களை பெற்றுவருவதாக உலகம் முழுக்க உள்ள விண்வெளி வீரர்கள் தெரிவித்தனர்.
1957-ஆம் ஆண்டு தான், இந்த மர்மமான பிளாக் நைட் விண்கலம் முதல் முறையாக புகைப்படத்தில் சிக்கியது. டாக்டர் லுயிஸ் கோராலோஸ் (Dr. Luis Corralos) என்பவர், சோவியத் ஒன்றியத்தினால் ஏவப்பட்ட ஸ்சுப்புட்னிக் 2 விண்கலம் (Sputnik 2) வெனிசுவேலாவின் தலைநகரமான கரகஸ் நகரை கடக்கும் போது புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது தற்செயலாக இந்த “பிளாக் நைட்” புகைப்படத்தில் சிக்கியது.
அதே 1957-ஆம் ஆண்டு ஸ்சுப்புட்னிக் 1 விண்கலத்தில் இருந்த விண்வெளி வீரர்கள், அடையாளம் காணமுடியாத ஒரு பொருள், போலார் சுற்றுவட்டப்பாதையின் அருகே நிழலாடுவதாக அறிக்கை செய்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. பின்னர் ஒரு அதிகாரப்பூர்வமானத் தன்மையை அடைந்த இந்த மர்ம விண்கலம் பற்றிய கட்டுரை மார்ச் 7-ஆம் தேதி 1960-ஆம் ஆண்டு பிரபல டைம்ஸ் நாளிதழில் வெளியானது.
1957-ஆம் ஆண்டிலிருந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரண்டு நாடுகளுமே போலார் சுற்று வட்டப்பாதைக்குள் விண்கலம் ஒன்றை செலுத்த முயன்று 1960-ஆம் ஆண்டு உலகின் முதல் வானிலை செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட அந்த போலார் செயற்கைகோள் ஆனது பூமியின் மேப்பிங் மற்றும் கண்காணிப்பு ஆகிய பிரதான பணிகளை செய்வதோடு, அவ்வப்போது போலார் சுற்றுவட்டப்பாதையில் தென்படும் பிளாக் நைட் பற்றிய தகவல்களையும் சேகரிக்க உதவுமென நம்பப்பட்டது.
எதிர்பார்த்தபடியே, 1960-களில் மீண்டும் பிளாக் நைட் விண்கலம் போலார் சுற்று வட்டப்பாதையில் தென்பட்டுள்ளது. அப்போது தான் அந்த விண்கலமானது சுமார் 10 டன் வரை எடை கொண்டதாய் இருக்குமென விண்வெளி வீரர்களும், அறிவியலாளர்களும் தங்களது கணிப்புகளை தெரிவித்தனர். அந்த காலக்கட்டத்தில் விண்ணில் மிதக்கும் மிக கனமான விண்கலமாய் (Heaviest Artificial Satellite) பிளாக் நைட் பார்க்கப்பட்டது.
தொடர்ச்சியான கண்காணிப்புகளுக்கு பின்னர் பிளாக் நைட் முதல் முறையாக ரேடாரில் சிக்கியது. அடுத்த 7 மாதம் கழித்து ‘ட்ராக்’ செய்யப்பட்டு மீண்டும் பிளாக் நைட் புகைப்படத்தில் சிக்கியது. இந்த பணியில் க்ரூமன் ஏர்கிராஃப்ட் கார்ப்ரேஷன் (Grumman Aircraft Corporation) மிகவும் உதவியதென்பது குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றை விடவும் மிக சுவாரசியமான விடயம் என்னவெனில், பிளாக் நைட் விண்கலத்தில் இருந்து கிடைத்த சிக்னல்களை டீகோட் (decode) செய்த பின், அது 13000 ஆண்டுககளுக்கு முன் உருவான ‘எப்சிலன் பூட்ஸ் ஸ்டார் சிஸ்டம்’ (Epsilon Bootes Star System) என்ற இரட்டை நட்சத்திரத்துடன் தொடர்பு கொண்டதென்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வளவு தான், நம்மால் அதிகபட்சம் கண்டறிய முடிந்த விடயங்களாகும். இது ஏன் பூமி கிரகத்தை சுற்றி திரிகிறது.? அதுவும் ஒரு மர்மமான சுற்றுப்பாதையில் மர்மமான வடிவமைப்பில்.? இது பூமியை கண்காணிக்கிறதா.? அப்படி கண்காணிக்கிறது என்றால், இது வேற்றுகிரகத்தை சேர்ந்த விண்கலமா.? அப்போது நாம் இந்த அண்டத்தில் தனியாக இல்லையா.? இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை அடுத்த முறை பிளாக் நைட் விண்கலம் நமது மிகவும் சக்தி வாய்ந்த விண்வெளி தொலைநோக்கிகள் கண்களில் சிக்கும்போது நிச்சயம் கிடைக்கும்.