குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இராவண காவியம் கூறும் 5 அதிர்ச்சி தரும் உண்மைகள்!

30.11.2018-நாம் அனைவரும் இராமாயணம் அறிந்திருப்போம். இராவணனை மிகப்பெரிய தீயசக்தி கொண்ட வில்லனாகவே பார்த்திருப்போம். இந்த காவியத்தை எழுதிய வால்மீகி முனிவரில் இருந்து விஜய் டிவி சீரியல் வரை அப்படித்தான் காட்டி நம்மை ஏமாற்றியிருகிறார்கள். ஆனால் ராவணின் சொல்லப்படாத கதை ஒன்று இருக்கிறது. அதுவும் ஒரு காவியமே! இராவண காவியம். இந்த இராவண காவியத்தை படித்தால் நீங்கள் ஒட்டுமொத்த இராமாயணத்தையே வெறுப்பீர்கள். இந்த காவியம் சொல்லும் 5 உண்மைகளை இங்கே பார்க்கலாம்.

உண்மை 1:

வடக்கில் இருந்து தென்னகத்திற்கு புலம்பெயர்ந்து வந்த ஆரியர்களான ராமனும் இலக்குவனும், இங்கே உயிர்பலி கொடுத்து யாகங்கள் நடத்துகிறார்கள். போர் தொடுக்கிறார்கள். தடாகை என்னும் தமிழ் அரசியை கொல்கிறார்கள். தடாகையை காக்க ராவணன் அனுப்பிய படைத்தலைவன் சுவாகுவையும், மாரீசனையும் கொலை செய்கிறார்கள்.

உண்மை 2:

இராவணின் தங்கையின் பெயர் சூர்ப்பனகை அல்ல. அவளது பெயர் காமவல்லி. இராமன் காமவல்லியை கவர நினைக்கிறார். ஆசைக்கு இணங்க மறுத்த காமவல்லியின் உறுப்புகளை இலக்குவன் அறுத்துக் கொலை செய்கிறார். காமவல்லியை காக்க இராவணனால் அனுப்பப்பட்ட கரனும் கொல்லப்படுகிறார்.

உண்மை 3:

தன் மக்கள் கொல்லப்பட்டத்தை அறிந்த இராவணன், விந்தகம் சென்று தன் தங்கை வளர்த்த மானை அனுப்பி சீதையை பிரித்து, ராமனிடம் இருந்து கடத்திச் சென்று இலங்கையில் தனது தங்கையாக போற்றினார். இது பீடணனுக்கு பிடிக்கவில்லை. சீதையை ராமனிடமே அனுப்புமாறு கோரினார்.