குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2050

இன்று 2019, ஆடி(கடகம்) 15 ம் திகதி திங்கட் கிழமை .

நிகரில்ல மனிதர்கள் இவர்களே!!-27.11.2018-

அகம் புறம் தந்ததமிழ்.

ஆண்டுக்கொருநாள்

அகத்திலும்  புறத்திலும் எரிகிறது.

புறத்தில்  எரிவது  தெரிகிறது

அகத்தில் எரிவது  அவரவர்க்கே  புரிகிறது!

 

அழக்கூடியவர் அழுகின்றார்

அழமுடியாதவர்  தவிக்கின்றார்.

 

காத்திருப்பார் அறுவடைக்காய் விதைத்தவர்

தமிழர்கள் கார்த்திகையில்  காண்கின்றார்.

விதைக்கப்பட்டவர்களை.

 

தமிழைக்கெடுப்வர் பலரிருக்க

தமிழுக்காய் தமிழருக்காய்

உயிர்கொடுத்தவர் உயர்ந்தவரே!

நிகரில்ல மனிதர்கள் இவர்களே!!