குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கூட்­ட­மைப்பை குழப்ப முனையும் எதி­ரா­ளிகள்!! -கபிலன்கட்டுரை இருபக்கமும் பார்ப்போம்

26.11.2018-இலங்­கையின் அர­சியல் நெருக்­க­டி­களைத் தீர்க்கும் விட­யத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஈடு­பாடு அல்­லது செயற்­பா­டுகள் உன்னிப்­பான கவ­னத்தைப் பெற்­றி­ருக்­கின்­றன.கடந்த வாரம் எதிர்க்­கட்சித் தலை­வரின் செய­ல­கத்தில் 15 நாடு­களின் தூது­வர்கள், இரா­ச­தந்­தி­ரி­க­ளுடன் கூட்­ட­மைப்பில் உள்ள 14 பாராளுமன்ற உறுப்­பி­னர்­களும் சந்­தித்துப் பேச்சு நடத்­தி­யி­ருந்­தனர்.

கடந்த மாதம் 26ஆம் திகதி மகிந்த ராயபக் சசர்ச்­சைக்­கு­ரிய முறையில் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் சர்­வ­தேச சமூ­கத்தின் பிர­தி­நி­திகள் தனி­யா­கவும் கூட்­டா­கவும் பல சந்­திப்­பு­களை நடத்­தி­யுள்­ளனர்.

பல்­வேறு தக­வல்­க­ளையும் அர­சாங்கத் தரப்­புக்கு பரி­மாறிக் கொள்­வ­தற்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை, சர்­வ­தேச சமூகம் பயன்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

மகிந்த ராயபக் ச இலங்­கையின் பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட்­டதை சர்­வ­தேச சமூகம் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்ற கருத்தை, பாராளுமன்ற உறுப்­பினர் சுமந்­தி­ரனே வெளி­யிட்டு வரு­கிறார். இது அவ­ரது கூற்று அல்ல., சர்­வ­தேச சமூ­கத்தின் கருத்து. சுமந்­தி­ரனை வைத்து கூற வைக்­கப்­பட்ட கருத்து.

தமது நாடுகள் மகிந்த ராயபக் சவை பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொள்­ள­வில்லை என்றும் அவ­ருக்கு வாழ்த்துத் தெரி­விக்­க­வில்லை என்றும் கடந்த 20ஆம் திகதி நடத்­திய சந்­திப்பின் போது கூட, 15 நாடு­களின் தூது­வர்கள், இராச­தந்­தி­ரிகள் கூறி­யி­ருந்­தனர். சுமந்­தி­ரனே இந்தத் தகவலை வெளி­யிட்­டி­ருந்தார்.

 

அது­போ­லவே, சர்­வ­தேச சமூகம், இரா.சம்­பந்தன் ஊடாக, மைத்­திரி, மகிந்த தரப்­பு­க­ளுக்கு சில தக­வல்­களைப் பரி­மா­றி­ய­தா­கவும் கூட அர­சியல், ஊடகப் பரப்­பு­களில் பேச்­சுக்கள் உள்­ளன.

 

அதை­விட, தற்­போ­தைய அர­சியல் நெருக்­க­டியில், இருந்து கூட்­ட­மைப்பும் வில­கி­யி­ருக்க முடி­யாத ஒரு சூழலே உள்­ளது.

 

இரண்டு தரப்புகளும் கிட்­டத்­தட்ட சம­மான பலத்­துடன் இருக்கும் நிலையில், கூட்­ட­மைப்பும் யே.வி.பி.யும் எடுக்கும் முடி­வுகள் தான், அரசியல் எதிர்­கா­லத்தை தீர்­மா­னிப்­ப­தாக இருக்­கி­றது.

 

எனவே, தற்­போ­தைய அர­சியல் குழப்ப­நி­லையில் கூட்­ட­மைப்பின் மீதான உன்­னிப்­பான கவனம் அனைத்து தரப்­பு­களின் மத்­தி­யிலும் அதிக­ரித்­தி­ருப்­பதில் ஆச்­ச­ரி­ய­மில்லை.

 

அதே­வேளை, தற்­போ­தைய அர­சியல் குழப்­பங்கள் சார்ந்து, சர்­வ­தேச சமூ­கத்­துடன் கூட்­ட­மைப்பு கொண்­டி­ருக்­கின்ற உற­வு­களும், முன்னெ­டுத்து வரும் நகர்­வு­களும், இரண்டு தரப்­பு­க­ளுக்கும் கடு­மை­யான எரிச்­சலை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

 

முத­லா­வது– மகிந்த ராயபக் ச –- மைத்­திரி தரப்பு

 

இரண்­டா­வது– கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான போக்­கு­டைய தமிழ்த் தேசிய அர­சியல் தரப்பு.

 

இரா.சம்­பந்­த­னுடன் மகிந்த ராயபக் ச நடத்­திய பேச்­சுக்கள் தோல்வி கண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எடுத்த நிலைப்­பாடு, மகிந்த மைத்­திரி தரப்­பு­க­ளுக்கு கடும் எரிச்­ச­லையே ஏற்­ப­டுத்­தி­யது.

 

அதிலும், கடந்த வாரம் வெளி­நாட்டு இரா­ய­தந்­தி­ரி­க­ளுடன் கூட்­ட­மைப்பு நடத்­திய சந்­திப்பு இன்னும் கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.

 

இதற்குப் பின்னர் தான், வெளி­நாட்டு இரா­யதந்­தி­ரி­களைச் சந்­திப்­பதை விட்டு விட்டு மக்­களைச் சந்­திக்க முன்­வ­ரு­மாறு கூட்­ட­மைப்பு உள்ளிட்ட கட்­சி­களை டுவிட்­டரில் கோரி­யி­ருந்தார் நாமல் ராயபக் ச.

 

“உங்­களின் பொது­சன முன்­னணி கட்­சி­யினர் யாரைச் சந்­தித்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள் என்று விசா­ரி­யுங்கள்” என்று நாம­லுக்கு கனேடியத் தூதுவர் பதி­லடி கொடுக்க அந்த பதிவு தான் காரணம்.

 

சர்­வ­தேச இரா­ச­தந்­தி­ரி­க­ளுடன் நடத்­திய சந்­திப்­பினால், சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி பொதுச்­செ­ய­லாளர் றோகண லக்சுமன் பிய­தா­சவும் கூட கோப­ம­டைந்தார்.

 

நாட்டில் உறு­தி­யற்ற நிலையை ஏற்­ப­டுத்தும் சதித்­திட்­டத்­துக்கு கூட்­ட­மைப்பு துணை போவ­தாக குற்­றம்­சாட்­டி­யுள்ள அவர், இப்­போது சர்வ­தேச இரா­ய­தந்­தி­ரி­க­ளுடன் கூட்­ட­மைப்பு பேச வேண்­டிய தேவை இல்லை என்றும் விச­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

 

ஏற்­க­னவே, மகிந்த ராயபக் ச, கோத்­த­பய ராயபக் ச, மகிந்த சம­ர­சிங்க, கெக­லிய ரம்­புக்­வெல, நாமல் ராயபக் ச, உள்­ளிட்ட பலரும், இலங்­கையின் உள்­நாட்டு விவ­கா­ரத்தில் வெளி­நா­டுகள் தலை­யீடு செய்­கின்­றன என்ற குற்­றச்­சாட்­டு­களை முன்­வைத்து வரும் நிலையில்- சர்­வ­தேச இரா­சதந்­தி­ரி­க­ளு­ட­னான கூட்­ட­மைப்பின் சந்­திப்பு, அரச தரப்­புக்கு கடு­மை­யான சீற்­றத்தை உண்­டாக்­கி­யி­ருக்­கி­றது.

 

மறு­பக்­கத்தில், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை எதிர்த்து அர­சியல் செய்யும் தரப்­பு­களும் கூட இதனால் எரிச்­ச­ல­டைந்­தி­ருக்­கின்­றன.

 

சர்­வ­தேச சமூ­கத்­து­ட­னான கூட்­ட­மைப்பின் உற­வுகள் பல­ம­டைந்­தி­ருப்­பதன் எதி­ரொ­லி­யாக மாத்­தி­ர­மன்றி, தாம் எதிர்­பார்த்­த­வாறு கூட்டமைப்பு செயற்­ப­ட­வில்லை என்ற ஆதங்­கத்­திலும் கூட இந்த எதிர்ப்புக் கிளம்­பி­யி­ருக்­கலாம்.

 

தற்­போ­தைய அர­சியல் குழப்­பத்தில், கூட்­ட­மைப்பு நடு­நிலை வகிக்க வேண்டும் என்­பது, வடக்கில் உள்ள ஒரு தரப்­பி­னரின் கருத்து. அவ்வாறு நடு­நிலை வகிப்­பதால், மகிந்த ராயபக் ச தப்பிக் கொள்ளும் நிலை ஏற்­படும் என்­பது இன்­னொரு சாராரின் நிலைப்­பாடு.

 

கூட்­ட­மைப்பு, சன­நா­யகம், அர­சி­ய­ல­மைப்பு ஆகி­ய­வற்றை முன்­னி­றுத்தி, மகிந்­த­வுக்கு எதி­ரான நிலைப்­பாட்டை எடுத்­தி­ருக்­கி­றது.

 

இது, கூட்­ட­மைப்­புக்கு எதி­ராக அர­சியல் செய்யும், குறு­கிய காலத்தில் தேர்தல் வந்தால், தமக்கும் ஆச­னங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்­புள்ள- தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி உள்­ளிட்ட தரப்­பு­களை ஏமாற்­ற­ம­டையச் செய்­தி­ருக்­கி­றது.

 

அதே­வேளை, பாரா­ளு­மன்­றத்தில் கூட்­ட­மைப்பு நடு­நிலை வகிக்க வேண்டும் என்று தாம் கோரு­வது, மகிந்த ராயபக் சவைக் காப்பாற்று­வ­தற்­காக அல்ல என்று கயேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் விளக்­க­ம­ளிக்க முற்­பட்­டி­ருக்­கிறார்.

 

மகிந்த தரப்­புக்கு 96 உறுப்­பி­னர்­களும் இரணில் தரப்­புக்கு 106 உறுப்­பி­னர்­களும் ஆத­ரவு இருப்­ப­தா­கவும், அதனைக் கொண்டே அவர்கள் பெரும்­பான்­மையை நிரூ­பித்துக் கொள்ள முடியும் என்­பதால், கூட்­ட­மைப்பு இதில் தலை­யிட வேண்­டி­ய­தில்லை என்றும் அவர் மிகப் பழைய புள்ளி விப­ரங்­க­ளோடு கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

 

அதற்குப் பிந்­திய கட்சித் தாவல்கள், குதிரை பேரங்கள் பற்றி அறி­யாமல் அவர் கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருக்­கிறார் போலத் தெரி­கி­றது.

 

பாரா­ளு­மன்றப் பெரும்­பான்­மைக்கு 113உறுப்பினர்கள் தேவை என்­பதைக் கூட, கருத்தில் கொள்­ளாமல், இப்­போதும், ஐ.தே.க.வே பெரிய கட்சி­யாக இருக்­கி­றது என்று கூறி­யி­ருக்­கிறார்.

 

இவ­ரது கருத்­துக்கள், சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி செய­லாளர் றோகண லக்சுமன் பிய­தா­சவின் பாணி­யி­லேயே இருப்­பது கவனிக்கத்தக்கது.

 

சில நாட்­க­ளுக்கு முன்னர், சிறி­லங்கா சுதந்­திரக் கட்சி செய­லாளர் றோகண லக்சுமன் பிய­தாச கொழும்பில் செய்­தி­யா­ளர்­க­ளிடம் பேசிய போது, “இது பாரா­ளு­மன்றப் பெரும்­பான்மை தொடர்­பாக ஐ.தே.க.வுக்கும், சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சிக்கும் இடையில் உள்ள பிரச்­சினை, இதில் கூட்­ட­மைப்பு தலை­யி­டாமல் இருக்­கலாம்” என்று கூறி­யி­ருந்தார்.

 

மைத்­தி­ரி­பால சிறி­சேன ஏற்­ப­டுத்­திய குழப்­பங்­களால் நாடே குழம்பிப் போயி­ருக்­கி­றது. அப்­ப­டி­யான நிலையில், இதனை இரண்டு கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான பிரச்­சி­னை­யாக காட்ட முனை­கி­றது சுதந்­திரக் கட்சி. இதில் பங்­கெ­டுக்கும் உரிமை தமி­ழர்­க­ளுக்கு இல்லை என்­பது போல கூறி­யி­ருக்­கிறார் அதன் செய­லாளர்.

 

அது­போன்­ற­தொரு நிலையில் தான், தமிழர் தரப்­பி­லுள்ள சிலரும் இருக்­கின்­றனர், பேசு­கின்­றனர்.

 

இந்தக் கட்­டத்தில் முன்னாள் முத­ல­மைச்சர் விக்­கி­னேசுவரன் வேறு, தனது பங்­கிற்கு- குழப்­ப­மான கருத்­துக்­களை வெளி­யிட்டிருக்கிறார்.

 

கடந்த வியா­ழக்­கி­ழமை யாழ்ப்­பா­ணத்தில் அவுசுதி­ரே­லிய துணைத் தூது­வரைச் சந்­தித்த பின்னர் அவர் வெளி­யிட்ட அறிக்கை, தற்போதைய அர­சியல் குழப்­பங்கள் தொடர்­பான அவ­ரது நிலைப்­பாட்டை வெளிப்­ப­டுத்­து­வ­தாக இருக்­கி­றது,

 

அவுசுதி­ரே­லிய தூது­வ­ரிடம் தாம் முன்­வைத்த சில விட­யங்­களை விக்­கி­னேசுவரன் கூறி­யி­ருக்­கிறார். அதன்­படி, தற்­போ­தைய அர­சியல் குழப்­பத்தை தீர்க்க சில யோச­னை­க­ளையும் முன்­வைத்­தி­ருக்­கிறார்.

 

அதில் ஒன்று, மகிந்த ராயபக்சவையும், இரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வையும் இணைத்து- அடுத்த இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ஒரு கூட்டு அரசாங்­கத்தை அமைத்து முக்­கி­ய­மான பிரச்­சி­னை­களைத் தீர்ப்­பது.

 

இது முடி­யாமல் போன – முடிந்து போன கதை. கடந்த மூன்று ஆண்­டு­களில் நிறு­வப்­பட்ட கூட்டு அர­சாங்­கத்­தினால்- ஒரு­மித்துச் செயற்­பட முடி­யாமல் தோல்வி கண்ட திட்டம் இது.

 

முன்னர் மைத்­திரி- –ரணில் கூட்டு அர­சாங்­கத்­தையும், அதற்கு முண்டு கொடுத்த கூட்­ட­மைப்­பையும் விமர்­சித்த விக்­கி­னேசுவரன், இப்போது, மகிந்­த­வையும், ரணி­லையும் இணைத்து கூட்டு அர­சாங்கம் அமைக்கும் யோச­னையை முன்­வைத்­தி­ருப்­பது ஆச்­ச­ரியம்.

 

அதை­விட, விக்கினேசுவரன் இன்­னொரு விட­யத்­தையும் கூறி­யி­ருக்­கிறார். இரணிலை பிர­த­ம­ராக்கி, மகிந்­தவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்­கு­மாறும் அவர் முன்­மொ­ழிந்­தி­ருக்­கிறார். இரு­வ­ரையும் இணைத்து தேசிய அர­சாங்­கத்தை அமைத்து விட்டு, மகிந்­தவை எப்­படி எதிர்க்­கட்சித் தலை­வ­ராக்க முடியும்?

 

மகிந்த ராயபக் ச போய் எதிர்க்­கட்சித் தலைவர் ஆச­னத்தில் அம­ரு­வ­தற்குத் தயா­ராக இருக்­கி­றாரா?

 

இது பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்­காக முன்­வைக்­கப்­பட்ட கருத்தா அல்­லது சம்­பந்தன் மீதுள்ள வெறுப்­பினால்- அவ­ரிடம் இருந்து எதிர்க்­கட்சித் தலைவர் பதவி பறிக்­கப்­பட வேண்டும் என்ற உள்­நோக்­கத்­துடன் தெரி­விக்­கப்­பட்ட கருத்தா என்று புரி­ய­வில்லை.

 

இரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­த­ம­ராக ஏற்­றுக்­கொண்­டாலே இப்­போ­தைய பிரச்­சினை தீர்ந்து விடும். ஆனால், அதனைச் செய்ய முடி­யாது என்று சனா­தி­பதி அடம்­பி­டிப்­பது தான் பிரச்­சினை என்­பது கூட, முன்னாள் முத­ல­மைச்­ச­ருக்குப் புரி­ய­வில்லை.

 

அதை­விட, ஒரு நீதி­ய­ர­ச­ராக பிரச்­சி­னையை தீர்க்க வழி­முறை கூறு­வ­தாக சொல்லிக் கொண்டு அவர் கூறி­யி­ருக்­கின்ற இன்­னொரு கருத்து மிகவும் சர்ச்­சைக்­கு­ரி­யது.

 

முன்­னைய ஆட்­சிக்­கா­லத்தில் இடம்­பெற்ற ஊழல்கள், மோச­டிகள், குற்­றங்கள் குறித்து விசா­ரிக்க அண்­மையில் நிய­மிக்­கப்­பட்ட விசேட மேல்­நீ­தி­மன்­றங்­களின் செயற்­பா­டு­களை இரண்டு ஆண்­டு­க­ளுக்கு இடை­நி­றுத்த வேண்டும் என்­பதே அது.

 

முன்­னைய ஆட்­சிக்­கால கொடு­மை­க­ளுக்கு நீதி கோரும் ஒரு சமூ­கத்தின் சார்பில் அர­சி­யலை நடத்திக் கொண்டே, முன்­னைய ஆட்­சிக்­கால மீறல்கள், குற்­றங்­களை விசா­ரிக்க அமைக்­கப்­பட்ட சிறப்பு மேல் நீதி­மன்­றங்­களை செய­லி­ழக்கச் செய்யும் யோச­னையை முன்­வைத்­தி­ருக்­கிறார் விக்­கி­னேசுவரன்.

 

இந்த மேல்­நீ­தி­மன்­றங்­க­ளினால் தான், ஆட்சி கவிழ்க்­கப்­பட்­டது. இதன் ஊடாக கோத்­த­பாய ராயபக் ச, பசில் ராயபக்ச உள்­ளிட்ட ராயபக்ச குடும்­பத்­தினர் பலரும் தண்­டிக்­கப்­பட்டு விடு­வார்­களோ என்ற அச்­சமே இந்த அவ­சர ஆட்சிக் கவிழ்ப்­புக்குக் காரணம்.

 

கடந்த ஆட்­சிக்­கால முறை­கே­டுகள், மோச­டிகள், குற்­றங்­க­ளுக்கு விரை­வாக நீதி வழங்­கப்­ப­ட­வில்லை என்ற பர­வ­லான குற்­றச்­சாட்டே இரணில் விக்­கி­ர­ம­சிங்க அர­சாங்கம் மீது இருந்­தது. அந்தக் குற்­றச்­சாட்டை சனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும்­கூட கூறி­யி­ருந்தார்.

 

இப்­ப­டிப்­பட்ட நிலையில், இந்த வழக்குகளை நடத்தும் மேல் நீதிமன்றங்களை இடைநிறுத்தி வைக்குமாறு விக்கினேசுவரன் கூறியுள்ள யோசனை, யாருக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தும் எண்ணம் கொண்டது என்ற கேள்வியையே எழுப்புகிறது.

 

இரண்டு ஆண்டுகளுக்கு இந்த நீதிமன்றங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டால், அடுத்த தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பவர்கள் அந்த விசாரணைகளை முன்னகர்த்துவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

 

விசேட மேல்நீதிமன்றங்களின் செயற்பாடுகளை இடைநிறுத்துவதே ராயபக் சவினரின் அடிப்படைத் திட்டம். அதனை அவர்கள், ஒக்ரோபர் 26ஆம் திகதிக்கு முன்பிருந்தே கூறிவந்தனர்.

 

ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் ஒவ்வொரு துறையிலும் நடக்கின்ற தில்லுமுல்லுகளும் தலையீடுகளும் இடமாற்றங்களும், நியமனங்களுமே, எதனை இலக்காகக் கொண்டு ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டது என்பதை வெளிப்படுத்துகிறது.

 

இப்படியான நிலையில், ஒரு முன்னாள் நீதியரசரே, விசேட மேல்நீதிமன்றத்தின் செயற்பாடுகளை இடைநிறுத்தும் யோசனையை முன்வைத்திருப்பது விந்தையானது.

 

போர்க்குற்ற விசாரணைகள் சார்ந்து இப்படி ஒரு யோசனையை சிங்கள அரசியல் தலைமைகள் முன்வைத்தால், அதனை தமிழர் தரப்பு ஏற்றுக் கொள்ளும் நிலையில் இருக்குமா? இதையேனும் அவர் சிந்திக்காமல் விட்டது ஆச்சரியமானது.

 

-கபில்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.