குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 27 ம் திகதி சனிக் கிழமை .

வெளியுலகை வெறுக்கும் ஆதிவாசிகள்! கால்வைத்த அமெரிக்கா கதைமுடித்த அம்பு !!

23.11.2018-உலகின் மிகப்பழையான ஆதிவாசிகளில் அந்தமான் சென்டினல் தீவில் வாழும் ஆதிவாசிகள் கூட்டமும் ஒன்று. ஆபிரிக்காவில் இருந்து முன்னொருகாலத்தில் புலம்பெயர்ந்த இவர்கள் அந்தமான் தீவுக்கூட்டத்தை தமது வாழ்விடமாக்கினார்கள்.

வெளியுலக தொடர்பு ஏதுமற்றுத்தான் அவர்கள் வாழ்ந்துவருகின்றனர். வெளியுலகமனிதர்களின் சுவாசம் பட்டால் ஏற்படக்கூடிய நோய்களில் இருந்தும் இவர்கள் தாக்குப்பிடிக்கமுடியாது.

சாதாரண நோய்களுக்குரிய நோய் எதிர்ப்பு சக்தி இவர்களுக்கு இல்லையென்பதால் வெளியாட்கள் அவர்களைத் தொடர்புகொண்டால் அது அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்தாக அமையுமென்பதால் அவர்களது தனிமை பேணப்படுவதை இந்தியா கடுமையான சட்டமாக்கியுள்ளது.

பொதுவாகவே வெளியுலகமனிதர்களை கண்டால் மூர்க்கம் கொண்டவர்காக இந்த ஆதிவாசிகள் மாறிவிடுவார்கள். இதனால் வெளியார் அந்தத் தீவை நெருங்குவதுகூட தடை செய்யப்பட்டுள்ளது. ஆயினும் இந்தவிடயத்தில் அமெரிக்காவில் இருந்து சென்ற யோன் ஆலன் சாவ் என்ற 26 வயதாக கிறிசுதவ மதப்பரப்புரையாளர் செய்த விசப்பரீட்சை அவரது உயிரையே குடித்துவிட்டது

ஆதிவாசிகள் பகுதிக்கு படகு மூலம் செல்லமுயன்ற இவர் அம்பு எய்து கொல்லப்பட்டார்.முன்னரும் ஒரு முறை இவர் அங்குசெல்லமுயன்றார். கடலில் இருந்தபடி என் பெயர் யோன். நான் உங்களை நேசிக்கிறேன். இயேசு உங்களை நேசிக்கிறார்"என ஆதிவாசிகளை பார்த்து கத்தினார். ஆனால் அவர்களில் ஒருவர் எறிந்த அம்பு அவரது வேதாகமத்தை துளைத்தது. ஆனால் இந்தமுறை அவரது உயிரேபோனது .

கொல்லப்பட்டவரின் உடலை மீட்க்கும் வகையில் இந்தியா உலங்குவானூர்த்தி ஒன்றையும் கப்பலொன்றையும் அந்தப் பகுதிக்கு அனுப்பியிருந்தாலும் அதில் சென்றவர்களும் திடுதிப்பாக தரையிறங்கமுடியாது.

கொல்லப்பட்ட மதப்பரப்புரையாளர் யோன் ஆலனின் குடும்பம், பழங்குடியினரை மன்னித்துவிடுவதாக அறிவித்துள்ளது சென்டிலீசுசு பழங்குடிகள் மீது யோன் ஆலனுக்கு அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.