குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, ஆனி(இரட்டை) 22 ம் திகதி சனிக் கிழமை .

பிறப்பு சான்றிதல் பெறுவது , பெயர் மாற்றம் செய்வது எப்படி? இது இலங்கையருக்கான முக்கிய பதிவு

22.11.2018-தற்போதைய பிறப்பு சான்றிதழில் மாற்றம் செய்தல்

தகுதி

• செயலகத்தின் கோட்ட எல்லைக்குள் பிறந்த இலங்கையினர் பிறப்புச் சான்றிதழில்; அப்பகுதியின்கோட்டச் செயலகத்தில் மாற்றம் செய்வதற்கு தகுதியானவர்கள்.

 

• 21 வயதுக்கு மேல் இருந்தால், நீங்கள் உங்களுக்காக விண்ணப்பிக்கலாம்.

 

• 21 வயதுக்கு கீழ் இருந்தால், விண்ணப்பத்தை பாதுகாவலர் விண்ணப்பிக்க வேண்டும்;.

 

• உதாரணமாக பின்வரும் நிபந்தனைகளில் கீழ் சான்றிதழில் மாற்றம் செய்யலாம்;.

 

– பிறப்பு சான்றிதழிலுள்ள தவறை திருத்தல்

 

– பெயரில் மாற்றம் செய்தல்

 

– பிறப்பு சான்றிதழில் தந்தை பெயரை சேர்த்தல்

 

– பிறப்பை பதிவு செய்த பின் பெற்றோர்கள் திருமணம் செய்திருந்தால், பிறப்பு சான்றிதழில் அத்தகவல்களை ஏற்றிக் கொள்ளலாம்.

 

– ஒரு தனிமனிதர் தன்னுடைய பெயரை

 

மாற்றவிரும்பினால், அவர் மாற்றவிரும்பும் பெயரை உள்ளுர் நாளிதழில் பிரசுரித்திருக்க வேண்டும்.

 

மாற்றப்பட்ட பெயரை ஒரு ஆண்டு முழுவதுமாக பயன்படுத்திய பின் தன்னுடைய பெயரை மாற்றியதற்கான நிரூபணம் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட இணைப்பு ஆவணங்களையும் ஒப்படைத்து புதிதாக மாற்றப்பட்ட பிறப்பு சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.

 

சமர்ப்பிக்கும் முறைகள்:-

 

-விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல் -விண்ணப்பதாரர் விண்ணப்பபடிவத்தை விசாரணைப் பிரிவு அல்லது தொடர்பான கோட்ட செயலக பதிவாளரிடமிருந்து பெறலாம்.

 

-விண்ணப்பதாரர் விண்ணப்ப படிவத்தை தயாரித்து பூர்த்தி செய்தல்

 

இணைப்பு ஆவணங்கள்:-

 

விண்ணப்பதாரர் 18 வயதுக்கு குறைவாக இருந்தால்:

 

• வேண்டுகோள் கடிதம்

 

• பெற்றோரின் திருமண சான்றிதழின் பிரதி

 

• தற்போதைய பிறப்பு சான்றிதழின் பிரதி

 

• தந்தை / தாய் பிறப்பு சான்றிதழ்

 

• பெற்றோரின் திருமணச் சான்றிதழ்\

 

• கிராம சேவகர் சான்று அளித்த கடிதம்

 

• விண்ணப்பதாரர் பள்ளி மாணவராகயிருந்தால் என்று பள்ளியின் சான்று கடிதம்

 

• தாய் / தந்தை / அல்லது பாதுகாவலரிடமிருந்து கடிதம்

 

வேண்டப்படும் மாற்றமானது விண்ணப்பதாரரின் பெயர் மாற்றமென்றால் மேலும் விண்ணப்பதாரர் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருந்தால் பின்வரும் ஆவணங்களையும் கூடுதலாகச் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும்:

 

• பத்திரிக்கையின் விளம்பரம்

 

• கிராம சேவகர் சான்று அளித்த கடிதம்

 

• சகோதரர் மற்றும் சகோதரிகளின் பெயர்களுடன் கூடியப் பிறப்பு சான்றிதழ்கள் (பொருந்தியிருந்தால்)

 

• திருமண சான்றிதழ் மற்றும் குழந்தைகளின் பிறப்புசான்றிதழ்(திருமணமாகியிருந்தால்)

 

• தேர்தல் பட்டியல்

 

• அடையாள அட்டை

 

• வங்கி ஆவணங்கள்

 

• வேலை சான்றிதழ்

 

• மாற்றியப் பெயர் உள்ள பணம் செலுத்திய இரசீது

நிரூபணத்திற்காக வேறு ஏதேனும் ஆவணங்கள்

விண்ணப்பத்தை ஒப்படைத்தல்

விண்ணப்பதாரர் பதிவாளரிடம் நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது பதிவாளரின் முகவரியிடப்பட்ட தபால் முத்திரை ஒட்டப்பட்ட உறையுடன் தபாலில் அனுப்ப வேண்டும

 

குறிப்பு:

 

-விண்ணப்பத்தை பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்ப வேண்டும்.

 

-மாற்றம் செய்யப்பட்டப் பிறப்புச் சான்றிதழ்; விண்ணப்பதாரருக்கு அஞ்சல் மூலம் அனுப்பபடும்

 

விண்ணப்பங்கள் ஏற்றுக்கோள்ளும் நேரம்:

மு.ப. 9.00 மணி முதல். – பி..ப. 12.30மணி வரை

 

பி..ப. 1.00மணி முதல்– பி..ப. 4.45மணி வரை

 

படிப்படியான வழிமுறைகள்(தற்பொழுது உள்ள பிறப்புச் சான்றிதழை திருத்தம் செய்தல்)

 

படி 1: பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்வதாய் இருந்தால் விசாரணைப் பிரிவு அல்லது கோட்ட செயலக பதிவாளரிடமிருந்து சம்பந்தப்பட்ட விண்ணப்பப்படிவத்தைப் பெறுதல் வேண்டும்.

 

குறிப்பு:

 

வயது மற்றும் மாற்றத்திற்கு தேவைப்படுமு; விபரத்தை பொறுத்து படிவ விபர பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள பெற வேண்டிய வகை மாறுபடும்.

 

படி 2: விண்ணப்பதாரர் விண்ணப்பப்படிவத்தைத் தயாரித்து பூர்த்தி செய்தல் வேண்டும்.

 

படி 3: விண்ணப்பதாரர் தேவையான ஆவணங்களை தயாரித்தல் வேண்டும்.

 

குறிப்பு:

 

விண்ணப்பதாரருடைய வயதை மற்றும் மாற்றத்திற்கு தேவைப்படும் விபரத்தை பொறுத்து சமர்ப்பிக்கும் முறைப் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள தேவையான இணைப்பு ஆவணங்கள் மாறுபடும்.

 

படி 4: விண்ணப்பத்தை கோட்ட செயலகத்திற்கு அஞ்சல் மூலம் அனுப்புதல் அல்லது கோட்ட செயலகத்தில் உள்ள பதிவாளரிடம் நேரடியாகவோ ஒப்படைத்தல் வேண்டும்.

 

குறிப்பு:

 

விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாகவோ / நேரடியாகவோ முத்திரையிடப்பட்ட உறையின் மூலம் வழங்க வேண்டும்.

 

படி 5: கோட்ட செயலகம் விண்ணப்பத்தைப் பெற்று செயல்முறைப்படுத்தி மற்றம் ஏற்றுக்கொள்ளக்கூடிய தேவையான ஆவணங்களையும் சரிப்பார்த்தல்.

 

படி 6: விண்ணப்பதாரர் பிறப்புச் சான்றிதழை தபால் மூலம் பெறுவார்.

 

குறிப்பு :

விண்ணப்பதாரர் நிராகரிக்கப்பட்;டால், பதிவாளர் விண்ணப்பத்தை அஞ்சல் மூலமாக விண்ணப்பதாரருக்கு அனுப்பி, அதற்குரிய காரணங்களையும் குறிப்பிடுதல் வேண்டும்.

 

காலக்கோடு:

 

செயல் முறை காலக்கோடு

 

புதிய பிறப்பு சான்றிதழ்கள் தயார் செய்து 2 அல்லது 3 நாட்களுக்குள் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும், விண்ணப்பதாரர் உண்மையான பிறப்பு சான்றிதழின் பதிவு திகதிளை குறிப்பிட்டிருப்பின் எளிய முறையில் ஆவணங்கள் ஆய்வு செய்யப்படும்.

 

குறிப்பு: உதாரணத்திற்கு ஆய்வு செய்யப்படும் தகவல்கள் கிடைக்கப் பெறவில்லை எனில், மனித வளத்தின் கீழ் கிடைக்கப்பெறும் பொதுவான நேரத்தை காட்டிலும் அதிகமாகும். விண்ணப்பத்தினுடைய செயல்முறைகளும் தாமதமாகும்.

 

சமர்ப்பிக்க வேண்டிய காலக்கோடு

 

படி 1: விண்ணப்ப படிவம் பெறுதல்

விண்ணப்ப படிவம், விசாரனை பிரிவு அல்லது கோட்ட செயலகத்தின் பதிவாளரின் வேலை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

 

வேலை நாட்கள்– திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை விரும்பத்தக்கது)

 

கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள் – மு.ப 9.00மணி முதல் ந.ப 12.30மணி வரை பி.ப 1.00மணி முதல் பி.ப 3.00மணி வரை

 

விடுமுறை நாட்கள் – அணைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள்

 

படி 2: விண்ணப்ப படிவத்தை சமர்ப்பித்தல்

விண்ணப்பத்தை நேரடியாக சமர்ப்பித்தால் காலம் வீனாகாது.

 

விண்ணப்பத்தை அஞ்சல் மூலம் அனுப்புவதால் அதன் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சென்றடைவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் அதிகமாகும்.

 

வேலை நாட்கள – திங்கட்கிழமை – வெள்ளிக்கிழமை (திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமை விரும்பத்தக்கது)

 

கருமபீடம் திறந்திருக்கும் நேரங்கள – மு.ப 9.00மணி முதல் ந.ப 12.30மணி வரை பி.ப 1.00மணி முதல் பி.ப 3.00மணி வரை

 

விடுமுறை நாட்கள – அணைத்து பொது மற்றும் வணிக விடுமுறை நாட்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய காலக்கோடு வாழ்நாள் முழுதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது

சேவை தொடர்பான கட்டணங்கள்

பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்வதற்கு முத்திரை வரி மட்டுமே செலுத்த வேண்டும்.

 

• தாயின் பெயரை மாற்றுவதற்கு, தந்தையின பெயரை திருத்துதல் அல்லது பெற்றோர்கள் திருமணமானவர்கள் என்பதை பிறப்புச் சான்றிதழில் சேர்ப்பதற்கு முத்திரை வரி ரூபா 5 / –

 

• உரிமையாளரின் பெயரானது பிறப்பு சான்றிதழில் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ள பெயரை அவரே திருத்தம் செய்வதற்கு – முத்திரை ரூபா 5/-(பதிவு செய்யப்பட்ட திகதியிலிருந்து ஒரு வருடத்திற்கு நீட்டிக்கப்பட்டது.)

 

குறிப்பு: ஒரு ஆண்டு கழிந்திருக்கலாம் ஆனால் இரண்டு ஆண்டு ஆகியிருக்க கூடாது – முத்திரை வரி ரூபா 5/-

 

உரிமையாளர் பெயரானது பிறப்பு சான்றிதழில் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ள பெயரை உரிமையாளர் அல்லாத வேறு நபர் உரிமையாளருக்கு பதிலாக திருத்தம் செய்வதற்கு – முத்திரை வரியாக ரூபா 5 சிறி (இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்க கூடாது)

 

குறிப்பு: பதிவிலிருந்து இரண்டு ஆண்டை கடந்திருப்பின் ரூபா 5/சிறிக்கான முத்திரைதால் ஒட்ட வேண்டும்.

 

தேவையான இணைப்பு ஆவணங்கள்

இணைப்பு ஆவணங்களுடன் பின்வருவன வற்றையும்

 

சேர்க்க வேண்டும்:

விண்ணப்பதாரர் 18 வயதிற்கு குறைவானவராக இருந்தால்,

 

• வேண்டுகோள் கடிதம்

 

• பெற்றோரின் திருமண சான்றிதழின் பிரதி

 

• தற்போதைய பிறப்ப சான்றிதழின் பிரதி

 

• தந்தை / தாயின் பிறப்பு சான்றிதழ்

 

• பெற்றோரின் திருமண சான்றிதழ்

 

• கிராம சேவகரிடமிருந்து சான்றழிக்கப்பட்ட கடிதம்

 

• விண்ணப்பதாரர் இப்பொழுதும் பள்ளி; மாணவர் எனில் பள்ளியிலிருந்து சான்றழிக்கப்பட்ட கடிதம்

 

• தாய் / தந்தை / அல்லது பாதுகாவலிடமிருந்து கடிதம்

மாற்றத்திற்கான வேண்டுகோளானது, விண்ணப்பதாரரின் பெயரை மாற்றுவதாக இருப்பின், விண்ணபதாரர் 18 வயதிற்கு மேற்ப்பட்டவராக இருக்க வேண்டும், கீழ்கானும் ஆவணங்களுல் கூடுதல் ஆவணங்களையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும:.

 

• செய்தித்தாள் விளம்பரம்

 

• கிராம சேவகரிடமிருந்து சான்றழிக்கப்பட்ட கடிதம்

 

• சகோதரிகள் மற்றும் சகோதரர்களின் பெயர் பட்டியல் மேலும் அவர்களுடைய பிறப்பு சான்றிதழ் (கிடைக்க பெற்றால்)

 

• குழந்தையின் திருமண சான்றிதழ் மற்றும் பிறப்பு சான்றிதழ்(திருமணமாகியிருந்தால்)

 

• வாக்காளர் பட்டியல்

 

• அடையாள அட்டை

 

• வங்கி ஆவணங்கள்

 

• வேலைக்கான சான்றிதழ்

 

• பெயர் திருத்துவதற்காக ஏதேனும் கட்டணம் செலுத்தியிருப்பின் அதற்கான பற்றுச் சீட்டு.

 

• வேறு ஏதேனும் நிருப்பித்தலுக்காக இருக்கும் ஆவணங்கள்

 

மறக்காமல் விருப்பு அல்லது  பகிர்வு செய்யுங்கள் - உங்களுடைய ஒரு பகிர்வால் ஆல் பலர் பயனடையலாம்.