குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தொடர் கட்டில் உறவில் வரும் நன்மைகள்

19.11.2018-திருமணமான சில நாட்களுக்கு கணவன்-மனைவி இருவருமே அதிகமாக உடலுறவில் ஈடுபடுவது வழக்கம். ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்பது போல், உடலுறவு என்றால் இவ்வளவு தானா என்ற அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டுவிடும். இதனால் உடலுறவு மீதுள்ள ஆர்வம் குறைய ஆரம்பித்துவிடும்.

 

தற்போது திருமணம் என்பதில் நம்பிக்கை இல்லாமல் புரிதலிலேயே வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. வாழ்க்கை உறவில் இருப்பவர்கள் கூட தினசரி உடலுறவு வைத்துக் கொள்வதில்லை. வாரம் 2 அல்லது 3 முறை மட்டுமே உடலுறவில் ஈடுபடுகின்றனர். அதுவும் இல்லை.

அடிப்படையாக  அவசியமாகக்கருதப்படும் உடலுறவை சில இணையர்கள் வேண்டுமென்றே தள்ளிப்போடுவதும் உண்டு. அதிகளவில் உடலுறவில் ஈடுபட்டால் உடல்நலம் குன்றிவிடும், ஆண்மை குறைவு ஏற்படும் என்ற அச்சத்தில் சிலர் உடலுறவை தள்ளிப்போடுவதாக ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. ஆனால், இது முற்றிலும் தவறான புரிதல் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இடைவெளிவிட்டு உடலுறவு வைப்பவர்களை காட்டிலும், நாள்தோறும் உடலுறவுக் கொள்ளும் ஆண்களின் உடம்பில் உள்ள உறுப்புகள் சிறப்பாக செயல்படுவதுடன், ஆரோக்கியமான விந்து உருவாக உதவுகிறது. இதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கிறது. நாள்தோறும் உடலுறவு கொள்வதனால் விந்துகள் வெளியேறி புதிய விந்து செல்கள் உருவாகின்றன. மேலும், ஆணின் விந்து பைகளில் உள்ள விந்துக்களின் வாழ்நாள் அதிகரிக்கிறது. உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கவும் உதவுகிறது.

ஆண்கள் நீண்ட நாட்களுக்கு உடலுறவு கொள்ளாமல் இருப்பதனால், அவர்களது விந்துகளில் உள்ள டி-என்-ஏக்கள் சேதமடைகின்றன. இதனால் பெண்கள் கருத்தரிப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்

இதனால் எந்த காரணமும் காட்டாமல் தினசை உடலுறவுக் கொண்டு, வாழ்க்கையை ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாக உங்கள் துணையுடன் மகிழந்துவாழுங்கள்.