குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

சூழலும் அரசியலும் நிலஅபகரிப்பும். 20.10. 2018

19.11.2018-இது அரசியல் உரையல்ல ஆன்மீக உரையல்ல அவற்றுக்கும்மேலான அறிவியல் வாழ்வியல் உரை இப்படியான உரையை இதுவரை அரசியல் சாக்கடைவாதிகள் தந்ததும் இல்லை இவைபற்றி ஆழமான அறிவைக் கொண்டிருந்தும் இல்லை. நிலப்பறிப்பு சரியாக விளங்கவைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா ஐரோப்பியர்களின் நாடு என்றதும் ஒருகணம் திகைத்தேன் மறுகணம் அது செவ்விந்தியர்களின் நாடு அவர்களின் நிலங்கள் நாடே எங்களைப்போல் அழிக்கப்ட்டு வந்தேறிகளால் கபடமாக அபகரிக்கப்ட்டதை விபரித்தவிதம் அருமை. 3 ஆம் வகுப்பில் சூழல்பாடத்தில்  உணவு  உடை  இருப்பிடம் கற்றோம். இந்த அடிப்படை அறிவுதெரியாத தமிழ்கட்சித்தலைவர்கள் பா.உ கள். எப்படியும் கட்சிகளை வென்று அடுத்தவனை  வழுத்தி தாங்கள் மட்டும்  பாராளுமன்ற இருக்கைகளை  அபகரிக்கும் கபடஅரசியலைமட்டும் கொண்டவர்களால் அழிந்ததை தமிழர்கள் இன்னும் உணரவில்லை. இந்தமூன்றின் கையாளுகைத்தொழில்கள் தமிழர்களிடம் இல்லை அரிசி ஓரளவு உடை இசுலாமியர்கள்  கட்டிட- வீட்டுக்கட்டுமானத்தில் தமிழர்கள்  அறவே இல்லை.

சுண்டிக்குளம் மண்டைதீவுக்கற்றாளை தீவகக்கற்றாளைக்கதை கிட்டுப்பப்பா மாணவர் நாள் இவ்விடயங்கள் அருமை அன்றைகாலத்திலும் துணிவாக இப்படிக்கருது்துத் தெரிவிக்க ஒருதிறாணிவேண்டும்.

அதைமாற்றவர்களும் செய்திருந்தால் அவையெல்லாம் இன்றும் நிலைத்திருக்கும் அவரும் வாழ்ந்திருப்பார். அதைவிடுத்து துதி புகழ்பாடும் ஒட்டுண்ணிகள் தங்கள் புகழுக்காக இனத்தின் புகழை பெரிய போராட்ட அமைப்பை அறிவுரைகள் வழங்காது அடிவருடிகளாக இருந்து கெடுத்தார்கள்.தளபதிகளைப்பிரித்தார்கள் இடைவெளிகளை  ஏற்படுத்தகாரணமாக  இருந்தார்கள் சிரித்துசிரித்து தான்மட்டும் அருகில் இருக்கவேண்டும் என்ற  நப்பாசையால்.

இன்றும் தலைவர்வழியில் என்போர் பலருக்கு தலைவர் வழியென்றால் என்னவென்று தெரியாது. கைதட்டல் தங்கள் புகழ் உணர்ச்சி வசப்படுத்தலுக்கு சொல்லித்திரிகின்றார்கள்.

அறிவியல் அறம் அருமையான தமிழ்ச் சொல் இப்படி தமிழ்பண்தமணிகள் யாழ்பல்கலைக்கழகத் தமிழ்துறையினர்களே அருந்தமிழ் பாவிப்பதில்லை. வாழ்க தமிழ்! துமிழ்க்கடவுளில்லாக் கடவுளின் பெயர்கொண்ட தமிழியல் பற்றாளனுக்கு வாழ்த்துகள். இதனையும் தமிழர்கள் துக்கி எறியவல்ல அறியவே இதில்குறிப்பிடுகின்றேன். அறிய அறிய தவறுகள் அகலும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.