குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு ஒபாமா உயர் மரியாதை உ.ஆ.தேர்தல் வடிவேலு சுவிசு, ஆசுதிரியாவுக்கு இந்திய

30.09.2011.திருவள்ளுவராண்டு.2042- மூன்று அமெரிக்க இந்தியர்கள் நாட்டின் உயர்ந்த கௌரவத்தைப் பெற்றனர். ஒருவர் ஆராய்ச்சியாளர். மற்ற இருவர் கண்டுபிடிப்பாளர்கள். இம்மூவருக்கும் அவரவர்களின் துறைகளில் சாதனை படைத்ததற்காக ஒபாமா கௌரவமளித்துப் பாராட்டினார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளராகத் திகழும் சிறினிவாச எசு.ஆர்.வரதன், நாட்டின் தலைசிறந்த ஏழு ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக அறிவியல் தேசிய விருது பெற்றார்.

மற்ற இருவரும் ஐஐடி அலும்னி உறுப்பினர்கள். பர்ச்சூ பல்கலையின் ராகேச் அகர்வால் வடக்கு கரோலினா மாகாண பல்கலையின் சயந்த் பலிகா இருவரும் நாட்டின் தலையாய ஐந்து கண்டுபிடிப்பாளர்களில் இருவராகத் திகழ்ந்து பாராட்டு பெற்றனர். நேற்று இரவு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இவர்களைப் பாராட்டி விருது வழங்கினார்.
 
உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்திலும் களமிறங்குவாரா வடிவேலு

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கைலைட்டாக அமைந்தது நடிகர் வடிவேலுவின் பிரச்சாரம்.
விசயகாந்துக்கு எதிராக அவர் செய்த அந்தப் பிரச்சாரம் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக இருந்தாலும் போகப் போக நாசமாகி அவர் திரையுலக வாழ்க்கையை தற்காலிக ஓய்வு கொள்ள வைத்தது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் வடிவேலு சினிமாவை விட்டே ஒதுங்கிவிட்டார் எனும் அளவுக்கு அமைதியாக உள்ளார். இத்தனைக்கும் இன்றும் தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் கொமெடியன் அவர்தான். அவரை வைத்துப் படமெடுக்க இயக்குநர்கள் பெரும் ஆர்வத்தோடு இருந்தாலும் அவரிடம் போக முடியாமல் தவிக்கிறார்கள்.

இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் சூடுபிடித்துள்ளது. இந்தத் தேர்தலிலும் அவர் திமுகவுக்கு ஆதரவாக களமிறங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்பாவது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தார் விஜயகாந்த். இப்போதோ அவரே ஒரு கூட்டணிக்குத் தலைமை வகிப்பதால் நீங்கள் பிரச்சாரம் செய்ய எந்த தயக்கமும் இல்லையே முதல்வரும் கூட இதை அமைதியாக ரசிப்பாரே என்று வடிவேலுவிடம் எடுத்துக் கூறினார்களாம்.

இன்னொரு பக்கம் விஜயகாந்த் அணியை மட்டும் குறிவைத்துப் பிரச்சாரம் மேற்கொள்ள முடியுமா என முக்கிய பிரமுகர் ஒருவரிடமிருந்தும் வடிவேலுவுக்கு தூது வந்ததாகச் சொல்கிறார்கள்.

ஆனால் வடிவேலு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லையாம். நமது பிரச்சாரம் எதிர்மறை விளைவைத் தந்துவிடுமோ என்ற நினைப்பு அவருக்கும் இருப்பதால் யோசித்து ஒரு முடிவைச் சொல்வதாகக் கூறியுள்ளாராம்.எதற்கும் ஒரு முறை கருணாநிதி மற்றும் முக அழகிரியை பார்த்துவிடவும் வடிவேலு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சுவிசு, ஆசுதிரியாவுக்கு இந்தியசனாதிபதி பயணம்.
சனாதிபதி பிரதிபா பாட்டீல் எட்டு நாள் அரசு முறைப் பயணமாக இன்று சுவிட்சர்லாந்து மற்றும் ஆசுதிரியா நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
முதலில் சுவிட்சர்லாந்து செல்லும் சனாதிபதி பிரதிபா அங்கு அக்டோபர் 4ம் திகதி வரை தங்கியிருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தம் உட்பட பல விஷயங்கள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதுதவிர இரு தரப்பு பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கிறார். சுவிட்சர்லாந்து பயணம் முடித்து அக்டோபர் 4ல் ஆசுதிரியா செல்லும் பிரதிபா அங்கு 7ம் திகதி வரை தங்கியிருப்பார். அங்கு இரு தரப்பு உறவுகள் உட்பட பல விஷயங்கள் குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

சனாதிபதியுடன் இந்தியத் தொழில் வர்த்தக சபை சம்மேளனத்தின் தலைவர் கே.கே.மோடி தலைமையிலான 45 பேர் கொண்ட வர்த்தகக் குழுவும் செல்கிறது.

அத்துடன் மத்திய பார்லிமென்ட் விவகார இணை அமைச்சர் ராயிவ் சுக்லா மற்றும் எம்.பி.க்கள் சிலரும் உடன் செல்கின்றனர்.

சனாதிபதியின் இந்தப் பயணத்தின் போது சில ஒப்பந்தங்கள் கையெழுத்தாகலாம் என வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் கூறினார். சுவிட்சர்லாந்தில் தங்கியிருக்கும் போது காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2ம் திகதி யெனிவாவில் உள்ள காந்தி சிலைக்குச் சென்று அஞ்சலி செலுத்துவார்.
 
 


 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.