குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, கார்த்திகை(நளி) 10 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஸ்பெக்ட்ரம் இழப்பு ஆ.ராசா மட்டுமேதான் குற்றவாளியா? - வசந்தன்.

29 .09 2011  புலி வாலைப் பிடித்த கதையாகி விட்டது.ஸ்பெக்ட்ரம் வழக்கு. தென்னிந்தியாவைச் சார்ந்தவர்கள் அதிலும் குறிப்பாக திமுகவைச் சார்ந்தவர்கள். அதிலும் குறிப்பாக கருணாநிதி குடும்பத்தினர்தான் இத்தனை பெரிய ஊழலுக்கு காரணமானவர்கள் என்று ஊதிப் பெருக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த வருடத்தின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை சுமார் நாற்பது நாட்கள் எதிர்கட்சிகள் முடக்கிப் போட்டதன் விளைவு ஸ்பெக்டரம் விவாகரத்தில் மத்திய அரசு சில கைது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி வந்தது. தமிழகத்தில் சில முக்கிய பிரமுகர்களின் இல்லங்களில் நடத்தப்பட்ட சிபிஐ சோதனையோடு இது முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெருந்தலைகள் மூவர் தமிழகத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி, கலைஞர் டிவி செயல் அதிகாரி உடபட மூவர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் உள்ளனர் பல மாதங்களாக, கைது செய்யப்பட்டிருக்கிறவர்கள் நிரபராதிகளோ இல்லையோ ஆனால் குற்றம் சுமத்தப்பட்டுள்ள எவர் ஒருவருமே தன்னை நிரபராதி என்பதை நீரூபிக்கத்தான் போராடுவார். கனிமொழி, ஆ.ராசா விவாகரத்தில் அவர்கள் தாங்கள் நிரபராதிகள் என்பதை நிரூபிக்க நீதிமன்றத்தில் விவாதித்தாலே அது பல பெருந்தலைகள் உருளும் நிலையை உருவாக்கி விட்டது. ஆ.ராசா, கனிமொழி மீதான வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்ற போதெல்லாம் அவர்கள் தங்கள் வழக்கிற்கு சாட்சியமாக பிரதமர் மன்மோகன்சிங்கையும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தையும் இழுக்கிறார்கள் என்பதிலிருந்து பிரச்சனை துவங்குகிறது.

 ஸ்பெக்டரம் ஊழலா? இழப்பா?
.......................................................
நேற்று வரை எதிர்கட்சிகளும் பெரும்பலான ஊடகங்களும் ஸ்பெக்டரம் விவாகரத்தை ஊழல் என்றும் ஸ்கேண்டல் என்றுமே சொல்லி வந்தன அதாவது ஊழல்.என்றுதான் பிரச்சாரப்படுத்தின. தமிழகத்தில் திமுகவின் படு தோல்விக்கு ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சாரமும் பெரும் பங்காற்றியது. இந்திய அரசின் தலைமை தணிக்கை அதிகாரிகள் ஸ்பெக்டரம் விவாகரம் சூடு பிடித்ததும் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் 2007-ஆம் ஆண்டில் அரசுக்கு  1,76,000 கோடி இழப்பீடு ஏற்பட்டதாக  தலைமை தணிக்கை அலுவகத்தின் வினோத் ராய் என்னும் ஒரு அதிகாரி மதிப்பீடு செய்த தொகை இதுதான். ஆனால் இப்போது இந்த தொகையில் உண்மையில்லை என்று இந்திய தலைமை தணிக்கை அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட விவரத்தின் அடிப்படையில் வினோத் ராய் மதிப்பீடு செய்த தொகைக்கு எந்த முகாந்திரங்களும் இல்லை என்றும் தெரிகிறது.  தலைமை தணிக்கை அதிகாரியோ ரூபாய் 2,645 கோடி மட்டுமே இழப்பீடு ஏற்பட்டிருப்பதாக அரசுக்கு தெரிவித்திருக்கிறார். டிராய் அமைப்பின் மதிப்பீடும், தணிக்கை அலுவலகத்தின் மதிப்பீட்டிற்கும் பாராதூரமான வித்தியாசங்கள் இருக்க ஸ்பெக்ட்ரம் தொடர்பாக அறிக்கை கொடுத்துள்ள டிராய், தணிக்கை அலுவலகம் உள்ளிட்ட எல்லா அமைப்புகளுமே இழப்பீடு என்றுதான் அதைச் சொல்கின்றனவே தவிற ஊழல் என்று எங்குமே சொல்லவில்லை. ஆனால் நீதிமன்ற நடவடிக்கைகள் மக்களிடம் பூதாகரப்படுத்திக் காட்டும் ஒரு சொல்தான் ஊழல்.

 ஆதாயம் அடைந்தவர்கள் யார்?
..........................................................
இந்த ஊழலில் அல்லது இழப்பீட்டில் ஆதாயம் அடைந்தவர்கள் யார்?என்பது அடுத்த கேள்வி. அரசுக்கு இழப்பீடு என்றால் அந்த இழப்பீடு யாருக்கு லாபமாக மாறியது என்ற கேள்விகளை நமது வசதிக்காக மறந்து விட்டோம். டாடா டெலிகாம், ரிலையன்ஸ், யூனினார் உள்ளிட்ட பல் வேறு தனியார் பெருமுதலாளிகள் சம்பந்தப்பட்டதுதான் இந்த ஸ்பெக்டரம். இந்த வழக்கில் இழப்பீட்டை ஏற்படுத்திய ஆ.ராசா வுக்கு சிறை என்றால் அந்த இழப்பீட்டை பெற்றுக் கொண்ட இந்த நிறுவன அதிபர்களுக்கு என்ன தண்டனை என்று கேட்டால். அதை தொழிலதிபர்களின் திறமை என்கிறார்கள். அதாவது அரசை ஏமாற்றி கொள்ளை லாபத்திற்கு அள்ளிச் செல்வது இவர்களின் திறமையாம். இந்த நிறுவனங்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்ட அரசியல்வாதிகள் திறமைக்குறைவானவர்களாம். இதுதான் ஸ்பெக்டரம் விவாகரத்தில் அரசு சொல்லவரும் நீதி.  ஆனால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஆ.ராசா சொல்வது மிகவும் எளிமையான வாதம்தான். முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற விதி கடந்த பிஜேபி ஆட்சியிலேயே உருவாக்கப்பட்டது. அதைத்தான் நான் கடைபிடித்தேன். அது தயாநிதிமாறனுக்கும் தெரியும். நான் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறேன் என்றால் எனக்கு முன்னர் இந்தப் பதவியில் இருந்தவர்களும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். தவிறவும் இது நான் தனி ஒருவனாக எடுத்த முடிவல்ல நான் எடுத்த முடிவுகள் பிரதமருக்கும் உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கும் தெரியும் என்று சொல்கிறார். ஆ.ராசா நீதிமன்றத்தில் இந்த விவாதங்களைச் சொல்ல சொல்லத்தான் சிதம்பரமும், பிரதமரும் இந்த வலைக்குள் வருகிறார்கள். திமுகவைச் சார்ந்தவர்கள் மட்டுமே தொடர்புடையது என்ற ஸ்பெக்டரம் ஊழலின் உண்மை முகம் இப்போது ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக்கிறது.

 

சிக்கிக் கொண்டார் சிதம்பரம்.........................................................

 நீதிமன்ற விவாதம் துவங்கிய உடனேயே ஆ.ராசா 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் எடுக்கப்பட்ட எல்லா முடிவுகளும் அப்போதைய நிதியமைச்சரும், இப்போதைய உள்துறை அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கும் தெரிந்துதான் எடுக்கப்பட்டது என்றும். ஆனால் அதே நேரத்தில், சிதம்பரத்தை குற்றவாளியாக்க முயவில்லை என்றும், அவருக்கும் எல்லாமும் தெரியும் என்று மட்டுமே கூறுவதாகவும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார். ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அப்போதைய நிதியமைச்சர் சிதம்பரத்துக்கும் ராசாவுக்கும் எந்த கருத்து வேறுபாடும் இருக்கவில்லை. மேலும் ஸ்பெக்ட்ரம் விற்பனை என்பது மத்திய அமைச்சரவை ஒட்டுமொத்தமாக எடுத்த முடிவு. இந்த விஷயத்தில் ராசா குற்றவாளி என்றால் ஒட்டுமொத்த அமைச்சரவையையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டும். 2003ம் ஆண்டு மத்திய அமைச்சரவை எடுத்த முடிவு தான், அடுத்தடுத்து வந்த அரசுகள், அடுத்தடுத்து நடந்த அமைச்சரவைக் கூட்டங்களில் வழி மொழியப்பட்டது. உண்மை இப்படியிருக்க ராசா மட்டும் எப்படி குற்றவாளியாக்கப்பட்டார்?.  இதனால் பிரிவு 311ன் கீழ் அமைச்சர் ப.சிதம்பரத்தையும் அழைத்து விசாரியுங்கள். பிரதமரின் முன்னிலையில் அவர் ராசாவுக்கு அட்வைஸ் தந்தாரா இல்லையா என்பதைத் தெரிவிக்கட்டும். அதன் பின்னர் தேவைப்பட்டால் பிரதமரையும் அழைத்து விசாரியுங்கள்.என்பதுதான் ஆ.ராசாவின் வாதம்.ஆ.ராசாவின் வாதங்கள் மிகப்பெரிய அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில். சுப்ரமண்யஸ்வாமி என்பவர் உச்சநீதிமன்றத்தில் சிதம்பரத்தையும் ஸ்பெக்டரம் வழக்கில் விசாரிக்க வேண்டும் என்று மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில் ப்ரணாப் முகர்ஜியின் அலுவலகத்தில் இருந்து பிரதமர் அலுவகத்திற்கு இது தொடர்பாகச் சென்ற கடிதத்தை நீதிமன்ற ஆவணச் சாட்சியாமாக தாக்கல் செய்தார். அந்த கடிதத்தில் சிதம்பரம்தான் ஸ்பெக்டரம் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் கொடுத்தார் என்கிறது அந்தக் கடிதம். இக்கடிதம் வெளியான சில மணி நேரங்களிலேயே இந்தியாவின் அனைத்து எதிர்கட்சித் தலைவர்களும் சிதம்பரத்தை பதவி விலக் கோரினார்கள் தமிழக முதல்வரும் அவரை பதவி நீக்கம் செய்யக் கோரினார். ஆனால் அப்போது இந்திய பிரதமர் அமெரிக்காவில் இருந்து சிதம்பரத்தோடு பேசி சமாதானம் செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.சிதம்பரத்தை காப்பாற்றுவதில் பிரதமரும், சோனியாகாந்தியும் தீவீரமாக இருப்பது உறுதியாகத் தெரிந்து விட்ட நிலையில், மத்திய அரசு சிதம்பரம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்த சில மணி நேரத்தில் சிபிஐ தலைமையோ சிதம்பரத்தை நாங்கள் விசாரிக்க மாட்டோம் எங்களுக்கு யாரும் உத்தரவிட முடியாது என்று விட்டது. அதாவது யாரை விசாரிக்க வேண்டும். எப்படி விசாரணையைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதை சிபிஐ விசாரிக்கும் என்பதைத்தான் சிபிஐ சொல்லியிருக்கிறது. சொன்னதோடு மட்டுமல்லாமல்  2ஜி ஊழல் விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா, அரசுக்கு நம்பிக்கை துரோகம் செய்ததாக சிபிஐ புதிய குற்றச்சாட்டை பதிவு செய்தது. இந்திய தண்டனைச் சட்டம் (Indian Penal Code) பிரிவு 409-ன் கீழ் இந்த புதிய குற்றச்சாடடை சிபிஐ சுமத்தியுள்ளது.இதற்கு முன் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமே 7 ஆண்டுகள் வரைதான் சிறை தண்டனை கிடைக்கும் என்ற நிலை இருந்தது.இந் நிலையில் இப்போது கூறப்பட்டுள்ள இந்த புதிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ராசாவுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் சிபிஐ வழக்கறிஞர் யு.யு.லலித் இந்த புதிய குற்றச்சாட்டை சுமத்தும் மனுவை தாக்கல் செய்தார். அதில் ராசா தவிர அவரது முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா மீதும், முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்க் பெகுரா மீதும் நம்பிக்கை துரோக குற்றச்சாட்டை சிபிஐ சுமத்தியுள்ளது. மேலும் திமுக எம்பி கனிமொழி, ஸ்வான் டெலிகாம், யூனிடெக் வயர்லெஸ் ஆகியோர் மீது 409-வது பிரிவின் கீழ் அத்துமீறல் (criminal breach) மற்றும் 120பி பிரிவின் கீழ் சதித் திட்டம் தீட்டுதல் (criminal conspiracy) ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகளை சிபிஐ சுமத்தியுள்ளது.மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளிலும் சிபிஐ குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளது.இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து திரும்பிய பிரதமர் மன்மோகன்சிங் தயாநிதிமாறனைச் சாடி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்தக் கட்டுரையில் ஆ.ராசாவுக்கோ, கனிமொழிக்கோ, மாறனுக்கோ வக்காலத்து வாங்கும் நோக்கம் இல்லை. ஆனால் விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் நோக்கமும்.

 எங்கே போய் முடியும்.

........................................அவர்களே இதைத் துவங்கினார்கள். ஆ,ராசா, கனிமொழி உள்ளிட்ட சில கீழ் மட்ட அதிகாரிகளை பலியாக்கி விட்டு இதை நிறுத்திக் கொள்ளலாம் என நினைத்தார்கள். ஆனால் இது முடியாத கதையாக நீண்டு கொண்டிருக்கிறது. சிபிஐ இந்த வழக்கில் ஆ.ராசா உள்ளிட்ட எவரும் வேறு எவர் பெயரையும் இழுக்கக் கூடாது என நினைக்கிறது. உண்மையிலேயே இதில் தொடர்புடைய பலரையும் ஆ.ராசா உள்ளிட்டவர்கள் இழுக்கும் போது புதிய வழக்குகளைப் போட்டு சிபிஐ அச்சுறுத்துகிறது என்றே தெரிகிறது. ஆனால் இந்த வழக்கில் பல அதிகார வர்க்கங்களைக் காப்பாற்றுவதற்காக களமிரங்கியிருக்கும் சிபிஐ என்பது இந்தியாவின் மிக உயர்ந்த விசாரணை அமைப்புதான். ஆனால் அதை விட உயர்ந்த அமைப்பாக உச்சநீதிமன்றம் இருக்கிறது. ஒன்றிலோ ஆ.ராசாவை, கனிமொழியை ஜாமீனில் விட வேண்டும். அல்லது முழுமையாக இதில் எவர் எல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்களோ அவர்கள் அனைவரையும் விசாரிக்க வேண்டும்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.