குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

உள்ளுராட்சித் தேர்தல்களிலும் தமிழர் கவனம் செலுத்துதல் வேண்டும்.வெளியில் தெரியாது செயல்படல் அவசியம்.

28 .09. 2011   யாழ்ப்பாண புலமையாளர் ஒன்றியத்தின் வேண்டுகோள். வடக்கு, கிழக்குப் பகுதிகளில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளுராட்சித் தேர்தல்களில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு பெரும்பான்மையான உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றியதன் மூலம் தமிழர் தேசிய இன அடையாளத்தைப் பேணியதுடன் எமது 'இறைமை'யை எம்மவர்களிடமே கொடுப்போம் என்ற உறுதி பேணப்பட்டது. இதனால் இந்தியா உட்பட சர்வதேசமும், ஜ.நாவும் தமிழர் தேசியப்  பிரச்சினையைத் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்தான் பேசித் தீர்க்க வேண்டுமென்று இலங்கை அரசை வலியுறுத்தி வருகின்றன. உள்ளுராட்சித் தேர்தல் மூலம் நல்லதோர் செய்தியை நாம் உலகிற்கு சொல்லி யதன் விளைவே இதுவாகும்.

                         அதேபோன்று வலுவான செய்தியை தென்பகுதி உள்ளுராட்சித் தேர்தல்களில் மார்ச் 8 இல் நாம் வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம். முக்கியமாக கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் தமிழர் ஆட்சியதிகாரத்தைப் பெறக்கூடிய அரிய வாய்ப்பு உள்ளது. இணக்க அரசியல் என்ற ஏமாற்று வார்த்தைக்கு விலைபோகாது தெளிவாகச் சிந்தித்து துணிவுடன் திரு மனோ கணேசனின் தலைமையிலான மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்து தமிழர்கள் விலைபோகாதவர்கள், தன்மானம் உள்ளவர்கள், வரலாறுகளை மறக்காதவர்கள் என்பதை கொழும்பு நகர மக்கள் நிலைநிறுத்துதல் வேண்டும்.
 
                          தெகிவளை – கல்கிசை தேர்தலில் இன்று தமிழர்களுக்காக குரல் கொடுக்கின்ற கலாநிதி விக்கிரகபாகு கருணாரத்தினா தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். தமிழர் உரிமைக்காக குரல் கொடுப்பதால் இனவாத சிங்கள வாக்குகளை அவர் இழக்கின்றார் என்பது யதார்த்தமானது. எனவே  எமக்கான தர்ம நியாயத்திற்காக குரல் கொடுப்பவரை நாம் ஆதரிக்க வேண்டும். தென்னிலங்கையின் ஏனைய உள்ளுராட்சித் தேர்தல்களிலும் தமிழர்கள்; தமிழர்கள் சார்பாகக் குரல் கொடுக்கும் கட்சிகளையே ஆதரிக்க வேண்டும்.
                         தமிழர் முக்கியமாக இரு பெரும்பான்மைக் கட்சிகளான ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கோ(அரசுக் கூட்டணி), ஜக்கிய தேசியக் கட்சிக்கோ ஆதரவளிக்கக் கூடாது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் அது சார்ந்த கூட்டணியும் தமிழர் வரலாற்றில் துன்ப துயரங்களை அளித்ததோடு மோசமான இனவாத அணுகுமுறையையே தமிழர் மேல் காட்டி வருகின்றது. இரவு உடுத்த துணிகளுடன் பலவந்தமாக பஸ்சில் ஏற்றப்பட்டு கொழும்பு வாழ் தமிழர், தமிழ் பெண்கள் வவுனியா நகருக்கு அப்பால் கொண்டுவந்து இறக்கப்பட்ட சம்பவம்  இலகுவில் மறக்க முடியாத வரலாற்று கறையாகும்.  இந்த அரசு மிகவும் மோசமாக தமிழர்களை இம்சைப்படுத்தி - அகௌரவப்படுத்திய நிகழ்வு இதுவாகும். இர்களுக்கும், இவர்களைச் சார்ந்தவர்களுக்கும் தன்மானத் தமிழர் வாக்களிக்கலாமா?
 
பச்சை கட்சியும் சிங்கள பெரும்பான்மை நலன் சார்ந்ததே. அவர்கள் நேரடியாக எதிர்ப்பார்கள். இவர்கள் உடனிருந்து அழிப்பார்கள். முள்ளிவாய்க்கால் படுகொலையை பச்சைக் கட்சி அநியாயம் எனக் குரல் கொடுத்ததா?சர்வதேசம் இந்த அரசை நோக்கி வீசும் கணைகளுக்கு ஆலோசனை வழங்கி அரசை பாதுகாக்கும் செயலில் தான் பச்சை கட்சி செயற்பட்டு வருகின்றது. கடந்த 63 வருடங்களாக மாறி மாறி வந்த நீலக் கட்சியும், பச்சைக் கடசியும் தான் தமிழர்களின் இன்றைய மோசமான நிலைக்கு காரணமானவர்கள். எனவே எந்தத் தமிழனும் இவ் இரு கட்சிக்கும் எக் காரணம் கொண்டும் வாக்களிக்கக் கூடாது.
 
                        தென்பகுதி வாழ் தமிழ் பேசும் மக்களதும், முக்கியமக கொழும்பு வாழ் தமிழ் பேசும் மக்களதும் புலம் பெயர் உறவுகளே! தயவு செய்து உடனடியாக உங்கள் உறவுகளுக்கு இவ் இரு ஆலோசனைகளையும் வழங்குங்கள்.
1. தென்னிலங்கை வாழ் தமிழர்கள் எல்லோரும் தவறாது வாக்களிக்க வேண்டும்.
 
2. கொழும்பில் தமிழர் நலன் பேணும் - விலைபோகா இலட்சியங்களைக் கொண்ட  திரு மனோ கணேசன் தலைமையிலான கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
 
3. ஏனைய பிற உள்ளுராட்சி சபைகளில் தமிழர் உரிமைக்காக குரல் கொடுக்கின்ற கட்சிகளுக்கு வாக்களிக்க வேண்டும். உ-ம் தெகிவளை – கல்கிசை உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கலாநிதி விக்கிரமபாகு கருனாரத்னாவின் குழுவுக்கு வாக்குகளை அளிக்க வேண்டும். வாக்கு என்பது எமது இறைமை சார்ந்தது. அவை எமது உரிமை. வாக்களிக்காதுவிடின் அது எதிரிக்கு சார்பானதாகவே அமையும்.  எனவே தமிழர் நலனை முதன்மைப் படுத்துவோருக்கு வாக்களித்து அமைதிப் புரட்சியை – ஜனநாயகப் புரட்சியை  மார்ச் 8 ஆம் திகதி ஏற்படுத்துவோமாக. 
 
-அகரன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.