குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

யாழ்.அரச அலுவலகங்களில் பெண்களை துன்புறுத்தும் நபர்களின் விபரம் வெளியிடப்படும்!- அரச அதிபர்

சவேந்திர சில்வாவிற்கு இராயதந்திர பாதுகாப்பு காணப்படுகின்றது – அரசாங்கம் 28.09.2011யாழ். குடாநாட்டில் அரச திணைக்கள அலுவலகங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ள நிலையில், அவை தொடர்பான முறைப்பாடுகள் ஆதாரங்களுடன் கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு துன்புறுத்தும் நபர்கள் குறித்த விபரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிடவுள்ளதாக யாழ். அரச அதிபர் இமெல்டா தெரிவித்துள்ளார்.இன்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் அவர் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணத்தில் அரச திணைக்களங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் மற்றும் பாடசாலைகளிலும், பெண்கள் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்பட்டு வருவதாக இதுவரை 126 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் வகையில், பெண்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பான பெயர் விபரங்கள் எம்மிடம் உள்ளன.

எதிர்காலத்தில் அவர்களின் பெயர் விபரங்களை ஊடகங்கள் வாயிலாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப்பொருட் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

சவேந்திர சில்வாவிற்கு இராயதந்திர பாதுகாப்பு காணப்படுகின்றது – அரசாங்கம்
28 .09. 2011  ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான பிரதி நிரந்தரப் பிரதிநிதி சவேந்திர சில்வாவிற்கு இராஜதந்திர பாதுகாப்பு காணப்படுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
சவேந்திர சில்வா வரப்பிரசாதங்களை அனுபவிக்கத் தகுதியுடையவர் என குறிப்பிட்டுள்ளது.
 
எனவே, அவருக்கு எதிராக வெளிநாடுகளில் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது எனவும், அவருக்கு தண்டனை விதிக்க முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளது.
 
ஐக்கிய நாடுகள் மற்றும் வியன்னா பிரகடனங்களின் அடிப்படையில் சவேந்திரா சில்வாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
 
எனவே, சவேந்திர சில்வாவிற்கு இராயதந்திர முழுப் பாதுகாப்பையும் அளிக்க வேண்டியது ஐக்கிய நாடுகள் அமைப்பின் கடமையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இலங்கையை பிரதிநிதித்துவம் செய்யும் ராயதந்திரியான சவேந்திர சில்வாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பு ஐ;கிய நாடுகள் அமைப்பிற்கும், அமெரிக்காவிற்கும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
 
இதேவேளை, சவேந்திர சில்வா தடையின்றி தமது கடமைகளை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென சனாதிபதி மகிந்த ராசபட்ச, ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.