குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 9 ம் திகதி வியாழக் கிழமை .

சிறீலங்கா போர்குற்ற விடயத்தில் ஐ.நாவின் செயற்திறமையின்மைக்கு கனடா கடும் கண்டனம்

27.09.2011-ஐ.நா சபையின் இருப்பும் செயற்திறனும் அது தனது உருவாக்கத்தின் அடிப்படை கோட்பாடுகளை சொல்லில் மட்டுமன்றி செயலிலும் காட்டத்தவறின் இழிநிலைக்கு சென்றுவிடும் என கடும் தொனியில் கருத்துத் தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர்  Nஐhன் பெயட் அவர்கள் அவ்வாறான செயற்திறமையின்மைக்கான உதாரணங்களில் ஒன்றாக சிறு ஒழுங்குவிதியை காரணம் காட்டி தெரிவிக்கப்பட்ட முறைப்பாட்டை ஏற்று சிறீலங்காவில் புரியப்பட்ட நம்பிக்கைக்குரிய முறைப்பாடுகளைக் கொண்ட போர் குற்ற அறிக்கை குறிந்து மேலதிக நடவடிக்கை எடுப்பதை ஐ.நா தவிர்த்தது என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.


தற்போது நியூயோர்க்கில் நடைபெற்றுவரும் 66வது ஐ.நா கூட்டத்தொடரில் கனடிய அரசின் சார்பில் செப்டம்பர் 26ஆம் நாள் திங்கட்கிழமை மாலை பொதுச்சபையில் பேசும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ் ஐ.நா கூட்டத் தொடாரில் சிறீலங்கா குறித்து பொதுச்சபையில் கருத்துத் தெரிவித்த ஒரே நாடு கனடா என்பதுவும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் கொள்கைகளை செயற்படுத்துவதில் காட்டிவரும் முன்னுக்கு பின் முரணான செயற்பாடுகளால் தாழ்வு நிலைக்குச் செல்வதை கனடா தொடர்ந்தும் எதிர்த்து வந்துள்ளதாக தெரிவித்த கனடிய வெளிவிவகார அமைச்சர் அதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன்னர் தென்னாபிரிக்க இனவெறி அரசை கொமென்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் சேர்த்துக் கொள்வதற்கு கனடா தெரிவித்த எதிர்ப்பை சுட்டிக் காட்டியுள்ளார்.

கனடிய பிரதமர் ஸ்ரீபன் காப்பர் சிறீலங்காவின் நிலைமைகளில் பாரிய மாற்றம் ஏற்படவில்லையாயின் தான் அங்கு 2013இல் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மகாநாட்டில் தான் கலந்துகொள்ளப்போவதில்லை எனப் பகிரங்கமாக அண்மையில் அறிவித்திருந்தமை இங்கு நினைவு கூரத்தக்கது. ஓக்டோபர் மாதத்தில் 2011இற்கான கொமன்வெல்த் நாடுகளின் மகாநாடு அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில் இங்கு சிறீலங்கா விடயம் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதிற்கான முன்னறிவித்தலாகவே கனடிய வெளிவிவகார அமைச்சரின் ஐ.நா உரை கொள்ளப்படுகின்றது.

ஐ.நா சபையின் பெரிய எதிரிகள் அதன் செயற்பாடுகளை வெளிப்படையாக குறை கூறுபவர்கள் அல்ல மாறாக அமைதியாக அதன் கொள்கைகளை உதாசீனம் செய்பவர்கள் இன்னும் மோசமானவர்கள் ஒன்றுமே செய்யாமல் ஐ.நா கீழ்நிலைக்கு செல்வதை பார்த்துக்கொண்டிருப்பவர்கள் நாங்கள் அவ்வாறு அமைதியாக இருக்கமுடியாது என மேலும் தெரிவித்தார் கனடிய வெளிவிவகார அமைச்சர் Nஐhன் பெயட் அவர்கள்.

நாடுகளின் தனித்துவத்தை கனடா மதித்தாலும் சிறுபான்மையினருகான மனித உரிமைகள் அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றபோது முகத்தை திருப்பிக் கொண்டு மறுபக்கம் பார்க்க மாட்டோம் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைக்காக குரல் அடக்கப்பட்டவர்களின் குரலாக ஒலிப்பது எம் அனைவரின் பொதுக்கடமை எனவும் அவர் தனதுரையில் மேலும் தெரிவித்துள்ளார்.

சமீபகாலமாக கனடிய வெளிவிவகார கொள்கையில் சிறீலங்கா குறித்து தொடர்ச்சியாக வெளிப்பட்டுவரும் பல்வேறு மாற்றங்களின் தொடர்ச்சியாகவே கனடிய வெளிவிவகார அமைச்சரின் ஐ.நா உரையும் பலரால் கொள்ளப்படுகின்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.