குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

சனாதிபதி மகிந்த ராயபட்ச கொழும்பு திரும்பினார்!!!

  27.09.2011- ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்குகொள்வதற்காக நியூயோர்க் சென்றிருந்த சனாதிபதி மகிந்த ராயபட்ச இன்று செவ்வாய்கிழமை காலை கொழும்பு திருப்பினார். டுபாய் ஊடாக இன்று காலை 5.00 மணியளவில் சனாதிபதி கொழும்பு திரும்பியதாக சனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

நியூயோர்க்கில் இருந்த காலத்தில் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் உட்பட பல உலகத் தலைவர்களைச் சந்தித்ததுப் பேசிய சனாதிபதி ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்திலும் உரையாற்றியிருந்தார்.

இலங்கைப் போரின் இறுதிக்காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில்சனாதிபதிக்கு எதிராக வழக்கு ஒன்றும் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அவரது நடமாட்டம் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருந்தது.

அதேவேளையில், மீண்டும் ஒரு தடவை அமெரிக்காவுக்குச் செல்வதென்பதும் சனாதிபதிக்குப் பிரச்சினையாக அமையலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் வாழ்வியலின் பெருமையை உலகறியச் செய்யும் கலங்கரைக் கோபுரம்

27.09.2011-திருவள்ளுவராண்டு.2042-யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையும் கலைக்கேசரியும் இணைந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடத்திவரும் யாழ்ப்பாண வாழ்வியல் சார்ந்த பொருட்காட்சி,

எங்கள் பெருமை மிகு வாழ்வின் அடையாளச் சின்னங்களை அறிவதற்கும் அடையாளம் காட்டுவதற்கும் ஆவணப்படுத்துவதற்கும் பெருந்துணையாக அமையும் என்பதில் எந்த மிகைப்படுத்தலும் இல்லை.

தமிழினம் தனது வரலாற்றுப் பெருமைகளை பேணுவதிலும் சான்றாதாரப்படுத்துவதிலும் தவறி விட்டதென்ற குற்றச்சாட்டுக்களின் மத்தியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறையும் கலைக் கேசரியும் இணைந்து யாழ்ப்பாண வாழ்வியல் சார் பெருமையின் ஓர் அம்சமாக பொருட்காட்சியைக் காண்பிப்பது; எங்கள் இனத்தின் பெருமையை, அதன் சிறப்பை, தொழில் நுட்பத்திறனை, கலைத்துவப்படைப்பை, வாழ்வியலின் நுட்பத்தை, தெய்வீகப் பொருண்மையை எங்கள் இளம் சமூகம் கண்டறியவும், அதனூடு எங்கள் வாழ்வியலின் உயர் பண்பாட்டுப் பெறுமானத்தை உணரவும் இப் பொருட்காட்சி உதவும் என்பது திண்ணம். ஓர் இனம் தனது மூதாதையர்களின் வாழ்வியலின் அம்சங்களை அறியாமல்-உணராமல் இருக்குமாயின் அந்த இனம், பற்றற்ற-நாடோடித் தன்மையுடைய இனமாக மட்டுமே இருக்கும்.

அதுமட்டுமன்றி, அத்தகைய இனங்கள் இனத்துவ அம்சங்களில் இருந்து விலகிச் சென்று விடும் என்பதும் வரலாற்று உண்மை. தமிழினத்தைப் பொறுத்தவரை அந்த இனம் மிக நீண்டதும் தொன்மையானதுமான வரலாற்றுப் பெருமைக்குச் சொந்தமான இனம் என்பது மறுக்க முடியாத உண்மை. எனினும் எங்கள் வாழ்வியலின் அடையாளச் சின்னங்கள் கிலோக்கணக்கில் நிறைசெய்யப்பட்டு ஐந்து, பத்துரூபாய்க்கு விலை போய் ஏ-9 வீதி கடந்து தென்பகுதி செல்கின்ற வேதனையின் மத்தியில், அத்தகைய பொருட்கள் தென்பகுதியில் முலாமிடப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்களைக் சம்பாதித்துக் கொடுக்கும் தகவல்களின் வெதும்பலில், எங்கள் பெருமையை நாங்கள் அறிவோம்.

மற்றவர்களுக்கு அறிவிப்போம் என்ற உயரிய சிந்தனையில் இடம்பெறும் இப்பொருட்கண்காட்சி, அற்புதமான-அறிவு பூர்வமான - தூர நோக்குடைய சாதனைச் செயல் எனலாம். இந்தக் கண்காட்சி எங்கள் வாழ்வியலின் பெருமையை உலகறியச் செய்யும் வெளிச்சத்தின் கலங்கரைக் கோபுரம் என்ற பெருமிதத்தோடு இதன் கட்டுமானத்திற்காக உழைத்த அத்தனை பேரின் பணியும் மெய்ம்மை குன்றாத போற்றுதற் குரியன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.