குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

ஈழத்தின் இருதய பூமியில் நடந்த நில அபகரிப்பு தமிழ்மாறன். அரோகரா கொக்கிளாய். புத்தம்சரணம் கச்சாமியாகி

 27.09.  2011-திரவள்ளுவராண்டு.2042-  ஈழத்து நிலத்தில் இன்னொரு சிங்களக் குடியேற்ற அராஜகம் நடந்து விட்டது. எதற்காக ஈழத் தமிழர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்களோ அதன்மீது தொடர்ந்தும் இலங்கை அரசு தனது நடவடிக்கைகளை செய்து கொண்டேயிருக்கிறது. ஈழத்து மண்ணில் நில அபகரிப்பினால் எழும் ஈழத் தமிழர்களின் கொந்தளிப்பு சாதாரணமானது கிடையாது.  ஈழப் போராட்டம் என்பது நிலத்திற்கான போராட்டம். எந்த நிலத்திற்காக ஈழத் தமிழினம் போராடியதோ அந்த நிலத்தை ஆக்கிரமித்து அரசியல் செய்வதில்தான் இலங்கை அரசின் கவனம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வாழும் நிலத்தை ஆக்கிரமித்து அந்நியக் குடிகளை குடியேற்றம் செய்வது என்ன நியாயம்? ஈழத் தமிழர்களின் நெஞ்சில் அடித்து வதைக்கும் நிகழ்வாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி அதே ஆக்கிரமிப்புப் புத்தியில் சிங்கள அரசு சிங்களக் குடியேற்றத்தை செய்திருக்கிறது.
 
ஈழத்தின் இருதய பூமியாக முக்கியம் பெறுகிறது கொக்கிளாய் நிலம். கொக்கிளாய் என்ற பிரதேசம் வடக்கு கிழக்கு என்ற தமிழர்களின் தாயகத்தில் வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசம். ஈழத்தின் வடக்கில் முல்லைத்தீவிலிருந்து ஈழத்தின் கிழக்கு நோக்கிய திசையில் முடிவிடமாகி கிழக்கில புல்மோட்டையுடன் கொக்கிளாய் இணைகிறது. இருதயத்தை அபகரித்தலைப் போலவும் இருதயத்தை கொலை செய்தலைப் போலவும் பெரும் ஆக்கிரமிப்பு அரசியல் நோக்கோடு சிங்களக் குடியேற்றத்தை இலங்கை அரசு செய்திருக்கிறது. ஒற்றை ஆட்சி என்ற பெயராலும் மனிதாபிமான இலங்கை என்ற பெயராலும் நடத்தப்படும் இந்த அநீதிகள் எந்தவிதமான மாற்றங்களும் இன்றித் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.
 
கொக்கிளாயில் 1983இல் அதாவது ஈழப் போராட்டம் வெடித்த கால கட்டத்தில் தமிழ் மக்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்கள். மூன்று மணிநேர அவகாசம் கால கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்கள். அதை வெளியேற்றப்பட்டார்கள் என்பதைவிட துரத்தியடிக்கப்பட்டார்கள் என்றே கொக்கிளாய் மக்கள் குறிப்பிடுகிறார்கள். அன்று துரத்தியடிக்கப்பட்ட மக்களில் பலர் இடம்பெயர்ந்து புலம்பெயர்ந்து இன்னும் தங்கள் சொந்த நிலத்திற்குத் திரும்பாமல் தவிக்கின்றார்கள். 28 ஆண்டுகளுக்கு பின்னர் கொக்கிளாய் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுகிறார்கள் என்று ஊடகங்களில் பிரகடனம் செய்து கொண்டு விழாக்களை நடத்திய அரச தரப்பினர் பெரும் சாதனையாக அந்த மீள்குடியேற்றத்தை நடத்தினார்கள். 28 ஆண்டுகளாக அழிக்கப்பட்டு மூடி வைக்கப்பட்டு ஏதுவுமற்றிருக்கிற அந்த நிலப்பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் மக்கள் மீளக் குடியிருத்தப்பட்டார்கள்.
 
கொக்கிளாய் இராணுவத்தினரால் ஏன் மூடி வைக்கப்பட்டிருக்கிறது அல்லது முழுமையாக ஏன் முற்றுகையிடப்பட்டிருக்கிறது என்பது இப்பொழுது தெளிவாக தெரிய வந்திருக்கிறது. 28 ஆண்டுகளின் பின்னர் மீள்குடியேற்றம் என்ற பிரகடனத்துடன் மக்கள் ஏன் அங்கு கொண்டு செல்லப்பட்டு மணல் வெளிகளில் காடுகளில் விடப்பட்டார்கள் என்பதும் தெரிய வந்திருக்கிறது. 28 ஆண்டுகளின் பின்னர் தங்கள் கிராமத்தில் வாழ நுழைந்த மக்கள் பார்த்த அதிர்ச்சி முகத்துவாரம்தான். முகத்துவாரத்தின் முழு அதிகாரமும் சிங்கள மக்களிடத்தில் வழங்கப்பட்டிருந்தது. அங்கு 300 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டிருந்தன. காலம் காலமாக வாழ்ந்து வந்த தங்கள் நிலத்தில் அதன் வளங்களைச் சுறண்டிக் கொண்டு சிங்கள மக்கள் அத்துமீறிய குடியேற்றம் செய்யப்பட்டு வாழ்வதைப் பார்த்த தமிழர்கள் குமுறினார்கள்.

 கொக்கிளாய் பௌத்த கோவில்
 
கொக்கிளாய் மற்றும் கொக்குத் தொடுவாய் பிரதேசத்தில் சிங்கள மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்பட இருப்பதாகவும் அங்குள்ள தமிழர்களின் தொழில் புலங்களில் அவர்களுக்கு அதிக உரிமைகளை பகிர்ந்தளித்து கொடுக்க இருப்பதாகவும் மக்களின் காதுகளுக்கு எட்டிய கதைகள் அவர்களை பெரும் அதிர்ச்சக்கு உள்ளாக்கியது. சிங்களவர்கள் ஒரு கோயிலைக் கூட விடுகிறார்களில்லை என்று தனது நிலத்தைப் பிரிந்து 28 ஆண்டுகளின் பின்னர் மீள வந்திருந்த மேரி லூசியா என்ற இளம் பெண் தெரிவித்தார். காலம் காமாக அவர்கள் வணங்கி வந்த கிறிஸ்த ஆலயத்தைகூட இன்று சிங்களவர்கள் கைப்பற்றியிருக்கிறார்கள். ஒரு சிறுமியாக அந்தக் கிராமத்தைவிட்டுப் பெயர்ந்த மேரிலூசியா இன்று இடம்பெயர்ந்த காலத்தில் தனது தந்தைiயும் இழந்து தனியே தனது பூர்வீக நிலத்திற்கு மீள வந்திருக்கிறார். 
 
தங்களின் மீன்பிடி உரிமை முழுமையாக சிங்களவர்களிடத்தில் கொடுக்பட்டுள்ளதாக மேரிலூசியா தெரிவித்தார். தனது தந்தை காலம் காலமாக தொழில் செய்து வந்த கரையை இப்பொழுது சிங்களவர்கள் கைப்பற்றி தொழில் செய்வதுடன் அந்தக் கரை தமக்குச் சொந்தமானது என்றும் சொல்லுகிறார்கள். இந்த விடயம் பற்றி பிபிசி ஒரு செய்தியை ஒலிபரப்பியிருந்தது. தமிழர்களின் மீன்பிடி உரிமை தொடர்பில் கேட்கப்பட்ட பொழுது அங்கு சிங்களவர்களும் முப்பது வருடங்களாக மீன்பிடிக்கிறார்கள் என்றும் அவர்களுக்கும் உரிமை இருக்கிறது என்றும் அவர்களுக்கும் தொழில் புலம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனாரத்தன தெரிவித்தார்.
 
இப்படியெனில் அன்று கொக்கிளாயில் இருந்து இதற்காகவா ஈழத் தமிழ் மக்கள் துரத்தப்பட்டார்கள்? ஈழத் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலங்களிலிருந்து அவர்களைத் துரத்தியடித்துவிட்டு அங்கு சிங்கள மக்களைக் குடியேற்றியது இந்த சட்டதிட்டத்தை பேசுவதற்காகவா? இதுதான் ஈழத் தமிழர்களின் வாழ்க்கையை நெருக்குகிறது. இந்த அணுகுமுறைதான் ஈழத் தமிழர்களைப் போராடத் தூண்டியது. ஈழத்து நிலத்தை முழுமையாக கொள்ளையடிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இலங்கை அரசிடம் கிடையாது. இந்த அரசியல் புத்தி ஊட்டப்பட்ட படைகள் அதற்கு ஏற்ப செயற்படுகின்றனர். இந்த அரசியலை முன்னெடுக்கும் அமைச்சர்களும் அரச எம்.பிக்களும் எப்பொழுதும் இதையே கூட்டாக முன்னெடுக்கின்றனர். காலமும் அரசும் மாறிய பொழுதும் இந்த ஆக்கரமிப்பு கொள்கை மாறாது தொடருகிறது.
 

 சிங்கள பாடசாலை
 
அண்மையில் கொக்கிளாயில் 44 சிங்களக் குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளன. ஏற்கனவே 37 குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் குடியேற்றப்பட்டுள்ளார்கள். இதுவரையில் 82 குடும்பங்கள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன. 300 குடும்பங்களுக்கு காணிகளைப் பகிர்நதளிப்பேன் என்ற சத்தியப் பிரமாணத்தை செய்த உதவி அரசாங்க அதிபர் ஒருவர் தொடர்ந்தும் எப்படிக் காணிகளைப் பகிர்ந்தளிப்பது என்று சிங்களக் குடியேற்றத்திற்கு விசுவாசமாகத் துடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சிங்கள மக்கள் காணிகள் அற்ற மக்களா? அல்லது இந்தப் பிரதேசத்தின் பூர்வீகக் குடிகளா? ஏன் இந்த மக்கள் ஈழத் தமிழர்களின் நிலத்தில் வந்து குடியேற வேண்டும்? இவர்கள் நிலமற்ற மக்களா? அப்பாவி சிங்கள மக்கள் புத்திச் சலவை செய்யப்பட்டு பலியாக்கப்பட்டுள்ளார்கள்.
 
இந்த மக்களும் சிங்களப் பேரினவாத அரசின் அரசியலுக்காக - அதிகாரத்திற்காக பலியாக்கப்பட்;டுள்ளார்கள். ஈழத் தமிழர்களுக்கு என்று தனித்துவமான நிலம் இருக்க் கூடாது என்றும் அப்படித் தனித்துவமா நிலம் இருந்தால் தமிழர்களிடத்தல் பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி அதிகாரங்கள் சென்றடைந்துவிடும் என்றும் ஈழத் தமிழர்கள் தங்கள் உரிமையை தொடர்ந்தும் கேட்பார்கள். அதற்கு குரல் கொடுக்க அவர்களுக்கு பிரதிகள் உருவாகுகிறார்கள். அதைத் தடுக்க வேண்டும் என்றும் தனித்துவமான மொழி பண்பாட்டு அடையாளங்கள் கொண்ட வாழ்வை வாழும் ஈழத் தமிழர்களின் சந்ததிகள் ஈழ நிலத்தில் தொடரக் கூடாது என்று இன அழிப்புத் திட்டத்தைக் கொண்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. முள்ளிவாய்க்காலில் ஈழத் தமிழர்கள் கொத்துக் கொத்தாய் கொன்று குவிக்கப்பட்டு வெற்றி கொண்டாடிய அதே ஆக்கரமிப்பு இன அழிப்பு அரசியலே இந்தக் குடியேற்றங்களையும் தமிழர் நிலத்தில் திணிக்கிறது.
 
மணலாறு என்ற வடக்கு கிழக்கின் இருதய பூமியை வெலி ஓயா என்று பெயரை மாற்றிச் சூட்டி நிலத்தையும் அதன் அதிகாரத்தையும் அபகரித்து சிங்களக் குடியேற்றங்களை செய்து தமிழர்களற்ற கிராமங்களாக்கியிருக்கிறார்கள். தமிழர்கள் மணலாறு என்ற பூர்வீக நிலத்தை இழந்திருந்த அதிர்ச்சி நிலையில் இப்பொழுது கொக்கிளாயை இழக்கிறார்கள். அக்கரைவெளி, முந்திரிகைக்குளம், கலியாணபுரம் போன்ற இடங்களில் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்களைத் தொடர்ந்து எஞ்சியிருந்த தமிழ்ப் பிரதேசங்களான கொக்கிளாய் மேற்கு, கொக்கிளாய் கிழக்கு, புளியமுனை, தென்னமரவாடி ஆகிய கிராமங்கள் சிங்களப் பெயர்களுக்கு மாற்றம் செய்யப்பட்டு இப்போது சிங்களக் குடும்பங்கள்  குடியேற்றப்பட்டுள்ளன.  கொக்கிளாயில் .அரசால்  வெலிஓயா என்ற பிரதேச செயலக பிரிவை புதிதாக உருவாக்கப்படுகிறது. ஆந்த பிரதேச செயலக பிரிவில் 8 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளடங்குகின்றன. அவற்றில் குமுளமுனை, தண்ணிமுறிப்பு, அளம்பில், கருநாட்டுக்கேணி போன்ற கிராமசேவையாளர் பிரிவுகளும் உள்ளடங்குகின்றன.  இதில் உள்ளடங்கும் தமிழ்க் கிராமங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டப்பட்டு இந்தப் பிரதேச செயலாளர் உருவாக்கப்படுகிறது.  கொக்கிளாயில் குடியேறிய சிங்கள மக்களின் பதிவுகள் திருகோணமலை  கண்ணியா அரச அதிபர் பிரிவில் அடக்கப்பட்டது. இப்பொழுது சிங்கள மக்களுக்காக சிஙகள பேரினவாத அதிகாரத்தைக் கொண்ட உதவி அரச அதிபர் பிரிவு உருவாக்கப்பட இருக்கிறது. 
 
சிங்கள மீன்வாடி
 
கொக்கிளாயின் அபகரிப்பு என்பது மிகவும் அபாயகரமானது. ஈழத் தமிழ் இனத்தின் இருப்பையும் வடக்கு கிழக்கு இணநை;த தமிழர் தாயகத்தின் எதிர்கால அரசியலையும் இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டது. வடக்கையும் கிழக்கையும் இணைக்க வேண்டும் என்ற ஈழத் தமிழர்களின் கோரிக்கையை சிதைக்க பேரினவாத அரசியல் பெரும் பொறியாக கொக்கிளாயில் புதைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொறி பெரும் அபாயரமாக ஒருநாள் வெடிக்கப் போகிறது. ஈழத்து நிலத்தை சிதைக்கப் போகிறது. தொடர்ந்தும் இந்த ஆக்கிரமிப்பை தமிழர் தாயகம் எங்கும் பேரினவாத அரசு செய்ய திட்டமிட்டு வருகிறது. நாம் இழக்க முடியாத இருதயத்தைப் போல கொக்கிளாயின் அபாய நிலை ஈழத் தமிழினத்தின் மூச்சை தாக்குகிறது. ஈழத் தமிழர்களின் முழுவாழ்வையும் இந்தக் குடியேற்றம் பாலியாக்கும் திட்டம் கொண்டது.
 
இன்னும் திருந்தாத அரசிடம் இனி எந்த அணுகுமுறைகளைக் காட்டுவது? பேசுவதற்கும் பேசித் தீர்ப்பதற்கும் என்ன இருக்கிறது? இந்த நாட்டில் சிங்கள மக்கள் என்ன காரணத்தைச் சொல்லிக் கொண்டு எங்கும் குடியேறலாம் என்றும் அவர்களின் என்ன செயற்பாட்டை எங்கும் நிகழ்த்தலாம் என்றும் ஊக்குவிக்கப்படும் பொழுது ஈழத் தமிழர்கள் என்ன வெளிப்பாடுகளைக் காட்ட வேண்டும்? இந்த நாட்டில் ஒடுக்கப்படும் ஒரு இனத்தின் விடுதலையை எப்படி மீட்பது? இந்த நாட்டில் நிலத்திற்காகப் போராடும் ஈழத்து மக்கள் என்ன செய்வது? எல்லா அணுகுமுறைகளும் எல்லாத் தியாகங்களும் வெளிக்காட்டிப் போராடிய ஈழத் தமிழினம் இன்று இப்படித்தான் பல வகையில் அழிக்கப்படுகிறது. பல வகையில் ஒடுக்கப்டுகிறது. பல வகையில் நிலத்திலிருந்து பிடுங்கப்படுகிறார்கள். கொடிய அரசியலை எதிர்கொள்ளுகிறார்கள்.
 
1960களில் கொக்கிளாயில் சிங்கள மக்கள் வாழ்ந்தார்கள் என்று சிங்களக் குடியேற்றத்திற்கு விசுவாசமான உதவி அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். சிங்களக்குடியேற்றத்திற்கு எந்தக் காரணத்தையாவது சொல்லி குடியேற்றத்தை செய்து முடித்து தனது பதவி பெற்றலுக்கான நன்றியுணர்வை காட்ட வேண்டும் என்று அவர் இப்படி வரலாறு பேசுகிறார். இது எத்தகைய கொடியது? ஒட்டுமொத்த இனத்திற்கும் இழைக்கும் துரோகமே. இந்த அத்துமீறிய குடியேற்றத்தை விரும்பாத அந்த நிலத்தின் பூர்வீகத் தமிழ் மக்கள் முற்கூட்டியே அவரது நடத்தையை குறித்து குறிப்பிட்டிருந்தார்கள். சிங்களக் குடியேற்றம் செய்வேன் என்று ஒப்பந்தம் செய்து கொண்டு பதவியைப் பெற்று வந்து மீள்குடியேறிய மக்களுக்கு எந்த அடிப்படை வசிதிகளையும் செய்து கொடுக்காமல் காலத்தை இழுத்துக் கொண்டு சிங்களக் குடியேற்றத்திற்காக பல வகையிலும் இயங்கியிருக்கிறார். தனது பதவிக்காக தாய் நிலத்தையே இந்த அதிகாரி விற்றிருக்கிறார். தனக்காக இந்த நிலத்தில் பல்லாயிரம் மக்களைக் கொன்றிருக்கிறார். இது எத்தகைய கொடுமை? இன்று சிங்களப் பேரினவாத அரசினது கொக்கிளாய் சிங்களக் குடியேற்றதர்தின் குரலாக ஒலித்துக் கொண்டிருக்கிறர்ர.
 
கொக்கிளாய் என்ற ஈழத்து நிலப் பிரதேசத்தில் சிங்கள மக்கள் எப்படி வந்தார்கள்? தெற்கில் வசதி வாய்ப்புக்களுடன் சொத்துச் சுகங்களுடன் வாழ்ந்து வந்த மக்கள் 1983இல் ஈழத் தமிழர்கள் அங்கு வெளியேற்றப்பட்டதோடு அது முழுமையான இராணுவக் கட்டுப்பாடு ஆகிய பொழுது கொண்டு வந்து குடியேற்றப்பட்டார்கள். கடந்த 28 வருடங்களாக இராணுவத்தினரால் மூடுண்ட கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்தது. கொக்குத் தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற இடங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் 1990களில் தாக்கிய பொழுதும் அவர்கள் முகத்துவாரத்தை நெருங்கவில்லை. கொக்கிளாய் முகத்துவாரத்தில் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தும் பாதுகாப்பளிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தன.
 
கொக்கிளாய் வளமான நிலப்பகுதி. விவசாய நிலமும், மீன்பிடி ஆறும், நிறைந்த குளமும் எல்லாவற்றையும்விட மீன்பிடி வளம் நிறைந்த கடல் பிரதேசத்தையும் கொண்டது. இந்த நிலத்தை 1983இலேயே சிங்கள இராணுவத்தினர் குறிவைத்து தமிழர்கள் வெளியேற்றப்பட்ட அன்றைய கால கட்டத்திலேயே சிங்கள மக்கள் குடியேற்றத்திற்கு ஊக்குவிக்கப்பட்டு குடியேற்றப்பட்டனர். மீன் பிடியின் மூலம் சொத்துக்களை சேர்க்கலாம் என்று ஊட்டப்பட்ட புத்தியின் அடிப்படையில் தெற்கிலிருந்து பல சிங்களவர்கள் குடும்பமாக வந்து குடிNறி அங்கு தொழிலில் ஈடுபட்டு வளங்களை அள்ளிச் செல்லத் தொடங்கினார்கள். இன்றுவரை எந்த தடங்கலுமின்றி அவரகள் கொக்கிளாயின் வளங்களை அள்ளிச் செல்லுகிறார்கள். இப்பொழுது எல்லா குறிக் கோள்களுடனும் நிரந்தரமாக காணிகள் வழங்கப்பட்டு கொக்கிளாய் பிரதேச மக்களாக அவர்கள் பதிவு செய்யப்பட்டு குடியேற்றம் செய்யப்பட்டுள்ளாதர்கள். தமிழ் மக்களின் வளங்களை நிரந்தரமாக கொள்ளையடிக்க இடமளிக்கப்படுகிறார்கள்.
 

 தமிழ்க் குடும்பம்
 
சிங்கள மக்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு குடியேற்றத்திற்கு ஊக்குவிக்கப் படுகின்றனர். முகத்துவாரத்தில் அவர்கள் வணங்கி வழிபாட்டில் ஈடுபட புத்தர் கோயில் அமைக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது. 15 சிங்கள மாணவர்களுக்காக நான்கு இரட்டை மாடிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. மின்சார வசதி போக்குவரத்து வசதி என்பன செய்து கொடுக்கப்பட்டுள்ளன. புல்மோட்டை வழியாக தெற்கிற்குச் செல்ல தரை வழிப்பாதை இல்லாததினால் கடல் வழியாக சென்றுவர படகு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கடைகள், அலுவலகங்கள் என்பனவும் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன.
 
இதற்கு முற்றிலும் எதிராக இருக்கிறது கொக்கிளாயில் குடியேற்றப்பட்டுள்ள அந்த நிலத்தின் பூர்வீக தமிழ் மக்களின் நிலமை. காலம் காலமாக அந்த நிலத்தில் வாழந்து வந்த பூர்வீகத் தமிழ் மக்கள் ஒடுக்குமுறைப் புத்தியுடன் புறக்கணிக்கப்படுகிறார்கள். அடிப்படை வசதிகள் இல்லாமல் தறப்பாள் கூடாரங்களில் வாழ்கிறார்கள். முல்லைத்தீவு நகரத்திற்கு செல்ல போக்குவரத்து வசதிகள் ஏதுமின்றி வரும் ஒரு சில பேரூந்துகளை நம்பியிருக்கிறார்கள். சுமார் 100 மாணவர்கள் படிக்கிற கொக்கிளாய் பாடசாலை ஒரோ ஒரு ஓலையால் அமைக்கப்பட்ட தற்காலிக கட்டிடத்தில் இயங்குகிறது. வீதிகள் திருத்தப்படாமல் மணலும் பற்றையுமாக இருக்கிறது. தொழிலுக்கு அனுமதிக்கப்படாமல் தொழில் செய்ய கருவிகள் எதுவுமில்லாமல் அந்த மக்கள் கவனிக்கப்படாதிருக்கிறார்கள்.
 

தமிழ் பாடசாலை
 
கொக்கிளாய் நிலத்தில் நிலம் அபகரிக்கப்பட்டு சிங்கள மக்கள் அந்த நிலத்தின் பூர்வீக மக்களாக வரலாற்றில் எழுதப்பட்டுள்ளார்கள். இது ஒட்டுமொத்த ஈழத் தமிழ் இனத்தின் சந்ததிகளையும் அபாயம் மிக்க எதிர்காலத்திற்கு முகம் கொடுக்க வைக்கப் போகிறது. தனிநாட்டிற்காக போராடி அளப்பெரிய தியாகங்களைச் செய்து விடுதலை கேட்டு நின்ற இனத்தின்மீது மாபெரும் அழிப்பை நடத்தி ஒரு சில ஆண்டுகளிலேயே இப்படிச் சிங்களக் குடியேற்றங்களை செய்யும் சிங்களப் பேரினவாத அரசு இந்தக் குடியேற்றங்களையும் ஆக்கரமிப்புக்களையும் செய்து புதுக்கதைகளை எழுதுகிறது என்றால் எதிர்காலத்தில் இவை எப்படி விளையப் போகின்றன? என்றும் அதனால் எங்கள் சந்ததி எப்படி தவிக்கப் போகிறது என்றுமே பெரும் அச்சம் எழுகிறது.
 
கொக்கிளாயில் நடந்தது வெறும் நில அபகரிப்பு அல்ல. ஈழத் தமிழ் இனத்தை நிலத்திலிருந்து துடைத்தெறியும் இன அழிப்பு. உரிமைகளை பறிக்கும் அரசியல் நடவடிக்கை. ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டை அடையாளங்களை அழிக்கும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை. ஈழத் தமிழர் வாழ்வை அழிக்க உரிமைகளைப் பறித்தெடுக்கும் தந்திரங்களைக் கொண்ட இனப்பெயர்த்தழிப்புத் திட்டம். இதை இந்தத் தலைமுறை எப்படிக் கையாளுகிறது என்பதில் ஈழத் தமிழ் இனத்தின் எதிர்காலமும் ஈழத் தமிழ் நிலத்தின் அடையாளமும் உரிமையும் தங்கியிருக்கிறது. ஏனெனில் கொக்கிளாய் நாம் இழந்து வாழ முடியாத நிலம். ஈழம் என்ற நிலத்தின் இருதயத்தை இழந்து நாம் எப்படி வாழ்வது? இந்த நில அபகரிப்பும் சிங்களப் பேரினவாத அரசியல் அதிகாரத் திணிப்பும் ஈழத்து நிலத்தில் இனஅழிப்பு மற்றும் உரிமை பறிப்பின் பொறியாக வைக்கப்படுகையில் இதுவே இன முரண்பாட்டினதும் ஈழத் தமிழ் இனம் எதிர்ப்போராட்டத்தை செய்ய தூண்டத்தக்க வகையில் பெரும் பொறியாகவும் விதைக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.