குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

கொழும்பு மாநகரசபை கொத்தபாயவின் பூரண கட்டுப்பாட்டில்கடாபியாட்சி நடக்கம் சிறுபான்மையினர் சரி.

27 .09. 2011.திருவள்ளுவராண்டு நடக்கும்.பாதுகாப்பு செயலாளரின் பூரண கட்டுப்பாட்டில் கொழும்பு மாநகரசபை கொண்டுவரப்பட்டால் என்ன நடக்கும்விக்கிரமபாகு:-?கடாபியாட்சி நடக்கம் சிறுபான்மையினர் சரி கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் மிலிந்த மொரகொடவை முதல்வர் வேட்பாளராக களம் இறக்கியிருப்பதன் ஊடாக அரசாங்கத்தின் மிகப்பெரியதொரு நிகழை;ச்சி நிரல் பின்னே உள்ளதை யாரும் மறந்துவிடக் கூடாது. தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வெற்றி பெற்று, அரசாங்கத்தின் கைகளுக்குள் கொழும்பு மகநகரசபையின் அதிகாரம் செல்லுமானால் மிலிந்த மொரகொடவெறும் பொம்மையாகவே இயங்க முடியும் அரசாங்கத்தில் இருக்கும் உயர் அதிகாரசக்தியின் நெறிப்படுத்தலின் கீழ் கொழும்பு மாநகரசபை பின்னர் இயங்கும் நிலை ஏற்படும்.
 
தற்போது அமைச்சர் டலஸ் அழகப்பெருமா உள்ளுராட்சி சபைகள் இயங்குவதற்கு அரச ஒதுக்கீடு அவசியம் என்ற தொனியில் பேசி வருகின்றார். இதன் அர்த்தம் எதிர்கட்சியினர் அதிகாரத்தை கைப்பற்றினால் அரசாங்கம் எதுவும் செய்யாது  என்ற மிரட்டல் மறைமுகமாக விடப்படுகின்றது. மேலும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கொழும்பு மாநகரத்தில் பல அபிவிருத்திவேலைகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனவே இவர்கள் கூறுவது என்ன? என்பதே இங்கு முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
 
கொழும்பு மாநகரசபையை பாதுகாப்பு செயலாளரின் நெறிப்படுத்தலின் கீழு; கொண்டு வருவதற்குரிய சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுள்ளன. பாதுகாப்பு செயலாளரின் பூரண கட்டுப்பாட்டின் கீழ் கொழும்பு மாநகரசபை கொண்டுவரப்பட்டால் என்ன நடக்கும் என்பதை நாம் தெரிந்துவைத்திருக்க வேண்டும்.
 
இந்த நாட்டில் அளவுக்கதிகமான அதிகாரங்களுடன் ஒரு சர்வதிகாரியாக மகிந்த ராஜபக்ஸ காணப்படுகின்றார். 18வது திருத்தத்தின் பின்னர் அவருடைய நிலை உலகில் வேறெந்த நாட்டிலும் காணப்படாத அதிகாரம் அதிகம் கொண்ட தலைவராக இன்று அவர் உள்ளார். அவருடைய சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஷ ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவை விட அதிக சர்வாதிகார போக்கை கொண்டவராக காணப்படுகின்றார். எனவே அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொழும்பு மாநகரசபை வருமானால் தான் நிகைனக்கும் அனைத்து பணிகளையும் எதுவித தயவு தாட்சணியம் எதுவும் இன்றி பாதுகாப்பு செயலாளர் கோதபாய ராஜபக்ஸ முன்னெடுப்பார்.
ஏற்கனவே கொழும்பு மாநகரத்தில் இருக்கும் ஏழை மக்களின் வீடுகள் இரக்கமற்ற முறையில் உடைக்கப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். சிறு வியாபார முயற்சிகள் யாவும் கொழும்பு மாநகரசபைக்குள் துடைத்து எறியப்பட்டுள்ளது. தற்போது ஏழைகளாக இருக்கும் முச்சக்கரவண்டி உரிமையாளர் தொழிலுக்கும் உலை வைக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பு மாநகரசபைக்குள் வறுமையில் வாடுவோர் பிச்சைகூட எடுக்கமுடியாத சூழ்நிலை காணப்படுகின்றது. கொழும்பு மாநகரை அழகு படுத்தல் என்ற நிகழ்சியின் கீழ் இவையாவும் நடைபெறுகின்றது. மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளுக்கு இடம் இல்லாமல் ஒரு அரச அதிகாரியின் விருப்பங்களுக்கு மாநகரத்தின் முழு செயற்பாடுகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
மாநகரசபை என்பது அழகான வீதிகளை கொண்டதாக மட்டும் இருப்பதற்கு செயற்படுவதில்லை. மக்களின் சமூக நலன் விடயங்களில் அதிக அக்கறை காட்டும் ஒரு சிறிய அரசாங்கமாகவே அது உலகம் முழுவதும் செயற்படுகின்றது.  நாட்டின் ஜனநாயகத்தை பிரதிபலிக்கும் ஒரு அடையாளச் சின்னமாக அது காட்சியளிக்க வேண்டும்.
 
இன்று இத்தகைய நிலை இல்லை ஒரு தனிநபரின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு செயற்படுகின்ற நிர்வாக கட்டமைப்பாக மாற்றப்பட்டுள்ள நிலையே காணப்படுகின்றது. எனவே கொழும்பு மாநகரசபையை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கும் மிலிந்த மொறகொட வெற்றி பெறுவாரானால் அவரின் பணி பாதுகாப்பு செயலாளரின் எடுபிடியாகவே பணியாற்ற வேண்டிவரும். அதைத்தவிர அவரால் வேறு ஒன்றையும் செய்ய முடியாது.
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கொழும்பு மாநகர சபையை கைப்பற்றுமானால் அன்றுடன் மாநகரசபை முறை முடிவுக்கு வந்துவிடும். இன்று மிலிந்த மொறகொட கொழும்பு மாநகரசபையை எப்படி நடத்துவேன் என தனது பணியை பட்டியல் இட்டு வருகின்றார். இளைஞர் அமைப்புகளுடன், வர்த்தக அமைப்புகளுடன், மாதர் அமைப்புகளுடனும், வட்டார மக்களின் ஆலோசனைகளை பெற்று தான் நல்லதொரு மாநகர நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க இருப்பதாக அவர் கூறுகின்றார். ஆனால் உண்மையில் அவரது பணி பழையகாலத்தில் அதிகாரத்தில் இருந்த உடையார்களின் எடுபிடியாகவே அமையும். பாதுகாப்பு செயலாளரின் அனுமதியின்றி ஒரு குண்டூசியைக் கூட அவரால் அகற்ற முடியாத நிலையே காணப்படும்.
 
 
ஐக்கிய தேசியக் கட்சி என்ன செய்கின்றது. கடந்த மாநகர சபைத் தேர்தலில் வேட்பாளர் பட்டியலை உரிய முறையில் பூர்த்தி செய்யாததால் அவர்களது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சியில் சட்டத்தரணிகள் பெரும் திரளாக உள்ளனர் புத்திஜீவிகள் அதிகம் இருக்கின்றனர். ஆனால் இவர்களால் மாநகரசபைக்கு சரியான முறையில் ஒரு வேட்புமனுவை சமர்ப்பிக்க முடியாத நிலை இருந்துள்ளது. ஒருவர் இல்லாது வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெயர் டிபெக்ஸ் மூலம் அழிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இதைச் செய்தவர்யார் என்பது எல்லோருக்கும் தெரிந்ததாகும் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் முதல்வர் வேட்பாளராக முஸமில் நிறுத்தப்பட்டுள்ளார். இவரின் வலாற்று பின்னணி என்ன? மக்களுக்காக எத்தனை போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இவர் ராகு என்ற பாம்பின் செயற்பாட்டுக்கு ஒப்பானவர் என்று கூட கூறமுடியும்.
 
முதலில் இவர் முஸ்லீம் காங்கிரசை விழுங்கினார், பின்னர் துவா என்ற அமைப்பை விழுங்கினார், தற்போது முதல்வர் பதவி ஊடாக ஐக்கிய தேசியக் கட்சியையும் விழுங்கி ஏப்பமிடுவார். வெற்றி பெற்ற பின் அரச பக்கம் சாரமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
 
 எனவே மிக ஆபத்தான நிலைக்குள் கொழும்பு மாநகர மக்கள் உள்ளனர். ஒரு இராணுவ சர்வாதிகாரத்தின் கீழு; உள்ள சிறைகளில் வாழ்கின்ற நிலையிலேயே மக்கள் உள்ளனர். பாரிய அபிவிருத்தி என்ற போர்வையில் பிரதான பாதைகள் செப்பனிடப் படுகின்றது. மக்களின் நலன்கள் சிறிய அளவில் கூட கவனிக்கப்படாத நிலையே காணப்படுகின்றது. வேகமாக செல்லும் வாகனங்களினால் இறக்கும் சிறார்களின் நிலை அதிகமாக உள்ளது. குழந்தைகள் விலையாடுவதற்குரிய மைதானங்கள் இல்லை வெறுமையாக இருக்கின்ற நிலங்கள் யாவும் சர்வதேச கம்பனிகளுக்கு துரித கெதியில் விற்கப்படுகின்றன. உள்ளூர் முதலாளிகளுக்கு கூட இத்தகைய நிலங்கள் விற்கப்படுகின்றன.
 
 
 எனவே இன்றுள்ள சூழ்நிலையில் இவற்றுக்கு எதிராக போராடவேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது பிரதான எதிர்கட்சி அந்த நிலையில் இல்லை. அவர்களுடன் இணைந்து எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்தோம். ஒவொரு முறையும் போராட்டத்தில் கலந்து கொள்வதோடு தொடர்ச்சியாக போராட்ங்களை முன்னெடுக்காமல் ஐக்கிய தேசியக் கட்சி நழுவி வருகின்றது. எதிர்கட்சித் தலைவர் போராட்டங்கள் ஊர்வலங்களில் நூறு மீற்றர் தூரத்துக்கு பயணித்துவிட்டு வாகனத்தில் ஏறிச் சென்றுவிடுவார். இவர்களை வைத்துக் கொண்டு நாட்டின் தலைவிதியை மாற்ற முடியுமா?
 
 தனியார்துறை தொழிலாளர்களின் சேமலாபநிதியை கொள்ளையிடும் நோக்குடன் கொண்டுவரப்பட்ட ஓய்வூதிய திட்டம் என்ற மோசடியை எமது கடுமையான போராட்ட செயற்பாட்டால் அரசாங்கம் கைவிட்டது. இதற்காக கட்டுநாயக்கா ஆடைத் தொழிலகத்தை சேர்ந்த அப்பாவி இளைஞரின் உயிர் விலையாக கொடுக்கப்பட்டது. ஆடைத் தொழிலாளர்களின் போராட்டத்தினால் ஆட்சியாளர்கள் கலக்கமடைந்தனர். அத்தகைய போராட்ட அலைகள் விரைவில் தோன்றும் அதற்கான சக்திகள் பலமடைய வேண்டும்.   

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.