குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 18 ம் திகதி சனிக் கிழமை .

புத்தியீவிகள் யார்? தெரியாமல் விழி பிதுங்கும் கூட்டமைப்பினர்!

 27.09.20.திருவள்ளுவர்.2042-“பேச்சுவார்த்தை பொறிக்குள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிக்கக்கூடாது” என்று தமிழ் புத்தியீவிகளும் அரசியல் விமர்சகர்களும் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்தக் கோரிக்கை கடந்த வீரகேசரி வார வெளியீட்டின் தலைப்புச் செய்தியாகப் பிரசுக்கப்பட்டிருந்தது. இந்தச் செய்தி பற்றி மறுநாள் ஒரு பத்திரிகை எழுப்பிய கேள்விக்கு புத்தியீவிகள் யார் என்று தெரியாததால் எப்படிப் பதிலளிப்பதென கூட்டமைப்பு முக்கியசுதர் ஒருவர் பதிலளித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் இதே தமிழ்ப் புத்தியீவிகள் தான் தமிழ்த் தேசியத்தின் பெயரால் கூட்டமைப்பினரின் வெற்றிக்காகப் பாடுபட்டவர்கள் என்பதைக் கூட்டமைப்பினர் அறியாதிருக்க முடியாது.

அவ்வேளையில் மௌனமாக இருந்து தமிழ்த் புத்தியீவிகளை அங்கீகரித்து நின்றவர்கள் நாடாளுமன்றக் கதிரைகளில் அமர்ந்த பின் தமிழ்த் தேசியத்திற்காகவும் தமிழ் மக்களுக்காகவும் அதே புத்தியீவிகள் கூட்டமைப்பினரிடம் கோரிக்கையை முன்வைக்கும் போது அவர்களை இனம் காண முடியாது போனமை விசித்திரமாக இருக்கின்றது.

அது மாத்திரமல்ல, இன்னுமொரு கூட்டமைப்பு முக்கியஸ்தர் “கூட்டமைப்பு பேச்சுவார்த்தைப் பொறிக்குள் சிக்காது” என சூளுரைத்துள்ளார். தமிழ் மக்கள் வரவேற்கின்றனர்.

ஆனால் அதனை நிறைவேற்றிக் காட்டுவார்களா? அல்லது அரசாங்கம் எம்மை ஏமாற்றிவிட்டது என்ற பழைய பல்லவியைத் தான் பாடுவார்களா? என்ற தமிழ் மக்களின் அச்சத்தை கூட்டமைப்பினரின் முன் வைக்கின்றோம்.

2002 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் நிறுத்த சமாதான ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. இந்த ஒப்பந்தம் பற்றி பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

ஆயுதங்களுக்கு ஓய்வு, சமாதானம் பிறந்து விட்டது என்று அளவுக்கு மீறிய நம்பிக்கை ஒளி பாய்ச்சப்பட்டது. தமிழ் மக்கள் பெரும் மாயைக்குள் தள்ளப்பட்டனர் என்பதை போர் நிறுத்த முறிவும் முள்ளிவாய்க்கால் போரும் தமிழ் மக்களுக்கு நன்றாகவே உணர்த்தி விட்டுமுள்ளன.

எனினும் 2002 ஆம் ஆண்டு உடன்படிக்கை கைச்சாத்தாகியதையடுத்து இந்த உடன்படிக்கை சமாதானப் பொறியாக” மாறிவிடக்கூடாது என்று அன்று என் முன்னால் எழுதப்பட்டதை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். உண்மையில் 2002 ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை தமிழ் மக்களின் போராட்டத்திற்கு முன்வைக்கப்பட்ட “சமாதானப் பொறி” என்பதை பின்னைய நிகழ்வுகள் சான்றுபகரும்.

இலங்கையும் இந்தியா உட் பட பல வல்லரசு நாடுகளும் அணி திரண்டு இந்தோனேஷியா ஆஷ்ஷே பாணியில் சமாதான உடன்படிக்கையை சமாதானப் பொறியாக மாற்றி காரியங்களை மிகக் கச்சிதமாக நிறைவேற்றிக் கொண்டுள்ளன.

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளும் அவர்களது போராட்டம் இலங்கை மண்ணில் இருந்து துடைத் தெறியப்பட்டதாகக் கூறப்பட்ட போதும் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளின் நீதியை நியாயத்தை சர்வதேச சமூகம் மிக ஆழமாக உணர வைத்ததுடன் இன விவகாரத்துக்கான தீர்வைக் காண வேண்டுமென்ற கருத்துருவாக்கத்திற்கு சர்வதேச சமூகத்தை அணிதிரள வைத்துள்ளனர்.

இதற்கும் அப்பால் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் உயிரிழந்த ஆயிரமாயிரம் அப்பாவிகளின் உயிர்கள் சர்வதேச சமூகத்தின் மனச்சாட்சியை உலுக்கி நீதி கேட்க வைத்துள்ளன.

இத்தகைய ஒரு பின்புலத்தில்தான் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் பெயரிலான தேர்தல் வெற்றிகளை வழங்கி தமிழ் மக்களின் அரசியல் பயணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் ஒப்படைத்துள்ளனர். இந்த தாற்பரியத்தை கூட்டமைப்பினர் உணர்ந்துகொண்டாக வேண்டும்.

அதேவேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு “எடுத்தேன் கவிழ்த்தேன்” என்ற பாணியில் காயமாற்ற வேண்டுமென்று எந்த ஒரு தமிழ் புத்தியீவியோ அல்லது தமிழ் மக்களோ எதிர்பார்க்கவும் இல்லை.

பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்கமாட்டோமென கூட்டமைப்பினர் சூளுரைக்கலாம். ஆனால் போரில் மாத்திரமல்ல, பேச்சுவார்த்தையிலும் தமிழர் தரப்பு தோற்றுப் போனதே வரலாறாக உள்ளது. கடந்த 60 வருடங்களாகத் தமிழர் தரப்பில் எத்தனையோ சட்ட மேதைகள், அரசியல் சாணக்கியர்கள், நிபுணர்கள் சிங்களத் தரப்புடன் பேச்சுவார்த்தை மேசைகளில் அமர்ந்துள்ளனர்.

ஆனால் இறுதியில் தமிழர் தரப்பு தோற்றுப்போனதே வரலாறு. அவ்வாறு மீண்டும் ஒரு சம்பவம் இடம்பெற்று விடக் கூடாது என்பது தான் தமிழ் மக்களின் ஆதங்கமாக உள்ளது. கடந்த முறை நடைபெற்ற ஐ.நா. கூட்டத் தொடருக்குப் போகுமுன் சனாதிபதி கூட்டமைப்பு தலைவரை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி அரச தரப்புக்கும் கூட்டமைப்பிற்குமிடையில் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்தார்.

அதனை அடுத்து ஐ.நா. சென்ற சனாதிபதி அரச தரப்பு கூட்ட மைப்பு பேச்சுவார்த்தையைக் காட்டி இன விவகார தீர்வு நோக்கி தாம் நகர்வதாக சர்வதேசத்திற்கு அறிவித்தார்.

கூட்டமைப்பிற்கும் அரச தரப்பிற்கும் இடையில் “10 சுற்றுப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இறுதியில் கூட்டமைப்பினர் அதிருப்தியுடன் வெளியேறியதைத் தவிர வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

தற்போதும் ஜனாதிபதி ஐ.நா. செல்வதற்கு முன்பாக கூட்டமைப்பின் தலைவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அரச தரப்பு கூட்டமைப்பு பேச்சுவார்த்தையை ஆரம்பித்து வைத்து விட்டு ஐ.நா. சென்றுள்ளார்.

இவ்வாறு அரசாங்கத்தின் “பேச்சுத் துணை ’ நிகழ்ச்சி நிரல்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போவதானது இன விவகாரத் தீர்வு நோக்கிய சர்வதேச சமூகத்தின் நகர்வுகளுக்கு முட்டுக் கட்டை போடுவதாகவே அமையும் என தமிழ் மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தெற்காசிய வெளிவிவகாரங்களுக்கான அமெரிக்க இராயாங்கத் துணைச் செயலர் ரொபட் ஓ பிளேக் 2010 ஆம் ஆண்டு ஆடியில் சனாதிபதியைச் சந்தித்த பொது அரசியல் தீர்வு குறித்து வினவியதாகவும் இந்த விவகாரம் உள்நாட்டு விவகாரம் என்றும் கூட்டமைப்புடன் பேசி தீர்வு காண்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் பத்திரிகை ஆசியர்களின் சந்திப்பின் போது தெரிவித்ததை இங்கு குறிப்பிட விரும்புகிறோம்.

அதேவேளையில் தமிழீழ விடுதலைப் புலிகள் முன்னர் அரசியல் தீர்வு குறித்த விவகாரத்தை சர்வதேச சமூகத்தின் முன்வைத்துள்ளனர். அதன் பிரதிபலிப்பே ஒஸ்லோ உடன்பாடு. ஆனால் அரசாங்கம் பேச்சுவார்த்தைக் கூடான அரசியல் தீர்வை சர்வதேச அரங்கிலிருந்து இழுத்தெடுத்து இலங்கைக்குள் முடக்கிவிட முனைகின்றது.

எனவேதான் பேச்சுவார்த்தை பொறிக்குள் சிக்காதிருக்க தீர்வுப் பொதியுடன் பேச்சுவார்த்தைக்குப் போகுமாறு தமிழ்ப் புத்திஜீவிகளும் தமிழ் மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இல்லையேல் பொறிக்குள் சிக்குவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்காது; தமிழ் மக்களாகவே இருப்பர் என்ற அச்சமே தமிழ்ப் புத்தியீவிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் உள்ளது என்பதையும் கூட்டமைப்பினரின் முன் வைக்க விரும்புகின்றோம்.

அதேவேளையில் மனித உரிமை மீறல் போன்ற பல விடயங்களில் பொறுப்புக்கூறும் கடமைப்பாட்டை இலங்கை அரசாங்கத்திடமிருந்து சர்வதேச சமூகம் எதிர்பார்த்திருப்பது போல் தமிழ் மக்கள் தேர்தலில் வெற்றிக் கனியைச் சுவைக்க வைத்த கூட்டமைப்பினடமிருந்தும் தமிழ் மக்களுக்கான பொறுப்புக் கூறும் கடமைப்பாட்டையும் எதிர்பார்க்கின்றனர். என்பது தான் உண்மையாகும்.

வி.தேவராச்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.