குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

யாழில் நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் மாநாடு – ஈபிடிபி,தமிழரசுக் கட்சி பங்குபற்றவில்லை!

25.09.2011-jதிருவள்ளுவராண்டு.2042-எந்தவித பாகுபாடுகளும் இன்றி தமிழ் கட்சிகள் சேர்ந்து இயங்க தயாராக இருந்தால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவர்களை இணைத்து செயற்படவேண்டும்’ என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வி.ஆனந்தசங்கரி வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஞயிற்றுக்கிழமை  காலை நடைபெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கோரினார்.

அவர் இங்கு மேலும் உரையாற்றுகையில், ”தமிழ் கட்சிகளான நாங்கள் எங்களுக்குள் பேதங்களை மறந்து தமிழர்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரு பொதுவிடயத்திற்காக ஒன்றினைந்து செயற்படவேண்டும்.

நாங்கள் எதையும் தனித்து செய்ய முடியாத நிலையில் இருக்கின்றோம். எமது மக்களின் பிரச்சனைகள் குறித்து வாய்திறக்க முடியாத நிலையில் இராணுவத்தினரின் கெடுபிடிகள் யாழ்ப்பாணத்தில் தற்போது உள்ளது.

இன்று தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருக்கின்றார்கள். காணி பதிவுகளை யாழ்ப்பாணத்தில் அறிமுகப்படுத்தி மக்களின் காணிகளை பறிமுதல் செய்வதற்கு அரசு முயற்சிக்கிறது. தமிழ் இளைஞர்களுக்கு வேலை இல்லா பிரச்சினை. வாழ வீடுகள் இல்லாமல் எத்தனை மக்கள் மர நிழல்களில் வாழ்கின்றார்கள்? எமது தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தமிழ் கட்சிகள் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றினைய வேண்டும்” என்றார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேசிய மாநாடு அதன் தலைவர் வீ. ஆனந்தசங்கரி தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம் மற்றும் ரெலோவின் அரசியல் பிரிவுத் தலைவர் என்.கே.சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாப அணி சிறிதரன், ரெலோ உதயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இம் மாநாட்டில் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர். கொள்கை விளக்க உரைகள் ஆற்றப்பட்டதுடன் கட்சியின் தீர்மானங்கள் அடங்கிய ஆவணங்களும்  வெளியிடப்பட்டன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.