குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

தமிழர் விடுதலை கூட்டணியின் வருடாந்த மாநாடு தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் வாழ்த்துச் செய்தி

24 .09.2011  தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் பாரிய மாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சுதந்திரத்திற்குப் பின்னர் சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் அரசியல் வாழ்வு பல்வேறு நெருக்கடிக்குள்ளாக சென்று வருகிறது. தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்கிய அரசியல் சக்திகள் காலத்திற்குக் காலம் எடுத்த முடிவுகள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. இதற்குப் பிரதான காரணம் பாராளுமன்ற அரசியல் என பலரும் கருதுகின்றனர். சிங்கள தேசியவாத எழுச்சி சிறுபான்மை இனங்களுக்கு எதிராக திரும்பியது. குறுக்கு வழிகளில் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதம் பெரும் துணையாக அமைந்தது.  இவ் இனவாதம் சிறுபான்மை இனங்கள் மத்தியிலே அச்சத்தை ஏற்படுத்த இந்த அச்சத்தைப் பயன்படுத்தி தமிழ் குறும் தேசியவாதம் தமிழ் மக்களின் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பெரும் துணையாக அமைந்தது. சிங்கள மக்களைப் பாதுகாப்பதாக கூறிய தேசியவாதம் சிங்கள தேசிய வாழ்வை எவ்வாறு சீரழித்ததோ? அதேபோன்று தமிழ் தேசியவாதம் தனது மக்கள் வாழ்வை சீர்குலைத்தது. மொத்தத்தில் நாடே ஜனநாயக வாழ்வை இழந்து சீர்குலைந்துள்ளது.

 
இக் குழப்ப நிலையிலிருந்து நாடு மீழ்வதற்கு மிகவும் காத்திரமான மாற்றம் தேவைப்படுகிறது. இம் மாற்றங்கள் ஏற்படுவதற்கு பிரச்சனைகள் குறித்து வெளிப்படையாக பேசவேண்டும். தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கியமான பாத்திரத்தை வகித்த தமிழர் விடுதலை கூட்டணி இதற்கான வாய்ப்புகளைத் தற்போது திறந்து விட்டுள்ளதாகவே கருதுகிறோம். கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்ப் பிரதேசங்களில் தலைவிரித்தாடிய அரசியல் பயங்கரவாதம் முடிவுக்கு வந்த போதிலும் அதன் படிப்பனைகள் உணரப்பட்டதாக இல்லை. அதன் சாதக பாதகங்கள் குறித்து வெளிப்படையாக கருத்துச் சொல்ல எந்த அரசியல்வாதியும் தயாராகவும் இல்லை. இங்குதான் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் திரு. ஆனந்தசங்கரி அவர்களின் பணி துலங்குகிறது. மிகவும் சிக்கலான காலகட்டத்தில் துணிச்சலான முடிவோடு செயற்பட்டவர். சாமான்ய மக்களோடு வாழ்ந்தும் பழகியும் தனது அரசியலை நடத்திய அவர் தற்போது மக்கள் படும் அவலங்களால் அரசியல் வாதிகளை நோகும் நிலையில் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
 
பாராளுமன்ற அரசியல் கதிரைகளுக்காக தேர்தல் காலங்களில் தேசியவாதத்தை கக்கி வாக்குகளை வேட்டையாடுவதும் தேர்தல் முடிவடைந்ததும் மக்களைக் கைவிட்டுச் செல்வதுமான அரசியலின் பக்கங்கள் இனிமேலும் தொடரக்கூடாது என எதிர்பார்க்கிறோம். குறுகிய தேசியவாத அரசியலிலிருந்து விடுபட்டு பரந்த ஐக்கிய இலங்கைக்குள் கௌரவமான தீர்வை நோக்கிச் செல்லும் அரசியல் பாதையை தேர்வு செய்யும் எந்த அரசியல் கட்சியினதும் பணி பாராட்டப்பட வேண்டியதே.
 
ஐக்கிய இலங்கைக்குள் சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வின் அவசியம் குறித்து தமிழர் விடுதலை கூட்டணி தெரிவித்து வருவதும், இதன் மூலம்தான் தேசத்தின் பொருளாதாரத்தை முன்னேற்ற தேசிய இனங்களின் பங்களிப்பினை பெற முடியும் எனக் கூறுவதும் வரவேற்கத்தக்கதே. பெரும்பான்மை சிங்கள மக்கள் அமைதியான சுபீட்சமான ஐக்கிய இலங்கையை கட்டி எழுப்புவதற்கு இனப் பிரச்சனைக்கான தீர்வு அவசியம் எனத் தெரிவித்து வருவதும், அதன் அடிப்படையில் சிங்கள தேசியவாத அரசியல் சக்திகளோடு விவாதங்களை நடத்துவருவதும், அதேவேளை சிங்கள முற்போக்கு சக்திகளோடு பலமான அணி ஒன்றினை உருவாக்க வேண்டும் என்ற யோசனைகளோடு செயற்படுவதும் மாற்றங்களை நோக்கிய அணுகுமுறையாகவே கருதுகிறோம்.
 
இருபத்தோராம் நூற்றாண்டுக்கான மாற்றங்களை நோக்கி முன்னேறும் இத்தகைய கோட்பாடுகள் அவை எக் கோணத்திலிருந்து வந்தாலும் வரவேற்று பலப்படுத்தப்பட வேண்டும் என்ற பரந்த நோக்கின் அடிப்படையில் தமது வருடாந்த மாநாட்டினை நடாத்தும் தமிழர்  விடுதலை கூட்டணிக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
 
இவ்வண்ணம்
 
வீ இராமராஜ்- பணிப்பாளர் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்
வி சிவலிங்கம் -அரசியல ஆய்வாளர் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்
செ. யெகநாதன் அரசியல ஆய்வாளர் தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.