குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 5 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

சவேந்திர சில்வாவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு! அழைப்பாணையும் வழங்கப்பட்டது

 பக்கல்(திகதி)24.09.2011-திருவள்ளுவராண்டு  கன்னி -காரிக் கிழமை-சிறிலங்கா சனாதிபதி ராயபக்ச ஐ.நா.சபையில் உரையாற்றிய நேற்று (23.09.2011) காலை அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வாசிங்டன் கல்லூரியின் சட்டபீடம், நியூயோர்க் பகுதியின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நியூயோர்க் நகரிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் சவேந்திர சில்வாவுக்கு எதிராக வழக்கை தாக்கல் செய்துள்ளது. சிறிலங்காவின் உதவித் தூதுவர் சவேந்திர சில்வா அந்நாட்டின் இராணுவத்தில் 58வது படையை தலைமை வகித்து நாற்பது ஆயிரத்துக்கு மேலான அப்பாவித் தமிழ் மக்கள் கொலைசெய்யப்பட காரணமாக இருந்தவராவர்.

இதற்கு பரிசான அந்நாடு ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவர் பதவியை அவருக்கு அளித்தது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுப் பேரவை இவ்வாரம் ஆரம்பித்து சிறப்பாக நடைபெறும் இவ்வேளையில், ஐக்கிய நாடுகள் சபையில் சிறிலங்காவின் பதில் தூதுவரை போர்க்குற்றவாளியாக அமெரிக்க நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ள விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அதற்கான அழைப்பாணையை சவேந்திர சில்வாவுக்கு வழங்கியது.

அவ்வழைப்பாணை நியூயோர்க்கில் உள்ள அவர் வாசஸ்தலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட போது அவர் அங்கிருக்கவில்லை. அவர் வீட்டில் இருந்த சிங்கள வாலிபர் ஒருவர் அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முனைந்தார். அவர் தொடர்பு கிடைக்காத நிலையில் சவேந்திர சில்வா சார்பில் நீதிமன்ற அழைப்பாணையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார்.

இந்நிகழ்வை அல்ஜசீரா தொலைக்காட்சி நேரடியாக காட்சிப்படுத்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

படுகொலை செய்யப்பட்ட கேணல் ரமேசின் மனைவி மற்றும் பாதிக்கப்பட்ட சில தமிழர்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இவ்வழக்கு ஒரு குற்றவியல் வழக்கு அல்ல
என்பதும், நட்டஈடு கோரும் ஒரு வழக்காகும்.

58வது படையணியின் கொமாண்டராக ஜெனரல் சவேந்திர சில்வா மிகவும் கொடுமையானதும் தமிழ் மக்களுக்கு எதிராக அதிக துன்பங்ளையும் விளைவித்த போரை நடத்தினார். வார்த்தைகளால் வடிக்க முடியாத கொடும் துயரை நேரடியாக அப்பாவி தமிழ் மக்கள் மேல் ஏவியவர்.

பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற போர்வையில் சிறிலங்கா இராணுவம் மிக அதிகளவில் போர்க்குற்றங்களையும் மனித இனத்திற்க்கு எதிரான குற்றங்களையும் இழைத்தது.

குறிப்பாக பாதுகாக்கப்பட வேண்டிய பொதுமக்களையும் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களான வைத்தியசாலைகளையும் ஜெனரல் சில்வாவின் சிங்கள படைகள் நேரடியாக தாக்கியது
சிறிலங்காவின் சட்டத்தை மட்டுமல்ல அமெரிக்கச் சட்டம், பல்நாடுகளின் சட்டம் அனைத்தையும் மீறய செயலாகும்.

ஜெனரல் சில்வாவும் அவரது படையினரும் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பல உறுப்பினர்களையும் சித்திரைவதை செய்து கொலை செய்திருப்பது போர் விதிகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களாகும்.

பல்நாட்டுச் சட்டங்கள், உள் நாட்டுச் சட்டங்கள் அனைத்தையும் அதிர்ச்சியூட்டும் முறையில் முழுமையாக மீறியும் இரண்டு ஆண்டுகள் கழிந்தும் நடவடிக்கை ஒன்றுமேயில்லை என வேதனைப்படும் மக்கள் ஒருபுறம். தொடர்ந்தும் துன்பங்களை அடக்கப்பட்ட நிலையில் வாழும் மக்கள் மறுபுறம்.

இறுதியாக இன்று அமெரிக்க நீதிமன்றத்தில் பதில் சொல்லவேண்டிய காலம் வந்து விட்டது என உறவுகளை இழந்தவர்களும் போரில் தப்பிப் பிழைத்தவர்களும் எதிர்பார்த்து இருக்கின்றார்கள்.

அமெரிக்க நீதிமன்றம் நீதிக்கும் செய்த குற்றங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பும் கொடுக்காவிட்டால் சிறிலங்காவில் குற்றம் இழைத்தவர்கள் தொடர்ந்தும் தண்டனை பெறுவதிலிருந்து தப்பலாம் என்றே எண்ணுவர் என வழக்கை தாக்கல் செய்த வழக்கறிஞ்சர் அலி பெய்டுன் அவர்கள் குறிப்பிட்டார்.

இச் சட்டநிபுணர் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் வாசிங்டன் கல்லூரியின் சட்டபீடத்தில் மனித உரிமைகள் மீறல் விடயத்தில் நிவாரணத்தை பெற்றுக் கொடுக்கக்கூடிய துறையில் முன்னணி வகிக்கின்றவர்.

ஐக்கிய நாடுகளின் நிபுணர் குழுவின் அறிக்கையில் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் பொதுமக்கள் 2009ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் கொலை செய்யப்பட்டார்கள் எனக் குறிப்பிடுகின்றது.
இரு ஆண்டுகள் கழிந்தும் எவ்வித விசாரணைகளோ போர்க்குற்றங்களையும் மனித இனத்திற்க்கு எதிரான குற்றங்களையும் இழைத்தவர்களுக்கு எதிராக வழக்குகளோ தாக்கல் செய்யப்படவில்லை.

இன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒரு சிறிய ஆனால் மிகவும் குறிப்பிடத்தக்க முயற்சி எனவும் சிறிலங்காவின் கடற்கரைகளில் இரத்தக்களரியை ஏற்படுத்;தியவர்களுக்கு பதில் சொல்லும் பொறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறோம். அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கு மட்டும் எமது முயற்சி தொடரும் எனவும் குறிப்பிட்டார் சட்டவல்லுநர் பெய்டுன்.

பல்நாட்டுச் சட்டங்கள் உள் நாட்டுச் சட்டங்கள் அனைத்தையும் மீறியவர்களுக்கு நிவாரணமும் நீதியும் தேடும் இம் முயற்சி the Alien Tort Claims Act (ATCA) and Torture Victim Protection Act (TVPA). எனும் சட்டங்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இச்சட்ட வரைவாக்கங்கள் அமெரிக்க நீதிமன்றங்களுக்கு மனித உரிமை மீறல்களை வெளிநாட்டில் புரிந்தாலும் அமெரிக்கா ஒரு பாதுகாப்பும் வழங்கும் இடமாக அமையாது என்பது உறுதி.

நியூயோர்க் நகரில் 66 பேர் ஐ.நா பொதுச்சபையில் கலந்து கொள்ள வந்திருக்கும் சிறிலங்கா அரசு தலைவர் மகிந்த ராஐபக்சவுக்கு எதிராக பல ஆயிரம் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கும் இவ்வேளையில், நீதியையும் செய்த கொடுமைகளுக்கு பொறுப்பு ஏற்கும் நிலைமைகளை உருவாக்கியிருக்கும் இச்சந்தர்ப்பம் நியூயோர்க் மட்டுமல்ல உலகம் பூராகவும் எதிரொலிக்கப் போகின்றதே எமது நம்பிக்கை.

தமிழினப் படுகொலைக்கு பொறுப்பானவர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் சட்டரீதியான எமது நடவடிக்கைகள் தொடரும் என உலகத் தமிழர் பேரவை உறுதிபடத் தெரிவித்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.