குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 1 ம் திகதி புதன் கிழமை .

63 ஆண்டுகள் எமது மக்கள் அனுபவித்து வந்த துயரம் போதும்.தமிழர்கள்இப்படி இலங்கையும்நடக்கிறது என்றார்கள்

24 .09.2011  பலசு(ஸ்)தீன மக்கள் தங்களுடைய சுதந்திரத்தையும் விடுதலையையும் அனுபவிக்கும் நேரம் இது மொகமட் அப்பாசு(ஸ்)63 ஆண்டுகளாக(வருடம் தமிழ்ற்சொல் அல்ல) எமது மக்கள் அனுபவித்து வந்த துயரம் போதும்.  பலசு(ஸ்)தீன மக்கள் தங்களுடைய சுதந்திரத்தையும் விடுதலையையும் அனுபவிக்கும் நேரம் இது என பலஸ்தீனத்தைத் தனியரசாக அங்கீகரிக்கக் கோரி பலஸ்தீன அரசினதும், பலஸ்தீன அதிகார சபையினதும்  தலைவரும், பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் நிறைவேற்றுக் குழுத் தலைவருமான  மொஹமட் அப்பாஸ் ஐக்கியநாடுகள் சபையில் நேற்று பிரேணை ஒன்றை முன்வைத்து உரையாற்றியுள்ளார்.
 
 
ஐக்கியநாடுகள் சபையில் பலஸ்தீனத்திற்கு தற்போதுள்ள விடுதலை இயக்கம் என்ற அந்தஸ்த்தை விடுத்து பலஸ்தீனம் என்ற நாடாக தம்மை அங்கீகரிக்கக் கோரியே இந்தப் பிரேரணையை அவர் முன்வைத்துள்ளார்.
 
அவர் தனது உரையில், உள்நாட்டிலும் புலம் பெயர்ந்தும் அகதிகளாக பலஸ்தீன மக்கள் அனுபவிக்கும் துயரம் முடிவுக்கு வந்து விட்டது. தங்களுடைய இடப் பெயர்வை நிறுத்தி தங்களுடைய உரிமைகளைப் பற்றி அவர்கள் சிந்திக்கும் நேரம் இது. பலர் பல தடவைகளில் இடம் பெயர நேரிட்டிருக்கிறது. பல தசாப்தங்களாக இடம் பெயர்ந்தும், ஆக்கிரமிப்பாளர்களால் முடிவற்ற துன்பங்களை அனுபவித்து வந்த  எனது பெருமைக்குரிய வீரஞ்செறிந்த மக்கள் இந்த உலகின் ஏனைய மக்களைப் போல சுதந்திரமான இறைமையுள்ள தாய்நாட்டில் வாழ்வதற்கான நேரம் வந்து விட்டது.
 
 
எங்களுடைய ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் தங்களுடைய இயல்பு வாழ்வை வாழ்வதற்கான நேரம் வந்து விட்டது. நாளை ஒரு மோசமான நாளாக விடியும் என்ற அச்சமின்றியே அவர்கள் இன்று நித்திரைக்குப் போக முடியும். தாய்மார் தங்களுடைய குழந்தைகள் கொல்லப்படாமலோ ஆபத்தி;ன்றியோ, கைது செய்யப்படாமலோ, நெருக்கடிக்காளாகாமலோ வீடு திரும்புவார்கள் என்ற உத்தரவாதத்துடன் இருக்க முடியும். மாணவர்கள் காவலரண்கள் எதுவுமற்ற சூழ்நிலையில் எவ்வித இடையூறுமின்றி பாடசாலைகளுக்கோ பல்கலைக்கழகங்களுக்கோ சென்று வரமுடியும். நோயுற்ற மனிதர்கள் எவ்வித இடையூறுமின்றி வைத்தியசாலைக்குச் சென்று வர முடியும். அதற்கான நேரம் வந்து விட்டது.
 
 
விவசாயிகள் தங்களுடைய  நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிக்கப்படுமென்ற அச்சமோ அன்றி தமது நிலங்களுக்கான தண்ணீர் தடை செய்யப்படும் என்ற அச்சமோ இன்றி இருக்க முடியும். தங்களுடைய நிலத்திற்குப் போவதற்கு ஆக்கரமிப்பாளர்களால் எழுப்பப்பட்ட சுவர்கள் தடையாக இருக்கும் என்ற அச்சமின்றி இனி வாழ முடியும். தங்களுடைய காணிகளில் ஆக்கிரமிப்பாளர்கள் குடியிருப்பக்களை உருவாக்கி விடுவார்கள். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக நிற்கும் ஒலிவ் மரங்களை எரித்து விடுவார்கள் என்ற அச்சமின்றி இனி வாழ முடியும். அதற்கான நேரம் வந்து விட்டது.
 
 
சிறை வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானவர்கள் விடுதலை செய்யப்படும் நேரம் வந்து விட்டது. இனி அவர்கள் தங்கள் தங்களுடைய குடும்பங்களுக்குத் திரும்பி தங்களுடைய குழந்தைகளுடன் சேர்ந்து தங்களது தாய் நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான நேரம் வந்து விட்டது எனத் தெரிவித்துள்ளார்.
 
 
கூடவே 1948இல் இருந்து பலஸ்தீனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வந்த இஸ்ரேலின் நடவடிக்கைகளை எடுத்து விளக்கிய அவர், சர்வதேச முயற்சிகளினூடாக மேற்கொள்ளப்பட்டு வந்த பேச்சுவார்த்தைகளில் பலஸ்தீனத் தரப்பு அக்கறையுடனும் இதயசுத்தியுடனும் நேர்மையுடனும் கலந்து கொண்டதையும், ஆனால் இஸ்ரேல் அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றும் பதிலாக நிலப்பறிப்பு திட்டமிட்ட இஸ்ரேலியக் குடியேற்றம் என்பவற்றிலேயே தொடர்ந்தும் கவனம் செலுத்த வந்தது என்றும் அதற்காக எவ்வாறு கண்மூடித்தனமான விமான மற்றும் ஷெல் தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தது என்றும் விளக்கினார்.
 
 
இந்நிலையில் இறுதியாகக் கடந்த வருடம் ஆரம்பித்த பேச்சுவார்த்தைகூட சில வாரங்களிலேயே முடங்கிப் போனது என்று; சுட்டிக்காட்டிய அவர் இன்னும் எத்தனை காலத்திற்கு சர்வதேசம் இஸ்ரேல்ன் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
 
 
அந்த நிலையிலேயே கேள்விகளுக்கு அப்பாலான தமது மக்களின் சுயநிர்ணயத்தின் அடிப்படையில் 1967 ஜுன் 4ஆம் திகதிக்கு முன்பிருந்த எல்லைகளின்படி தங்களுடைய பலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் அதில் கோரியுள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.