குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

மனோ கணேசனுக்கு ஆதரவு வழங்காத ததேகூ! மனோகணேசனை நியமன பா. உறுப்பினர் ஆகக்கூட உள்வாங்கியிருக்கலாம்.

24.09.2011- பிரபல்யமான  பத்திரிகை  ஆசிரியரின்  இணையத்தின் அறிக்கை இது..கொழும்பு மாநகரசபை தேர்தலில் போட்டியிடும் மனோ கணேசன் தலைமையிலான சனநாயக மக்கள் முன்னணிக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பு ஆதரவளிக்காதது ஏன் என அண்மையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைவர்களை கொழும்பிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் குழு கேள்வி எழுப்பிய போது அகப்புறச்சூழல் காரணமாக ஆதரவாக பிரசாரம் செய்யவோ அல்லது அறிக்கை விடவோ முடியவில்லை என சம்பந்தன் பதிலளித்துள்ளார்.
கடந்த உள்ளுராட்சித்தேர்தலில் பல நெருக்கடியான கட்டத்தில் மனோ கணேசன் காலச்சூழலை உணர்ந்து தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார்.
அரசாங்கத்தின் அச்சுறுத்தல்களின் மத்தியிலும் கிளிநொச்சியில் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு முழுமையான ஆதரவை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது கொழும்பு மாநகரசபையில் இரு பேரினவாத சக்திகளான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியையும், ஐக்கிய தேசியக்கட்சியையும், எதிர்த்து போட்டியிடுகிறார். அனைவரும் ஒன்று திரண்டு மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணிக்கு வாக்களிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும். இதை விட இரட்டிப்பு கடமையும் நன்றிக்கடனும் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு உண்டு.
ஆனால் தமிழ் தலைமைகள் காலத்திற்கு காலம் விடும் தவறுகளைப்போல குத்துக்கரணங்களைப்போல தமிழ் தேசியக்கூட்டமைப்பு மனோ கணேசனுக்கு ஆதரவு தெரிவிக்காது மௌனம் காத்து வருவதுடன் அகப்புறச்சூழல் என ஏமாற்று வார்த்தை ஒன்றை கையாண்டுள்ளது குறித்து தமிழ் மக்கள் மத்தியில் விசனம் தெரிவிக்கப்படுகிறது.
தமிழ் தேசியக்கூட்டமைப்பு கூறும் அகப்புறச்சூழல் என்ன என்பதை மக்களுக்கு ஏன் அறிவிக்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பிரதானமாக போட்டியிடும் ஒரு கட்சியை வெல்ல வைப்பதற்காக அக்கட்சியுடன் பின்கதவால் காணப்பட்ட இணக்கப்பாடே மனோ கணேசனுக்கு ஆதரவளிக்காது மௌனம் காப்பதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இந்த இணக்கப்பாடு என்ன? யார் இந்த இணக்கப்பாட்டிற்கு தரகராக நின்றார்? அதற்காக அந்த பேரினவாத கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு என்ன உத்தரவாதத்தை வழங்கியுள்ளது போன்ற அனைத்து விபரங்களையும் ஆதாரங்களுடன் யார் யார் இதில் சம்பந்தப்பட்டார்கள் என்ற விபரங்களையும் விரைவில் தினக்கதிர் வெளியிட உள்ளது.
தமிழ் மக்களின் ஒரேஒரே அரசியல் தலைமை தமிழ் தேசியக்கூட்டமைப்புத்தான், அதைப்பலப்படுத்த வேண்டும் என்பதில் நாம் என்றும் உறுதியாக இருக்கிறோம், ஆனால் அதற்காக தமிழ் தலைமை தவறான பாதைக்கு செல்லும் போது அதை தட்டிக்கேட்டு சரியான பாதைக்கு ஈட்டிச்செல்ல உதவ வேண்டியதும் எமது கடமையாகும்.
அந்த கடமையின் அடிப்படையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சில தவறுகளை ஆதாரங்களுடன் சுட்டிக்காட்ட விளைகிறோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.