குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

சைவத்தமிழ் பணியில் பற்றுறுதி கொண்ட‌ மலேசியத்தமிழர் கலாநிதி கரிக்கிருச்ணன்

 23.09.2011- திருவள்ளவராண்டு.2042-எங்கள் யாழ்ப்பாணத்தின் பெருமைப் பற்றி நாம் பேசுவதை விட மற்றவர்கள் எங்கள் பெருமை பற்றிப் பேசும் போது இருக்கக் கூடிய ஆனந்தம் அளவிற்கரியது. அண்மையில் மலேசிய நாட்டின் பல்கலைக்கழக விரிவுரையாளர் கலாநிதி கரிகிருச்ணன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார்.

அவரை சந்திக்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புகள் பீடாதிபதி பேராசிரியர் ச.சத்தியசீலன் அவர்களின் உதவியோடு கலாநிதி கரிகிருச்ணனைச் சந்தித்தோம். யாழ்ப்பாணத்துத் தமிழுக்கு நிகரான தமிழ் உச்சரிப்பு, ஆங்கிலச் சொற்கலப்பில்லாமல் தமிழைப் பேசவேண்டும் என்பதில் அவரிடமிருந்த உறுதிப்பாடு என்பவற்றைப் பார்த்த போது வியந்துபோனோம்.

 

இதற்கு அப்பால் அவரிடம் இரு ந்த தமிழ்ப்பற்றும், சைவ சமயத்தின்பால் கொண்ட ஈடுபாடும் எங்களை மேலும் வியக்கவைத்தன. யாழ்ப்பாணத்திற்கு வருகை தந் திருந்த கலாநிதி ஹரிகிருஷ்ணன் அவர்கள் கணிதத்துறையில் கலாநிதிப்பட்டம் பெற்றவர். இருந்தும் தமிழ்மொழி மீது அவருக்கு இருந்த பற்றை நினைத்த போது நெஞ்சம் நெகிழ்ந்து கொண்டோம். க.பொ.த. உயர் தரத்தில் விஞ்ஞானம், கணிதம் ஆகிய துறைகளில் கல்விகற்று விட்டாலே, தமிழ், சைவம் பற்றிப் பேசுவதைத் தவிர்த்துக்கொள்ளும் மூடக் கலாசாரத்திற்குள் மூழ்கிக் கிடக்கும் எங்கள் மண்ணில், யப்பான் நாட்டில் பிரயோக கணிதத்தில் (Applied Maths) கலாநிதிப் பட்டம் முடித்த ஹரிகிருஷ்ணன் அவர்கள் தமிழின் சுவை பற்றி, அதன் இனிமை பற்றிக் கூறும்போது எங்கள் அறியாமையை உணர்ந்து வெதும்பிக் கொண்டோம்.

ஒரு இனம் தனது பண்பாடு, கலா சார விழுமியங்களோடு வாழ வேண் டுமாயின் தாய்மொழியூடாகக் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்பது கரிகிருச்ணனின் இறுக்கமான முடிபு. இலங்கையில் உயர்தரத்தில் கணிதத்தை தமிழ்மொழியில் மாணவர்கள் கற்பதை அறிந்து பேரானந்தப்பட்ட அவர், கணிதத்தில் பயன்படுத்தப்படும் தமிழ்ச்சொற்களைப் பார்த்தபோது தான் பிரமித்துப் போனதாக கூறினார். தமிழ்மொழியூடாக கணிதத்தை உயர்தரத்தில் கற்பது, தமிழ் மக்களுக்குப் பெருமை தரக்கூடியது என்றும் புகழாரம் சூட்டிக் கொண்டார்.

 

தமிழ் நாட்டின் சேலம் நாட்டில் இருந்து மூன்று தலைமுறைகளுக்கு முன்னர் மலேசிய நாட்டில் குடிய மர்ந்த தமிழர்களே இன்றைய மலேசிய நாட்டு தமிழர்கள். மலாயமொழியுடன் ஆதிக்கமும் இசுலாத்தின் இறுக்கமும், இல ங்கை போன்ற இனத்துவ ரீதியான பாகுபாடும் மலேசியாவில் மலிந்திருந்தாலும், அந்த நாட்டில் வாழும் தமிழ் மக்கள் தமது தாய்மொழி மீதும் சைவசமயத்தின் மீதும் கொண்டுள்ள பக்தியின் வைராக்கியத்தை கலாநிதி கரி கிருச்ணனின் கருத்துக்கள் வெளிப்படுத்தின. பாடசாலைக் கல்வியில் உயர் கல்வி வரையும் பல்கலைக்கழகத்தில் கலைத் துறையிலும் தமிழ் மொழியில் கற்கக் கூடிய வாய்ப்பு இருப்பதையும் பெருமை கொள்ளும் அவர், மலேசியாவில் 6 ஆம் தரத்துடன் தமிழ் மொழியில் கற்கும் சந்தர்ப்பம் முடிந்து விடுவதாக வேதனைப்பட்டுக் கொண்டார்.

மலேய நாட்டுத் தமிழ் மாணவன் ஒருவன் தரம் 6 வரையே தமிழ் மொழி மூலமாக கல்விகற்க முடியும். அதன் பின்னர் மலாயமொழி அல்லது ஆங்கிலத்திலேயே பாடத்தைக் கற்க முடியும். தேவையாயின் தமிழ்மொ ழியை ஒரு பாடமாகக் கற்க முடியும். இப்போது மலேசியாவில் தமிழ் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெற்றோர்களிடம் வலுத்து வருவதைக் காணமுடிகின்றது என்றார். தமிழ்ப் பணி அமைப்பு யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி யின் பயன்பாடு கண்டு மட்டற்ற மகி ழ்ச்சி அடையும் கலாநிதி ஹரிகிருஷ்ணன் அவர்கள் மலேசியாவில் உள்ள தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் என்ற அமைப்பில் இருந்து கொண்டு தமிழுக்கு பெரும் பணியாற்றுகின்றார்.

அந்த அமைப்பின் தலைமை இயக்குநர் டத்தோ பா. சகாதேவனின் அர்ப்பணிப்புடன் கூடிய தமிழ்ப் பணியைக் குறிப்பிடத் தவறாத கலாநிதி கரிகிருச்ணன் தமது தேசிய நிலநிதி கூட்டுறவுச் சங்கம் தமிழ் இலக்கிய பணியை ஆற்றுவதில் தீவிரமாக இருப்பதாக குறிப்பிட்டார். தமிழ் இலக்கியம் சார்ந்த தமிழ், வரலாறு சார்ந்த நூல்களின் வெளிவருகையில் ஆர்வம் காட்டும் இந்த அமைப்பு பேராசிரியர் ச.சத்தியசீலன் அவர்கள் எழுதிய மலாயக்குடி பெயர்வும் யாழ்ப்பாண சமூகமும் என்ற நூல் வெளியீட்டை 2006 ஆம் ஆண்டில் மலேசியாவில் நடத்தியது. இன்றுவரை அந்த அமைப்பு தனித்து நின்று தமிழ்ப்பணி ஆற்றுவதை அறிந்த போது எங்கள் யாழ்ப்பாணத்தில் அப்படியான அமைப் புக்களின் பஞ்சப்பாடு கண்டு உள்ளூர வேதனை கொண்டோம். மலேசியாவில் தமிழ்மக்கள் அடக்கப்பட்ட இனமாக இருக்கின்ற போதிலும் அங்குள்ள தமிழ்மக்களின் ஒற்றுமையும், தமிழ்ப்பணியாற்றும் பொது அமைப்புக்களின் அர்ப்பணிப்புடன் கூடிய செயற்றிறனும், தமிழ் மீது கொண்ட பற்றுறுதியையும், மலேசியாவில் தமிழ் மக்களின் வலுவை உயர்த்தி நிற்கின் றது என்ற செய்தி எங்களுக்கான அறியாமையாக கொள்ளப்பட வேண் டியது ஆகும்.

மாசுபடாத..... கலாநிதி கரிகிருச்ணன் அவர்களுடனான செவ்வியில், சைவசமயத்தின் மீது அவர் கொண்டிருந்த பற்றுதல் நம்மை மிகவும் கவர்ந்தது. இஸ்லாமிய சமயத்தின் இறுக்கமான கொள்கை கொண்ட மலேசியாவில் சைவசமயத்தின் மீது அளவு கடந்த பற்றுக்கொண்ட ஒருவரை சந்திப்பது மட்டற்ற மகிழ்ச்சிக்குரியதாயினும், கணிதத்துறையில் கலாநிதி பட்டம் பெற்ற ஒருவன் சைவத்தின் மீது- அதனை மலேசிய நாட்டில் வழுவாது பாதுகாக்க வேண்டும் என்ற கொள்கையில் திடமாக இருப்பதென்பது சாதாரண விடயமன்று. இலங்கையில் சைவசமய பாடம் க.பொ. த.சாதாரண தரம் வரையான மாணவர்களின் பொதுக் கல்வி யாக இருப்பது கண்டு வியப்புறும் அவர், தங்கள் நாட்டில் நன்னெறி என்ற பாடம் பொது நிலையில் இருப்பதாக குறிப்பிட்டார்.

தேவாரத் திருமுறைகள், வழிபாட்டு முறைகளை மாணவர்கள் செம்மையாக அறிந்திருக்க வேண்டுமாயின் அதற்கு சமயக் கல்வி அவசியம் என்பதை வலியுறுத்தும் கலாநிதி கரிகிருச்ணன், எங்கள் மாணவர்களின் சைவசமய பாடப் புத்தகங்களைப் பார்வையிடுவதில் காட்டிய அக்கறைப்பாடு நிச்சயம் மலேசியாவில் அரச பாடத்திட்டங்களுக்கு அப்பால், சைவ சமய பாடம் முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்தியது. தமிழ் மீதும், சைவம் மீதும் அளவு கடந்த பற்றுக்கொண்ட மலேய நாட்டின் தமிழ் மகன் ஒருவரை சந்தித்து உரையாற்றுவதில் தமிழும் சைவமும் தழைத்தோங்கும் என்ற நம்பிக்கைக் கீற்றுக்களைக் கண்டு கொண்டோம். அந்தப் பரம திருப்தியில் அவரிடம் இருந்து விடை பெற்றோம்.

விதுரன்
 
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.