குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஆடி(கடகம்) 12 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

முதியோரை மதித்தல், பாதுகாத்தல், முதியோரின் முக்கியத்துவம்

மனிதர்களின் வாழ்வில் முதுமைக்காலம் பிறந்த மனிதர்கள் எல்லோருக்கும்

வந்தே ஆகும். முதுமைக்காலத்தில் மகிழ்வாகவாழுவதும் துயர்களுடன் வாழ்வதும்

முதியவர்களி்ன் அன்றாடநடைமுறைகளில்  இருந்துவரும் நிலையாகவுள்ளது. 

முதியோரை மதித்தல் பண்பு ஒவ்வொரு மனிதர்களிடமும் குடும்பங்களிலும்

குமுகாயக்குழுமங்களிடமும் இருந்தால் இந்த முதியவர்களுக்கான பாதுகாப்பும்

அவர்களின் பட்டறிவைப்பெற்று நாமும் சிறப்பாகவாழலாம்.தொழில்நுட்பங்களையும்

தொழிலையும் புதியகல்விகளையும் கற்கலாம்.வாழ்க்ககை என்ற பட்டறிவை

தொடரை முதியவர்கள்  விட்ட இடத்திலிருந்தே தொடரமுடியும்.தமிழர்பண்பில்

அன்னையும் தந்தையும் கண்கண்ட கடவுள் என்பார்கள்.அன்னையும் பிதாவும்

முன்னறி தெய்வம் என்று அவ்வைப்பாட்டியும்,பேரியோரை துணைக்கோடல்,

பேரியோரைப்பிழையாமை என்று திருவள்ளுவரும் கூறியுள்ளார்கள்.

 

தமிழர்களின் கல்வியில் குடும்பப்பழக்கவழக்கத்தில் பெரியோரை மதித்தல் என்பது

ஏட்டுச்சுரக்காய் போன்றே உள்ளது. சமயச் சொற்பொழிவுகழுக்கும்,மேடைப்பேச்சுகளுக்

கும் எழுத்துக்கும்  அவை பயன்படுகின்றதே  தவிரவிரவும் நடைமுறை  வேறாகவே

உள்ளது,இதுதான் உண்மையான உண்மை. இதற்கு பெல காரணங்கள் இருந்தாலும்

பொருளாதாரப்பிரச்சனைகளும் அடிப்படையாகின்றது. மூன்றாம் உலகநாடுகளில்

பொருளாதாரம் பற்றாககுறையாக  இருப்பதால் தங்கிவாழும் நிலையில் இருக்கும்

குழந்தைகள் முதியவர்கள் இயலாதவர்கள் என்ற மூவையினரும் இடர்களைச்

சந்திக்கின்றனர். இவர்களுக்கான சமூகநலத்திட்டங்கள் அவசியம் தேவைப்படுகின்றது.

நிதி பராமரிப்பாளர்கள் மருந்துகள் உடைகள் மூக்குக்கண்ணாடி,பல்வைத்தியம் போன்ற

அடிப்படை மருத்துவங்கள் எண்ணப்படவேண்டும். இவை சிறப்பாக இல்லாவிட்டாலும்

ஓரளவுக்காவது முதியவர்களைப்பாதுகாக்க மனிதர்களிடம் இருக்கும் முதியோரை

மதில்தல் என்ற உயர்ர்ந்த பண்பு மனதில் இருந்தாலே போதும். இப்பண்பு இல்லாததால்

பெரியவர்கள்படும் இடர்பரிதாபமானதாகவுள்ளது.

 

முதலாமுலகநாடுகளான வளர்ச்சியடைந்த நாடுகளில் முதியோர்களுக்கான பாதுகாப்பு

நலத்திட்டங்கள் இருக்கின்றன.அத்துடன் இந்தநாடுகளில் ஆணோ பெண்ணோ தமது

இளமைக்காலங்களில் வேலை செய்து வாழ்வதால் அவர்களுக்கு ஓய்வு ஊதியத்திட்டங்

களுண்டு. முதியோர்பராமரிப்பு நிலையங்கள் சிறப்பாக இயங்குகின்றன. இதனால்

முதியவர்கள் இடர்களை எதிர்நோக்காமல் வாழ்கின்றார்கள். இருந்தாலும் தமிழர்களின்

கூட்டுக்குடும்பவாழ்வின் சிறப்பானது முதியவர்களைத் தனிமைப்படுத்தாது  இருப்பதை

உணரலாம். ஆயிரம் இருந்தும் பிள்ளைகள் எம்மோடு இல்லை எங்களை  அன்பாகவந்து

பார்க்கின்றார்கள் இல்லை என்ற கவலை பெரியவர்களைப்பாதிக்கின்றது.

 

பெரியோரை மதித்தல் என்பது அவர்களைக்கண்டதும் எழுந்துநிற்றல் விழுந்துவழிபடல்

அவர்கள்டமிருந்து பொருட்களை வாங்கும் போதும் கொடுக்கும் போதும் இரண்டு

கைகளாலும் வாங்கவேண்டும் கொடுக்கவேண்டும்  என்பதல்ல முக்கியம். அவர்களை

மனதார மதிக்கவேண்டும். அப்படியானால் தான் அவர்களுக்கு உதவும் மனம் தானாக

வரும். இந்த மனப்பழக்கமே முதியோரை மதிக்கும் பண்பை மனிதர்களிடம் உருவாக்கும்.

 

அறனறிந்து மூது்த அறிவுடையார் கேண்மை

திறனறிந்து தேர்ந்து கொளல்.(குறள்)

குற்ற மற்ற மனதுள்ள தம்மை விட மூத்த அறிவுள்ள மேலோர் தொடர்பை அவருடைய

திறமையைத் தெளிவாக உணர்ந்து பெறவேண்டும். என்கின்றார்  திருவள்ளுவர்.

 

எனவே முதியோர் எனப்படுபவர் பழைய வீசப்படவேண்டிய பொருளல்ல அவர்களிடம்

இருந்து எவ்வளவோ வாழ்க்கைக்கு தேவையானவற்றைப் பெற முடியும். அவர்கள்

ஒரு நுால்  புத்தகங்கள் அவர்களை  நாம் படித்தாலே நாம் நன்றாக  சிறப்பாக வாழலாம்.

பழங்கள்  தான் விரும்பப்படுகின்றன  அழகாக இருக்கின்றன  பயனுடையதாக  இருக்கின்றன

அப்படித்தான் முதியவர்களும். அவர்கள்  புதிய  விதை தருவார்கள்.

வீட்டில்  முதியவர்கள் இருந்து சிறியவர்களுக்கு நல்ல கதைகள் சொல்வார்கள்

அறிவுரைகள் சொல்வார்கள் பழக்கவழக்கங்களை போதிப்பார்கள். தாம் வாழும்டத்தில்

இப்படித்தான் வாழவேண்டும் என்ற அந்த இடப்பட்டறிவை போதிப்பார்கள். இன்னகாலங்களில்

இன்னது சாப்பிடக்கூடாது  சாப்பிடலாம் இவருடன் பழகு பழகவேண்டாம் இப்படிப்ழகு

அப்படிப்பழகு இத்தகைய இயற்கை  உணவுகளை உண்ணுங்கள் வாங்கிய பொரடு்களை

அதிகம் உணவாகக்கொள்ளாதீர்கள் என்ற உடல்நலக்கருத்துகளை  எல்லாம் தருவார்கள்.

விஞ்ஞானம் என்பதுஎப்படி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து ஆய்வுகள் கண்டு

பிடிப்புகள் மூலம் வளர்ந்ததோ அதே போன்று முதியோரை மதித்து அவர்கள் வழியாக

மனிதர்கள் உயர்வான வாழ்க்கை மகிழ்ச்சியைப் பெறலாம் என்பதே உலக உண்மை.

 

உலகில் முதியோரை மதித்தல் அவர்களைப் பேணல்  பராமரித்தல் மூலம்

இளையவர்கள் நன்மை அடைவார்கள் இறந்தவர்களுக்கு கூடஇல்வாழ்வான்

என்பான் துணை என்று வள்ளுவர் சொல்லியுள்ளதையும் வறியவர்க்கும் வாழ்ந்து

கொண்டு இருப்பவன் துணை என்பதாலும் முதியவரை மதில்தல் பேணல்

அவர்களின் வாழ்க்ககை அறிவுகளை பெறுதல் என்று அவர்களை அரவணைத்து

அன்புகாட்டி அவர்களையும் மகிழ்வாக வாழவைத்து நாமும்மகிழ்வாக வாழ்வோம்.

இது ஒருவாழ்க்கை வட்டம் மனிதச்சங்கிலி என்பதை உணர்வோம்.

 

இதில் எழுத்துகளைக்கவனித்து திருத்திக் கொள்ளவும். குமுகாயம் சரியான  சொல்.