குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 4 ம் திகதி சனிக் கிழமை .

ராயினாமா செய்ய வேண்டுமா, இல்லையா என்பதை ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும்- கருணாநிதி,

 23.09.2011-பிரணாப் முகர்யியின் கடிதத்தைத் தொடர்ந்து தனது பதவியை ராயினாமா செய்வதா, இல்லையா என்பதை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான் தீர்மானிக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். சென்னையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான முதலாவது திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கருணாநிதி. பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் ப.சிதம்பரத்தைக் குற்றம் சாட்டி பிரணாப் முகர்ஜி புகார் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்குப் பதிலளித்த கருணாநிதி, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக தான் மேற்கொண்ட ஒவ்வொரு நடவடிக்கையையும், பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் தவறாமல் தெரிவித்து வந்தார் ராசா.

முழு விவரம் தெரியாமல் ப.சிதம்பரம் விலக வேண்டுமா என்பது குறித்து நான் பதிலளிக்க முடியாது. விலகல் குறித்து ப.சிதம்பரம்தான் எடுக்க வேண்டும்.

சிதம்பரத்திற்கு இது தெரியும் என்றுதான் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். அவருக்குத் தொடர்பு உள்ளது என்று அதற்கு அர்த்தம் இல்லை என்றார் கருணாநிதி.

இருப்பினும் பிரணாப் முகர்ஜியின் கூற்று தங்களுக்குச் சாதகமாக இருக்கும், ராசாவின் வாதம் வலுவடையும் என திமுக தலைமை நம்புவதாக தெரிகிறது. இதை 2ஜி வழக்கின் விசாரணையின்போது ராசா முன் வைப்பார் என்றும் திமுக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

'திமுகவுக்குப் பிரகாசமான வெற்றி வாய்ப்பு':

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பதால் திமுக தனித்துப் போட்டியிடுகிறது. மக்களின் அடிப்படைத் தேவையை நோக்கமாகக் கொண்டே தேர்தலை சந்திக்கிறது திமுக.

தனித்துப் போட்டியி்ட்டாலும் சூழ்நிலைக்கேற்ப சில கட்சிகளுக்கு சில இடங்களை விட்டுத் தருவோம் என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.