குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

எங்களில் சந்தேகம் கொள்ள வேண்டாம்- தமிழ் பத்திரிகை ஆசிரியர்களிடம் சம்பந்தன் வேண்டுகோள்!

 23.09.2011.திருவள்ளுவராண்டு.2042-இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வு திட்டம் ஒன்றிற்கு வரலாம் என தாம் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவுக்கு தெரிவித்திருப்பதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நேற்றுமாலை கொழும்பிலிருந்து  வெளிவரும் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த போது தெரிவித்தார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் வீரகேசரி வார வெளியீட்டின் ஆசிரியர் வி.தேவராச், செய்தி ஆசிரியர் பற்குணம் ( ராயா மேத்தா) வீரகேசரி தினசரி பிரதம ஆசிரியர் பிரபாகரன், பிரதி ஆசிரியர் சிறிகயன், தினக்குரல் தினசரி பிரதம ஆசிரியர் தனபாலசிங்கம்,  சுடர்ஒளி செய்தி ஆசிரியர் சிவராயா, ஆகியோருடன் ஊடகவியலாளர் வித்தியாதரனும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் ஆர்.சம்பந்தன், மாவை சேனாதிராசா, சுரேச் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், விநாயகமூர்த்தி, எம்.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மைக்காலத்தில் தமிழ் பத்திரிகைகளிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பாகவும் அவர்கள் அரசுடன் நடத்தும் பேச்சுக்கள் தொடர்பாகவும் கடும் விமர்சனம் எழுந்ததையடுத்தே தமது நிலைப்பாட்டை தெளிவு படுத்தும் முகமாக இச்சந்திப்புக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு த.தே.கூ.அமைப்பும் தமிழ்த்தரப்பும் பலமாவதை சம்மந்தர் தடுக்கின்றார் அதற்காகவே சுமத்திரனை பயன்படுத்துகின்றார். சுமத்திரன் புதியவர் என்பதாலும் பழைய அரசியல் வாதிகளை அனுசரித்து போகவேண்டிய நிலைப் பாட்டையும் சுமத்திரன் எடுத்து இறங்கிவரவேண்டும். சங்கரி அவர்களைப் பயன்படுத்த விடாது  தடையாக இருப்பவர்கள் சம்மந்தர் அய்யாவும் தான்.மங்கள முனசிங்க தெரிவுக்குழுவின் அறிக்கை, சந்திரிக்கா முன்வைத்த தீர்வுப்பொதி, கடந்த காலங்களில் தமிழ் தரப்பால் முன்வைக்கப்பட்ட தீர்வுத்திட்ட ஆலோசனைகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தீர்வு திட்டம் பற்றி பேசலாம் என தாம் அரச தரப்பிடம் தெரிவித்திருப்பதாகவும், பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப் படாது குறிப்பிட்ட காலத்தில் நிறைவு செய்யப்பட வேண்டும் என்பதை தாம் அரச தரப்பிற்கு வலியுறுத் தியிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.

பேச்சுவார்த்தையின் மூலம்தான் தீர்வு காண வேண்டும் என சர்வதேசமும் விரும்புவதாகவும், பேச்சுவார்த்தைக்கு செல்ல தயங்கினால் சர்வதேசத்தின் ஆதரவை நாம் இழக்க வேண்டியவரும் என்றும் பத்திரிகை ஆசிரியர்களிடம் சம்பந்தன் தெரிவித்தார்.

நாம் இப்போது மீண்டும் பேச்சுவார்த்தைக்கு சென்றிருப்பது குறித்து யாரும் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். இச்சந்திப்பு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கொழும்பு அலுவலகத்தில் நடைபெற்றது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.