குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

தற்போது என்ன நடக்கிறது குறுக்குப்பார்வை குமரிநாடு.நெற் (kumarinadu.net) இன் சுருக்கமான பார்வை

22.09.2011-திருவள்ளுவராண்டு.2042-உலக அரங்குகளில் ஈழத்தமிழர் பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. பொங்குதமிழ் எழுச்சிகள் சிலஇடங்களில் தவறாகவும் பல இடங்களில் சரியாகவும் இடம்பெறுகின்றன. தமிழர்கள்  எமது மனங்களில் அப்பாவித்தனமான உணர்வு!ஏதோ பெரிய மாற்றம் அல்லது இலங்கைக்கு தண்டனை உடனே கிடைக்கப் போகிறது என்று.

தமிழர் ஊடகங்களின் தரம் எப்படி என்பதற்கு சான்றாக  சுவிசுநாட்டின் தலைநகர் யெனிவா என்றுவெளியிடுகிறார்கள். ஒருநாட்டின் தலைநகரம் தெரியாத ஊடகங்களாகவே எமது ஊடகங்கள் இருக்கின்றன. ஏன் சொந்தநாட்டின் ஊர்களின் நிர்வாகப் பிரிவுகளே தெரியாது செய்திகள் வெளியிடுபவர்கள் தமிழர்கள். இதுதான் எமது ஊடகவியளாளர் தகுதி(யேணலசுகளின் தகுதி)  ஒரு இனத்தின் சர்வதே தகுதி பேராசிரிகள் சட்டத்தத்துறையினர் ஊடகவியலாளர்கள் மூலம் வெளிப்படுகிறது என்பது உண்மை.

முன்பு தமிழர்தரப்பு  இந்தியா என்ன இந்தியா.  அமெரிக்கா என்ன அமெரிக்கா. இவற்ரை விடவும் நாங்களே தலைமையே பெரிய வியுகங்களை வகுக்கிறது எமக்கே வெற்றி நாமே வென்று வருகிறோம் என்று தமிழ் அப்பாவித்தனத் தரப்பை மாயையில் வைத்திருந்தது. போல் தான் இன்று அரசும் இராணுவ அறிவாளிகளையே உலகஅரங்கில் பாவித்து நாறிவருகிறது. பேருக்கு பக்கத்தில் சில கல்வமான்களை சட்டவான்களை வைத்துக்கொள்கின்றது. ஆனால் இலங்கைக்கு எதிரானது அத்தனையும்  முன்பு புலிகளுக்கு எதிராக நார்த்தி வரப்பட்டது போல் இலங்கை தனிமைப்படுத்தப்படுகிறது. புலிகளை விட இலங்கை பலமான உலக இராணுவ பொருளாதார பிராந்திய வல்லரசுகளை  நேரடியாகவும் மறைமுகமாகவும் தமது பக்கம் உதவிக்கு இழுத்துவைத்திருக்கிறது. இதற்கு உபகாரமாக தமிழர்களின் நிலங்கள் வளங்கள்  பயன்படுதப்படுகிறது.

இந்தியா இப்போது நடித்தாலும் இறுதி விவாதத்தில் இலங்கையைக் காப்பாற்றும் நடவடிக்கையை  எடுத்து இலங்கையை தனது கைக்குள் போடும் இதற்கு சீனா .பாக்கிசுதான்  உறவை அகற்றவேண்டும் என்ற மறைமுக அழுத்தத்தை இலங்கைக்கு கொடுக்கலாம். இந்தஇழுபறியில்தான் முடிவு இருக்கிறது.

தமிழர்தரப்பு சரியான நேரத்தில் சரியான சிலவற்றை மட்டும் செய்து கொண்டு பிழையான பலவற்றை செய்து வருவது தெரிகிறது. சம்மந்தர்  சுமத்திரன் இந்தவேளையில் சர்வதேச அறிமுகம் பெற்ற  சங்கரியை ஓரங்கட்ட நடவடிக்கை எடுப்பதும் சிங்களத்தரப்பு நடவடிக்கைகளுக்கு  ஒப்பானது. தமிழர்தரப்பு சங்கரி அவர்களைப் பயன்படுத்தவேண்டும்.  எதிர்த்தரப்பே பயன் படுத்திய£து என்றால் நாம் பயன்படுத்தக்கூடாதா?.

கனடாவில் நடைபயணம் நன்னுநடைபெற்றது போல் பொங்குதமிழ் நடக்குமா யெனிவாவில் தவறான அணுகுமுறையாக நடந்திருக்கிறது. சிலருக்கு விருத்தி பலருக்கு உள்ளுக்குள் அதிதிருத்தி.

மீள் குடியேற்றப்பட்ட மக்களுக்கு நட்டஈடு கொடுக்கப்படவில்லை  முள்ளிவாய்க்காலில் எடுத்தசொத்துகள் வாகனங்கள் போன்ற உடமைகள் பிரதேசசபைகளிடம் ஒப்படைக்கப்படவேண்டும் என்ற  கோரிக்கை எழுப்பப்படவேண்டும். அவசரமாகப் பதியப்பட்டது. தவறுகள் பின்னர் திருத்தப்படும்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.