குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக ஒப்பமிட இந்தியா மறுப்பு யே...யே

22.09.2011-திருவள்ளுவராண்டு.2042-இப்போ புரிகிறதா யாழ் அரசஅதிபர் ஏன் பிலிப்பைன்சு சென்றார் என்று-ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக்கு ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் அனுப்பி வைத்த நிபுணர்குழுவின் அறிக்கையை குறைந்தபட்சமாக ஒரு தகவல் ஆவணமாகக் கூட எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கோரும் கடிதம் ஒன்றில் சிறிலங்கா சில நாடுகளிடம் இருந்த கையொப்பங்களைத் திரட்டியுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்தக் கடிதம் ஐ.நா மனிதஉரமைகள் பேரவையின் தற்போதைய தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஐ.நாவின் எந்தவொரு சபையினதும் முறைப்படியான அங்கீகாரத்தைப் பெறாத நிபுணர் குழுவின் அறிக்கையை, குறைந்தபட்சம் ஒரு தகவல் ஆவணமாகக் கூட ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று இந்தக் கடித்ததில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறிலங்காவுக்கு ஆதரவாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தில் சீனா, ரஸ்யா, பாகிஸ்தான், மலேசியா, பிலிப்பைன்ஸ், அல்ஜீரியா, பங்களாதேஸ், மாலைதீவு, கியூபா ஆகிய ஒன்பது நாடுகள் மட்டுமே ஒப்பமிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.  இப்போ புரிகிறதா யாழ் அரசஅதிபர் ஏன் பிலிப்பைன்சு சென்றார் என்று

எனினும் இந்தியா உள்ளிட்ட முக்கியமான நாடுகளிடம் இருந்து இந்தக் கடிதத்தில் ஒப்பம் பெறுவதற்கு சிறிலங்கா மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக இந்தியா, இந்த விடயத்தில் முன்கூட்டியே எதுவும் செய்ய முடியாது என்றும், அது பற்றிய விவாதம் ஒன்று வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டதாகவும் கொழும்பு இராயதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.