குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 9 ம் திகதி வியாழக் கிழமை .

பலசுதீன தனிநாட்டுக்கு கோரிக்கைக்கு எதிராக வீட்டோ அதிகாரம் பயன்படுத்தப்படும் - அமெரிக்கா

 22 .9. 2011  அமெரிக்காவின் எச்சரிக்கை களையும் மீறி பலசு(ஸ்)தீனம் ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில் தனிநாட்டு பிரகடனத்தை செய்யத் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் தனிநாட்டுக் கோரிக்கையை பலசு(ஸ்)தீனம் முன்வைத்தால் அதற்கு எதிராக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த நேரிடும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
பலசு(ஸ்)தீன சனாதிபதி முகமட் அப்பாசிற்கும், அமெரிக்க சனாதிபதி பரக் ஒபாமாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
 
எனினும், அமெரிக்காவின் எச்சரிக்கைகளையும் மீறி பலஸ்தீனம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் தனிநாட்டு பிரகடனத்தை செய்யத் திட்டமிட்டுள்ளது.
 
பலசு(ஸ்)தீனம் தனிநாடாக அங்கீகரிக்கப்படுவதற்கான சரியான வழிமுறை பேச்சுவார்த்தைகளின் மூலமான இணக்கப்பாடே என அமெரிக்க சனாதிபதி பரக் ஒபாமா, ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்புரிமை வழங்குமாறு பலஸ்தீனம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளது.
 
இந்தக் கோரிக்கையை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் ஏற்றுக்கொண்டால், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புப் பேரவையில் வாக்கெடுப்பு நடத்தப்படும்.
 
 
இதேவேளை, பலஸ்தீனத்தின் சுதந்திரப் பிரகடனத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் மேற்குக் கரைப் பகுதியில் ஆயிரக் கணக்கான மக்கள் ஊர்வலம் நடத்தியுள்ளனர்.
 
இதேவேளை, இஸ்ரேலுக்கு அமெரிக்க வழங்கி வரும் ஆதரவு பாரட்டுக்குரியது என அந்நாட்டு தலைவர் நெடன்யாகு தெரிவித்துள்hளர்.

7வது கிளின்டன் சர்வதேச முனைப்புகள் மாநாட்டில் சந்திரிக்கா:-
21.9.2011  அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறும் 7வது கிளின்டன் சர்வதேச முனைப்புகள் மாநாட்டில் இலங்கையின் முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரணதுங்கவும் கலந்துக்கொண்டுள்ளார்.
 
இம்முறை மாநாட்;டில், தற்போது உலகம் எதிர்நோக்கி வரும், பொருளாதர நெருக்கடி, பொருளாதார விடயங்கள், கல்வி, சுற்றாடல், மின்சக்தி, உலக சுகாதாரம் உள்ளிட்ட விடயங்கள்  குறித்து, கலந்துரையாடப்பட உள்ளன.
 
இந்த மாநாடு ஷெரட்டன் நியூயோர்க் விடுதியில் 20 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.
 
இலங்கையின் முன்னாள் சனாதிபதி, இந்த மாநாட்டில் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் கலந்துக்கொண்டு வருவதுடன் அந்த மாநாட்டின் வறுமை ஒழிப்பு குழுவின் ஆலோசனை குழுவின் உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.