குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 2 ம் திகதி வியாழக் கிழமை .

அரசின் போக்கில் இப்போது மாற்றம் தெரிகிறது சுமந்திரன்:- கருணாநி அவர்களின் அறிவிப்பு போன்ற அறிவிப்பு

 22 .09.2011  சர்வதேச அழுத்தம் மற்றும் தமிழ் மக்கள் ஓரணியில் திரண்டிருப்பதன் காரணமாக, தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் அரசின் போக்கில் இப்போது மாற்றம் தெரிவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது. பேசிப் பேசிக் காலத்தை இழுத்தடிக்க முடியாது; ஆக்கபூர்வமாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற நிலைக்கு அரசு வந்துள்ளது. அதற்காக இனிமேல் காலத்தை அரசு இழுத்தடிக்காது என கூறபோதில்லை எனவும் ஒரு தீர்வைக் வழங்குவதற்கு அரசு இன்னும் மனமில்லாமலேயே இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. அதற்கான தீவிர பிரசாரத்தில் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. கல்முனை 2ஆம் பிரிவில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியபோதே நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
 
தமிழர்களின் பிரச்சினை முடிந்துவிட்டது; இனிமேல் இனப்பிரச்சினை என ஒன்று இந்த நாட்டில் இல்லை என உலகுக்குச் சொல்லவே அரசு விரும்புகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசு அதற்கு முயன்றபோதும், அரசால் அது முடியவில்லை. முன்னர் இருந்த நிலையைவிட அரசு இன்று மிகவும் இக்கட்டான நிலைக்குள் சிக்கிக் கொண்டுள்ளது.
 
ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கூட்டத் தொடரில் பல அமைச்சர்களை அனுப்பி, இந்த நாட்டில் தமிழர்களுக்குப் பிரச்சினை ஏதுமில்லை என கூறுவதற்கு அரசு முயன்றது. ஐ.நா. கூட்டத் தொடர் ஆரம்பித்த முதல் நாளிளேயே, தமிழர்கள் இந்த நாட்டில் சம மதிப்புப் பெற்ற குடிமக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என தெரிவித்திருந்தார் இலங்கைக் குழுவுக்குத் தலைமை தாங்கிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க. இதை அறிந்ததும் ஒரே இரவில் உண்மையை விளக்கி சர்வதேச சமூகத்துக்கு அறிக்கை ஒன்றைவிடுத்தோம்.
 
அமைச்சர் சொன்னவை அனைத்தும் பொய்யானவை, சர்வதேச சமூகத்தை ஏமாற்றும் கருத்துக்கள் என்பதைப் பகிரங்கப்படுத்தினோம். இதனால் அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. 11ஆம் சுற்றுப் பேச்சின் போது அவர்கள் அது பற்றி முறைப்பட்டார்கள். அந்த அறிக்கையால் தமக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர்கள் ஏன் அப்படிச் செய்தீர்கள் எனவும் கேட்டார்கள்.
 
இதற்குப் பதிலளித்த எமது தலைவர் சம்பந்தன்,அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததில் ஒரு விடயமாவது தவறானது என சுட்டிக்காட்ட முடியுமா? என அவர்களிடம் முகத்துக்குநேரே கேட்டார். அதற்கு அவர்கள் மௌனம் சாதித்தனர். நீங்கள் பொய்ப் பிரசாரம் செய்யும்போது, அது எமது மக்களையும் அவர்களின் உரிமைகளையும் பாதிக்கும்போது நாம் மௌனமாக இருப்போம் என நினைக்கவேண்டாம். இந்த முறை அறிக்கை மட்டுமே விடுத்தோம். அடுத்த தடவை நேரடியாக ஜெனீவா வந்து சர்வதேச சமூகத்துக்கு உண்மையைப் புரிய வைப்போம் என சம்பந்தன் தெரிவித்தார்.
 
உடனே அவர்கள்.சரி! சரி! அதை ஒரு பக்கம் வைத்துவிட்டு பேச்சைத் தொடர்வோம் என கூறி நழுவிவிட்டார்கள். அரசுடன் கூட்டமைப்பு மீண்டும் ஆரம்பித்துள்ள பேச்சுத் தொடர்பில் பலருக்கு சந்தேகங்கள், கேள்விகள் இருக்கின்றன. முன்பு நடந்த பேச்சுக்களில் ஒன்றுமே நடக்காத நிலையில், அரசு உரிய பதிலைத் தராத நிலையில்தான் நாம் அரசுடனான பேச்சை இடைநிறுத்தினோம்.
 
அதைத் தொடர்ந்து அரசு மீது சர்வதேச சமூகம் கடும் அழுத்தங்களைக் கொடுத்ததாலும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தாம் ஆக்கபூர்வமாகச் செயற்படுகிறோம் என சர்வதேச சமூகத்துக்கு காட்டவேண்டிய நிர்பந்தத்தாலும் மீண்டும் பேச்சைத் தொடங்க அரசு சம்மதித்தது. எப்படியான சூழலில் நாங்கள் திரும்பவும் பேச முடியும் என செல்லியிருந்தோமோ அந்தச் சூழ்நிலை உருவாக்கப்பட்டதன் காரணமாகத்தான் நாம் திரும்பவும் பேச்சுக்குப் போனோம்.
 
அதற்காக எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன என அர்த்தப்படுத்த முடியாது. நாம் எழுத்தில் கேட்டதை அவர்கள் கொடுத்துவிட்டார்களா என கேட்கிறார்கள்? அப்படியல்ல் முன்னர் பேச்சுக்களால் எந்தப் பயனும் இருக்கவில்லை. இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாங்கள் முன்வைக்கும் கேள்விகளுக்கு அரசின் நிலைப்பாடு இதுதான் எனபொறுப்புடன் பதில் சொல்கிறார்கள்.
 
காலத்தைக் கடத்துவதற்காக எங்களுடனான பேச்சை உலகுக்குக் காட்டலாம் என இனியும் அரசு நினைக்க முடியாது. அப்படி நடந்தால் நாம் பேச்சிலிருந்து விலகிவிடுவோம் என்பது அரசுக்கு நன்கு தெரியும். எனவே மீண்டும் ஆரம்பித்துள்ள பேச்சு ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும் என்பது அரசுக்கு நன்கு தெரியும்.
 
ஆயுத பலம் இருந்தபோது மட்டுமே தமிழர்களுடன் தாங்கள் பேச வேண்டும், கேட்டதைக் கொடுக்க வேண்டும் என நினைத்தவர்கள் இப்போது நிலைமை அப்படியானதல்ல என்பதைப் புரிந்து வைத்துள்ளனர். கூட்டமைப்பின் பின்னால் தமிழ் மக்கள் திரண்டிருப்பதன் காரணத்தால், ஒட்டுமொத்த தமிழர்களின் ஜனநாயக பலம் கூடியிருப்பதால் இனியும் பேசிப் பேசிக் காலத்தைக் கடத்த முடியாது என்பதை அவர்கள் புரிந்து வைத்துள்ளனர்.
 
அதற்காக இனிமேல் காலத்தை அரசு இழுத்தடிக்க மாட்டாது என நான் கூறமாட்டேன். இப்போதும் ஒரு தீர்வைத் தமிழர்களுக்குக் கொடுக்க அரசுக்கு மனமில்லாமல்தான் இருக்கிறது. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஏகோபித்த ஆதரவை அளித்ததன் காரணமாகத்தான் தமிழ்த் தேசியக் கூடமைப்புடன் அரசு பேசவேண்டும் என உலக நாடுகள் இன்று அரசை நிர்ப்பந்திக்கின்றன. அதனை கல்முனை மக்கள் இன்னும் பலப்படுத்த வேண்டும்.
 
சர்வதேச அரங்கில் அரசுக்கு எதிராக எழும்பியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் என்பவற்றால் ஏற்படும் நிர்ப்பந்தங்களில் இருந்து தப்புவதற்கு, இவற்றுக்கெல்லாம் காரணமான அடிப்படைப் பிரச்சினையைத் தீர்த்து வையுங்கள் என்று சர்வதேச சமூகம் இலங்கை அரசை வலியுறுத்துகின்றது. அதுவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேசித்தான் பிரச்சினையைத் தீர்க்கும்படியும் சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்கிறது. 63 வருடகாலமாக நாம் செய்து கொண்டிருக்கும் போராட்டத்தின் உச்ச கட்டமாக எமது மக்களின் பலத்தால் எமது மக்களின் பிரதிநிதிகளாக இன்றைய பேச்சில் நாம் பங்கேற்று வருகின்றோம் என சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
 
நாவாந்துறையில் இடம்பெற்ற இராணுவ அட்டூழியங்களை மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத் துருசிங்க ஏற்றுக்கொண்டுள்ளார்:-
 
 நாவாந்துறையில் இடம்பெற்ற இராணுவ அட்டூழியங்களை ஏற்றுக் கொண்ட யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத் துருசிங்க, இப்படியான துர்ச்சம்பவங்கள் இடம்பெற அனுமதிக்கமாட்டேன் என உறுதியளித்துள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் என். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
 
கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாவாந்துறை புனித நீக்கிலஸ் சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். நாவாந்துறையில் இடம்பெற்ற சம்பவம் முற்று முழுதாக தனிமனித மீறல் என்பதை மனிதாபி மானம் உள்ள எவரும் மறுக்கமுடியாது.
 
நாவாந்துறை சம்பவத்தையும் இராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களையும் இன்று ஜெனிவா மாநாட்டிலும் எதிரொலிக்கச் செய்துள்ளோம். 
 
இலங்கையில் எதுவுமே நடக்கவில்லை. சிங்களவர்களும் தமிழர்களும் ஒற்றுமையாகவே வாழ்கின்றனர், தமிழர்களுக்கு ஏதும் பிரச்சினைகளே இல்லை, அரசு தமிழ் மக்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறது என்ற தொனியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனிவா மாநாட்டில் வாய் கூசாமல் பொய் கூறி உள்ளார்.
 
அந்த மாநாட்டில் இலங்கை அரசுக்கும், இராணுவத்துக்கும் வக்காலத்து வாங்கும் வகையிலேயே அவர் பேசியுள்ளார். வாய் கூசாமல் இவர்கள் பொய் கூறி சர்வதேச சமூகத்தை ஏமாற்ற முயலும் போது நாம் வாய் மூடி மௌனமாக இருக்க முடியாது.
 
இதனால் நாவாந்துறையில் இராணுவம் மேற் கொண்ட காட்டுமிராண்டித் தனமான செயல்கள் உட்பட இங்கு அன்றாடம் இடம்பெறும் இராணுவ அடாவடித் தனங்களையும், அவற்குக்கு அரசின் அனுசரணையையும் படம் பிடித்துக் காட்டுவது போல் அறிக்கை ஒன்றை ஜெனிவாவில் வெளியிட்டோம். இது அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பொய்ப் பிரசாரத்தை தவிடுபொடியாக்கி விட்டது.
 
சுழிபுரத்தில் இராணுவத்தினர் இருவருக்கும் பொது மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்களை ஓரிடத்தில் திரட்டித் தாக்குவதற்குத் தயாரானார்கள் இராணுவத்தினர். இதனை அந்தப் பிரதேச மக்கள் எனக்குத் தொலைபேசி மூலம் அறிவித்தனர். உடனடியாக வடபிராந்திய கட்டளைத் தளபதி ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்கவிடம் தொடர்பு கொண்டு நிலைமையை விளக்கினேன். அதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியமாக இருந்தது.
 
நாவாந்துறையில் இடம்பெற்ற துர்சம்பவங்கள் இனிமேல் எங்கும் நடக்க விடமாட்டேன். நாவாந்துறையில் தப்பு நடந்துவிட்டது என கூறினார். அத்துடன் சுழிபுரம் பிரதேசத்தில் அப்படி நடக்காமல் பார்த்துக் கொண்டார். தடுமாற்றமான நிலையிலும் கூட நாவாந்துறையில் இராணுவத்தினர் தப்புச் செய்து விட்டனர் என்பதைத் தளபதியே ஒப்புக் கொண்டுள்ளதாக சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.