குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, வைகாசி(விடை) 3 ம் திகதி வெள்ளிக் கிழமை .

அய்.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது?

22 .09. 2011  சுவிற்சர்லாந்து தலைநகர் பேர்ண் சர்வதேசநகர் யெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 18ஆவது கூட்டத்தொடரில், இலங்கைக்கு எதிரான பிரேரணை ஒன்று இன்று சமர்ப்பிக்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பில் பொறுப்புக்கூறும் வகையிலான சர்வதேச விசாரணை ஒன்றைக் கோரும் தீர்மானமே இன்று வியாழக்கிழமை சமர்ப்பிக்கப்பட இருப்பதாக ஐ.நா. மனித உரிமைகள் சபை நேற்று மாலை தெரிவித்தது.
 
18ஆவது கூட்டத்தொடருக்கான பிரேரணைகள் உள்ளூர் நேரப்படி இன்று நண்பகல் ஒரு மணிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும் என்ற காலக்கெடு அறிவிக்கப்பட்டிருக்கிறது.
 
இலங்கைக்கு எதிரான பிரேரணையை இன்று காலை கனடா சபையில் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப்பட்டது. பிரேரணைக்கு தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்ப்பதாக மனித உரிமைகள் அமைப்புக்கள் தெரிவித்தன.
 
 தனக்கு எதிரான பிரேரணை இன்று சபையில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட இலங்கை அரச பிரதிநிதிகள்  அதனைத் தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். கனடாவால் இன்று பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டால் அது அடுத்த வாரம் விவாதத்திற்கு வரலாம் எனத் தெரியவருகிறது. 18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
 
இந்த பிரேரணை விவாதத்திற்கு வரும் பட்சத்தில் இந்தியா விவாதத்திலோ அல்லது வாக்கெடுப்பிலோ கலந்துகொள்ளாது ஒதுங்கியிருக்கலாம் என யெனிவாவில் உள்ள, மனித உரிமை அமைப்புக்களின் பிரதிநிதிகள் கூறுகின்றனர்.
 
சீனா இலங்கையைக் காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் எனவும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். எனினும் ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளின் எண்ணிக்கையே சபையில் அதிகம் இருப்பதால் அவற்றின் ஆதரவு எந்தப் பக்கம் இருக்கிறதோ அதன் அடிப்படையிலேயே பிரேரணை வெற்றிபெறுவது தங்கியுள்ளது எனவும் அவை தெரிவித்துள்ளன.
 
மகிந்த ராயபட்ச பல நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை
22 .9. 2011  இரு தரப்பு உறவுகள், நாட்டின் தற்போதைய நிலைமை, ..ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் பயணம் செய்துள்ள சனாதிபதி மகிந்த ராசபட்ச பல நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
இரு தரப்பு உறவுகள், நாட்டின் தற்போதைய நிலைமை, போர் இடம்பெற்ற வலயங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்ட முனைப்புக்கள், நிலக்கண்ணி வெடி அகற்றுதல், புனர்வாழ்வு, மீள் குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் உலகத் தலைவர்களுடன் சனதிபதி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவிக்கப்படுகிறது.
 
தென் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்க துணை ராயாங்கச் செயலாளர் ரொபர்ட் ஒ பிளக்கை சனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
சுலோவேனியா, கிரிகிஸ்தான் மற்றும் நையீரியா ஆகிய நாடுகளின் தலைவர்களுடனும் சனாதிபதி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
இலங்கையில் தரமான தேயிலை உற்பத்தி செய்யப்படுவதாக கிரிகிஸ்தான் சனாதிபதி ரோஸா ஒடுயுன்பயேவா தெரிவித்துள்ளார். இலங்கை தேயிலை உற்பத்தி தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கு விசேட குழுவொன்றை அனுப்பி வைக்குமாறு சனாதிபதி மகிந்த ராயபட்ச, கிரிகிசுதான் சனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
அமைதியை ஏற்படுத்துவது தொடர்பில் உலக நாடுகளுக்கு இலங்கை முன்னுதாரணமாக திகழ்கின்றது என சுலோவேனிய சனாதிபதி டொக்டர் டனிலோ துர்க் தெரிவித்துள்ளார்.
 
பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டு குறுகிய காலத்தில் இலங்கை அடைந்துள்ள அபிவிருத்தி மிகவும் வரவேற்கத்தக்கது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இரு தரப்பு பொருளாதார உறவுகள் தொடர்பில் நையீரியசனாதிபதி குட்லக் யொனதனுடன், சனாதிபதி மகிந்த ராயபட்ச பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
 
அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கட்டும் - அய்.தே.கட்சி என்னசெய்யப் போகிறது தமிழர்களுக்கு தாரவாக்கிறார்கள் என்பார்கள்.
22 .9. 2011  பின்னர் எவர் எங்கு வேண்டுமானாலும் வாழலாம் என்ற பல்லவியைப் பாடட்டும் - யெயலத்:-

 அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கிவிட்டு எவர் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் என்ற பல்லவியைப் பாடலாம் - ஜெயலத்:-

 அரசு இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை வழங்கிவிட்டு எவர் வேண்டுமானாலும் எங்கும் வாழலாம் என்ற பல்லவியைப் பாடினால் அது பொருத்தமாக இருக்கும். மாறாக, சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி  பலவந்தமாகக் சிங்கள மக்களை குடியேற்றுவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
 
 
தமிழர் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை முன்னெடுப்பதாகவிருந்தால், முதலில் தமிழ் மக்களின் கருத்துகளை அரசு கேட்டறியவேண்டும். அதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கருத்துகளைப் பரிமாறிக்கொள்ள வேண்டும். மாறாக சமரசம் பேசிக்கொண்டே சர்வாதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிக்க முனைந்தால், பேச்சுகள் மீண்டும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது எனவும் ஜயலத் ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
அதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள குடியேற்றம் மட்டுமல்ல, சிங்கள பிரதேச செயலகப் பிரிவுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அரசு எம்முடன் பேச்சுகளை முன்னெடுக்கும் அதேவேளை, சில நகர்வுகளையும் முன்னெடுத்துச் செல்வதானது அரசின் நேர்மையற்றத் தன்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
 
 
சிங்களக் குடியேற்றம், நில அபகரிப்பு ஆகியவற்றை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆராயும். தமிழர் தாயகப் பிரதேசங்களில் சிங்களக் குடியேற்றங்களை அனுமதிக்க முடியாது. அரசு திட்டமிட்டு இன ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.