குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

அமெரிக்காவின் மூன்றாம் தரப்பு மத்தியசுதத்துடனேயே பேச்சு நடக்க வேண்டும்- சிறிதரன்!

22.09.2011.திருவள்ளுவராண்டு.2042-வன்னியில் எடுத்த 2கொள்கலன் தங்கத்தை ஏப்பம் விட்டவர் யார்?தாங்கமுடியவில்லை – விடுதலைப்புலிகளை விட சர்வதேசமே நெருக்கடியை தருகிறது- பசில் ஒப்பாரி! கிளிநொச்சிக்கு பயணம் செய்த அமெரிக்க தூதுவர் பற்றீசியா பியுட்டனிசு மீள்குடியேற்றப்பட்ட மக்களை நேரில் சந்தித்ததுடன் அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார்.  கிளிநொச்சி மாவட்ட அரச முகவர், மற்றும் திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், இராணுவத்தின் வன்னிப்பிராந்திய கட்டளைத்தளபதி,  ஆகியோரையும் சந்தித்தார் வன்னியில் இராணுவ கெடுபிடி அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்திருக்கும் நிலையில் அவர் பொதுமக்களையும் சந்தித்து அங்குள்ள நிலைமைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து இன்று பிற்பகல் கிளிநொச்சி அறிவகம் மண்டபத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனையும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறிலங்கா படைகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள குடியேற்றம் பற்றியும் வெலிஓயா என்ற பெயரில் முல்லைத்தீவு மாவட்டத்தில் புதிய உதவி அரசாங்க அதிபர் பிரிவு ஏற்படுத்தப்பட்டிருப்பது பற்றியும் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் பற்றீசியாவிற்கு தெரிவித்தார்.
சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் வடக்கு கிழக்கு இணைந்த மாகாணத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்கா போன்ற மூன்றாம் தரப்பு மத்தியஸ்தத்துடனேயே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கும் சிறிலங்கா தரப்பிற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் என சிறிதரன் தெரிவித்தார்.

தாங்கமுடியவில்லை – விடுதலைப்புலிகளை விட சர்வதேசமே நெருக்கடியை தருகிறது- பசில் ஒப்பாரி!

போர் நடைபெற்ற போது விடுதலைப்புலிகள் கொடுத்த நெருக்கடியை விட போர் முடிந்த பின் சர்வதேச நாடுகள் கொடுக்கும் நெருக்கடி அதிகமாக இருப்பதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராசபக்ச கவலை தெரிவித்துள்ளார்.
முப்பது வருட கால யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டு மக்களுக்குச் சுதந்திரமாக வாழும் உரிமையை பெற்றுக் கொடுத்ததன் காரணமாகவே சர்வதேச நாடுகள் சில முன்வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு இலங்கை பதிலளிக்க வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையானது விடுதலைப்புலிகளின் செயற்பாடுகளை காட்டிலும் வேதனை அளிக்கும் விடயமாக மாறியுள்ளதாகவும் கூறிய அவர், அரசாங்கமும் பாதுகாப்பு தரப்பினரும் இந்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னியில் எடுத்த 2கொள்கலன் தங்கத்தை ஏப்பம் விட்டவர் யார்?

தீவிரவாதிகள் தொடர்பிலான விசாரணைகளின் போது சந்தேகத்திற்குரியவர்களின் நிதி, வங்கிக் கணக்கு, மற்றும் உடைமைகளை நீதிமன்ற அனுமதி பெறாமலேயே முடக்கும் அதிகாரமிக்க சட்டத் திருத்தம் ஒன்று இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளுக்கு நிதி வழங்குவதை கட்டுப்படுத்தும் ஏற்பாடும் இந்தத் திருத்தச் சட்டத்தில் உள்ளடங்குகிறது. வெளிநாட்டில் இருந்து மேற்கொள்ளப்படும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக உள்நாட்டில் சொத்துச் சேகரிக்கப்படும் நடவடிக்கையைத் தடுக்கவும்  இந்தச் சட்டத்தின் ஊடாக அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டத்திட்டங்களுக்கு அமைய இவ்வாறான சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே நிதி மற்றும் சொத்துகளைத் தடைசெய்ய முடியும். இப்புதிய சட்டத்தின் மூலம் நீதிமன்ற அனுமதியை பெறாமலே பாதுகாப்பு அமைச்சு சொத்துக்களையும் வங்கிக்கணக்குகளையும் முடக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இச்சட்ட மூல விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க இறுதிக்கட்ட போரின்போது, அரச படைகளினால் மீட்கப்பட்ட இரண்டு கொள்கலன் தங்கத்திற்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார்.
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இரண்டு கொள்கலன் தங்கம் மீட்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்திருந்தாலும் அவற்றுக்கு என்ன நடந்துள்ளது என்பது தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவலும் இல்லை என்றும் இது தொடர்பில் அரசு உரிய பதில் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வன்னியில் மீட்கப்பட்ட இரண்டு கொள்கலன் தங்கமும் இதுவரை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் திறைசேரி கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேபோன்று கோடிக்கணக்கான பணமும் மீட்கப்பட்ட போதும் அவை அரசாங்க திறைசேரி கணக்கில் வைப்பிலிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.