குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

இந்தியா, அமெரிக்கா போன்ற சர்வதேச அழுத்தம்மீண்டும் பேச்சுவார்த்தை மாவை இருபகுதிக்கும் தீர்வுதிணிப்பா?

 21.09.2011-திருவள்ளுவராண்டு.2042-அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைக்காணுமாறு இந்திய, அமெரிக்கா, போன்ற சர்வதேச அழுத்தங்கள் காரணமாகவே மீண்டும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழரசுக்கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா பாண்டிருப்பில் தெரிவித்தார்.   தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் தமிழ் மக்களுக்கான இனப் பிரச்சினைத் தீர்பு பற்றிப் பேச வேண்டும் என்ற அழுத்தங்களும் அரசுக்கு விடுக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.
கல்முனை மாநகரசபை தேர்தலில் தமிழரசுக்கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசாரக்கூட்டத்திலேயே அவர் இதனைத்தெரிவித்தார்.
அரசுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள பேச்சுக்களின் மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வுகிடைக்கும் என்று நம்புகின்றோம்.  தவறினால் ஜனநாயக ரீதியாக எம் மக்களை அணி திரட்டி அடுத்த கட்ட நகர்வை மேற்கொள்ளத் தயங்கோம் என்றும் மாவை சேனாதிராசா கூறினார்.
சிறிலங்கா அரசு மீது போர்க்குற்றச்சாட்டுக்கள் இருந்த போதிலும் அதனை பேச்சுவார்த்தையில் சம்பந்தப்படுத்தாமல் பேச்சுவார்த்தை என்ற சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும் என்றே விரும்புகிறோம்.
எமது அடிப்படைக் கோட்பாடுகளிலோ, கொள்கைகளிலோ எந்தவித விட்டுக்கொடுப்புகளும் இல்லாத நிலையில் எமக்கு அரசியல் தீர்வை நிறைவு செய்வதற்கு நாம் போராடிக் கொண்டிருக்கிறோம். ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசு கூட்டமைப்பு பேச்சு மூலம் இந்த வருட இறுதிக்குள் நல்ல தீர்வு கிடைக்கும் என நாம் நம்புகின்றோம் என மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
அவ்வாறு இந்த ஆண்டு முடிவதற்குள் அரசின் பதில்சரியாகக் கிடைக்காவிட்டால் நாம் சர்வதேச அரங்கிலும், எமதுமக்கள் மத்தியிலும் கருத்துக்களை முன்வைத்து எம் மக்களை ஜனநாயக ரீதியாக அணி திரட்டி அடுத்த கட்ட நடவடிக்கையில் இயங்கத் தயங்கமாட்டோம். இவ்வாறான சந்தர்ப்பத்தில் நம் இளைஞர் சமுதாயம் மிகவும் கட்டுப்பாட்டுடன் எம்முடன் அணி திரள வேண்டும் என கோருகின்றோம் என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.