குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 28 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஆனந்தசங்கரிக்கு ஓர் அன்பு மடல்

21.09.2011-அன்புமிகு ஆனந்தசங்கரி ஐயாவுக்கு வணக்கம். தங்களுக்கு கடிதம் எழுதும் நீண்ட கால நினைப்பு இனியும் தாமதிப்பது நல்லதல்ல என்பதால் இக்கடிதத்தை அவசரமாக எழுதுகின்றோம். கடிதத்தின் அவசரம் தமிழினத்தின் சமகால நிலைமையை ஒட்டியதே. நீங்கள் இன்று நாடாளுமன்று உறுப்பினராக இருந்திருக்க வேண்டும். என்ன செய்வது! அது நடக்காமல் போய்விட்டது. அதற்குக் காரணம் உங்கள் கட்சியோடு ஒன்றாக இருந்தவர்கள் உங்களுக்கு செய்த சதி என்று நம்பப்படுகின்றது.

இதற்கு மேலாக நீங்கள் யதார்த்தத்தோடு செயற்பட்டீர்கள் என்பதும் உங்களால் எழுதப் பட்ட கடிதங்கள் நியாயமானவை என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். தமிழ் அரசியல் தலைவர்களில் துணிச்சலாகப் பேசக்கூடிய ஆற்றலும் ஆளுமையும் உங்களிடம் அதிகம் உண்டென்பதில் மாற்றுக்கருத்திற் கிடமில்லை. இருந்தும் விடுதலைப்புலிகளை குறைகூறுவதில் நீங்கள் அதீதமாக செயற்பட்டமையை தமிழ்மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதைக் கூறித்தான்ஆகவேண்டும். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை நீங்கள் கண்டித்தீர்களாயினும் மறைமுகமாக அவர்களுக்கு எதிராக எந்த கெடுதியும் செய்யவில்லை என்ற உண்மை உணரப்படுகின்றது. அதேநேரம் விடுதலைப்புலிகளை மறைமுகமாக வஞ்சித்தவர்கள் வெளிப்படையாக ஆதரித்தனர். அரசியலில் இதுவும் ஒரு தந்திரம் போலும். அதனால் அவர்கள் இப்போதும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர். இவற்றின் விளைவுதான் தமிழ் மக்களின் இன்றைய அவலம்.

பரவாயில்லை. நடந்தவை - கடந்தவை - முடிந்தவையாக இருக்கட்டும். இப்போது தமிழ் மக்களுக்கு அவசரமான தேவை எங்கள் அரசியல் தலைமைகளின் போக்கு பற்றிய விளக்கமாகும். எங்கள் அரசியல் தலைமைகள், சரியான பாதையில் பயணிக்கின்றனவா என்பதை நீங்கள் அறியாமல் - உணராமல் இருக்கமுடியாது. எனவே அரசியல் கட்சி என்ற எல்லை கடந்து தமிழ் அரசியல் தலைமைகளின் நிலைப்பாட்டை விளக்குகின்ற பணியை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

தமிழ்மக்கள் சொல்லொணாத் துன்பத்தை அனுபவிக்கும் இவ்வேளையில், எங்களை ஏமாற்ற ‘ஓநாய்கள்’ காத்திருக்கும் இச்சந்தர்ப்பத்தில், எங்கள் தமிழ் மக்களை காப்பாற்ற வியூகம் அமைப்போம். அதில் உங்களைப் போன்றவர்களின் அரசியல் அனுபவப் பகிர்வு மிகவும் அவசியம். அதனை நீங்கள் செய்வீர்கள் என்று நம்புகின்றோம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.