குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 29 ம் திகதி திங்கட் கிழமை .

முல்லைத்தீவு, முகத்துவாரம் பகுதியில் நேற்று 34 சிங்களக் குடும்பங்கள் தற்காலிகமாகதங்கவைப்பு

21 -09. 2011 இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை OECD நிராகரித்துள்ளது  முல்லைத்தீவு, முகத்துவாரம் பகுதியில் நேற்று 34 சிங்களக் குடும்பங்கள் தற்காலிகமாகப் பதிவு செய்யப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் 45 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கொக்கிளாய்ப் பகுதியில் புதிதாக குடியேற்றப்பட உள்ளனர் என அறிவிக்கப்பட்டதன்படி மேற்படி குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
 
இதன்படி இதுவரையில் 67 சிங்களக் குடும்பங்கள் முகத்துவாரம் பகுதியில் பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட நிலையில் தற்காலிக பதிவில் தங்க வைக்கப்பட்டுள்ளன.இந்தக் குடும்பங்களுக்கு கருநாட்டுக் கேணிக்கும் கொக்கிளாய்க்கும் இடைப்பட்ட பகுதியில் புதிதாகக் காணிகள் வழங்கப்பட்டு விரைவில் குடியேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 
முகத்துவாரப் பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ள சிங்களக் குடும்பங்களுக்கென மருத்துவ நிலையம், தபால் நிலையம், சந்தை, குடிதண்ணீர் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.இதில் குடிதண்ணீர் கொக்கிளாய் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்ட நீர்த்தாங்கியிலிருந்து குழாய் மூலம் விநியோகிக்கப் படுகின்றது.
 
யுத்த காலத்துக்கு முன்னர் அதாவது 1983 இற்கு முன்னர் இந்த இடங்களில் 280 இற்கும் மேற்பட்ட சிங்களக் குடும்பங்கள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டு, இப்போது படிப்படியாக சிங்களக் குடும்பங்கள் தென்னிலங்கையிலிருந்து அழைத்து வரப்பட்டு சட்டவிரோதமாகக் குடியமர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இதேவேளை 1983 ஆம் ஆண்டிற்கு முன்னர் முகத்துவாரத்தில் 11 சிங்களக் குடும்பங்கள் நீர்கொழும்பில் இருந்து பருவகாலத் தொழிலுக்காக அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டதாகவும் இவர்களில் 26 பேருக்கு மட்டும் குறிப்பிட்ட பிரதேசத்தில் வாக்காளர் பதிவு இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 
 
இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கையை OECD நிராகரித்துள்ளது
21 .09. 2011  இலங்கை அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்திக்கான உலக அமைப்பு( OECD ) நிராகரித்துள்ளது.
 
பொருளாதார தரப்படுத்தலில் இலங்கைக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், இந்தக் கோரிக்கையை குறித்த அமைப்பு நிராகரித்துள்ளது.
 
உலகப் பொருளாதாரம் தொடர்பான தரப்படுத்தல்களை மேற்கொள்ளும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாக ஓ.ஈ.சீ.டி கருதப்படுகின்றது.
 
நாட்டின் பொருளாதார நிலைமை அபிவிருத்தி அடைந்துள்ளதாகவும் இந்த விடயங்களை கருத்திற் கொண்டு தரப்படுத்தல்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் கோரிக்கை விடுத்துள்ளார்.
 
ஓ.ஈ.சீ.டியின் இந்த நடவடிக்கை அதிருப்தி ஏற்படுத்துவதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
 
உலகின் ஏனைய முதனிலை தரப்படுத்தல் முகவர் நிறுவனங்கள் இலங்கை தொடர்பில் சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.
 
பொருளாதாரம் சார்பான சகல விடயங்களையும் கருத்திற் கொண்டு தரப்படுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாக ஓ.ஈ.சீ.டி தெரிவித்துள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.